யுவான் சுவாங்: சீனாவிலிருந்து காஞ்சிபுரம் வரை - 17 ஆண்டு பயணத்தில் கண்டடைந்தது என்ன?

யுவான் சுவாங் இந்தியாவுக்குன் பயணம் மேற்கொள்வதை அவர் உடனிருந்த யாருமே விரும்பவில்லை. திருடர்கள், எதிரி நாட்டவர், பிற மதத்தவர், கொள்ளையர்கள் என எல்லாரையும் சமாளித்தால் கூட விலங்குகள், இயற்கை பேரிடர்கள், மழை, வெயில் என பல இடர்களைக் கடக்க வேண்டும். பாலைவனம், காடுகள், ஆறுகளைக் கடந்து அவர் பயணித்தது ஏன்?
யுவான் சுவாங்: சீனாவிலிருந்து காஞ்சிபுரம் வரை - 17 ஆண்டு பயணத்தில் கண்டடைந்தது என்ன?
யுவான் சுவாங்: சீனாவிலிருந்து காஞ்சிபுரம் வரை - 17 ஆண்டு பயணத்தில் கண்டடைந்தது என்ன?Facebook (Retracing Bodhisattva Xuanzang)

யுவான் சுவாங் (XUAN ZANG). பயணங்களில் விருப்பமுள்ள எவரும் அறிந்திருக்க வேண்டிய ஆளுமை. இவர் ஒரு புத்த துறவி, கல்வியாளர், பல மொழிகளைத் தெரிந்துகொண்டு நூல்களைப் படிப்பவர். படித்த நூல்களை மொழிப்பெயர்ப்பும் செய்துள்ளார்.

602ம் ஆண்டு பிறந்த யுவான் சுவாங்குக்கு சிறுவயதில் இருந்தே புத்தர் என்றால் கொள்ளைப் பிரியம். இவரது குடும்பத்தினர் பல தலைமுறையாக நல்ல கல்வி அறிவு பெற்றவர்களாக இருந்தனர்.

தனது அப்பாவிடம் தொடக்க கல்வியைக் கற்ற போதே புத்தர் பற்றிய புத்தகங்களை ஆழமாக கற்றுள்ளார் யுவான் சுவாங். அப்போதே தனது ஒரு அண்ணனைப் போல புத்த துறவியாக மாற வேண்டும் என ஆசைக் கொண்டார்.

தனது பதின்ம வயதுக்கு முன்னராகவே புத்த மடாலயத்தில் சேர்ந்து தேர வாத பௌத்தம், மஹாயான பௌத்தம் என இரண்டு பௌத்த பிரிவுகளைவும் ஆழமாக கற்றார்.618ம் ஆண்டு சாங்சன் என்ற மடத்தில் இணைந்து புத்த மதத்தை முழுமையாக கற்றுத் தேர்ந்தார். தனது 20 வயதில் முழுமையான ஞானம் கொண்ட புத்த துறவியாக உருவெடுத்தார்.

சீனாவின் பல இடங்களுக்கு பயணம் செய்து புத்த நூலகளைத் தேடிப்படித்தார். பல மடங்களுக்கு சென்றுவந்தார். சீனாவில் புத்த மதம் குறித்து பல்வேறு முரண்பாடான தரவுகள் இருந்தன.

ஒவ்வொரு புத்தகத்திலும் புத்தர் ஒவ்வொரு மாதிரியாக சித்தரிக்கப்பட்டார். மக்களிடமும் பலதரப்பட்ட கருத்துகள் நிலவியது.

புத்த மதத்தில் இருந்த முரண்பாடுகளை விலக்கி, சீனாவில் புத்த மதம் செழிக்க யுவான் சுவாங் காரணமாக இருந்தார். புத்தர் குறித்து அறிந்துகொள்ள யுவான் சுவாங் புத்தரின் பிறப்பிடமான இந்தியாவுக்கே வர விரும்பினார்.

யுவான் சுவாங் இந்தியாவுக்குன் பயணம் மேற்கொள்வதை அவர் உடனிருந்த யாருமே விரும்பவில்லை. ஏனெனில் தனியாக பயணம் மேற்கொள்வது அந்த காலத்தில் ஆபத்து மிகுந்தது.

திருடர்கள், எதிரி நாட்டவர், பிற மதத்தவர், கொள்ளையர்கள் எல்லாரையும் சமாளித்தால் கூட காட்டு விலங்குகள், இயற்கைப் பேரிடர்கள், மழை, வெயில் என பல இடர்களைக் கடக்க வேண்டும்.

யுவான் சுவாங்குக்கு முன்னரே புத்த மதம் பற்றி கற்க இந்தியாவுக்கு வந்த ஒரு துறவி இருந்தார். அவர் பெயர் பாஹியான். பாஹியான் பற்றி ஆர்வமாக படித்து தெரிந்துகொண்டார் யுவான் சுவாங்.

626ம் ஆண்டில், இந்தியாவில் புத்தகங்களைக் கற்க வேண்டுமென்றால் சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என புரிந்துகொண்டு சமஸ்கிருதம் படித்தார்.

629ல் தனது சாகசம் நிறைந்த இந்தியப் பயணத்தைத் தொடங்கினார் யுவான் சுவாங்.

யுவான் சுவாங்: சீனாவிலிருந்து காஞ்சிபுரம் வரை - 17 ஆண்டு பயணத்தில் கண்டடைந்தது என்ன?
சீனா : சிட்டுக்குருவிகளை கொல்ல ஆணையிட்ட மாவோ, ஏன் தெரியுமா? - நடுங்க வைக்கும் வரலாறு

சீனாவில் இருந்து கோபி பாலைவனம், எரிதழல் மலைகள் (Flaming Mountaines), பிடல் கணவாய், பட்டுவழிச் சாலை, பாம்யான் மலைகள், சைபர் கணவாய் ஆகிய இடங்களைக் கடந்து காந்தார நாட்டுக்கு வந்து சேர்ந்தார்.

இதற்குள் பல ஊர்களை, பல மக்களைக் கண்டுவிட்டார் யுவான் சுவாங்.

கந்தார நாட்டின் அதினப்பூர் என்ற இடத்துக்கு வந்த போது யுவான் சுவாங் இந்தியாவுக்கு வந்துவிட்டதாக எண்ணியிருக்கிறார்.

பாம்யான் மலைகளில் இருக்கும் புத்தர் சிலை
பாம்யான் மலைகளில் இருக்கும் புத்தர் சிலை

அங்கிருந்து கைபர் கணவாய் வழியாக புருஷபூரா (பெஷாவார்) சென்று, செவட் மற்றும் புனர் பள்ளத்தாக்குகளைக் கடந்து சிந்து நதியை தாண்டி காஷ்மீரகத்துக்கு வந்து சேர்ந்தார்.

இந்த வழி முழுவதும் பல புத்த மடாலயங்களுக்கு சென்றுள்ளார். பல புத்த பிக்‌ஷுக்களை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். காஷ்மீருக்கு யுவான் சுவாங் 633ல் வந்து சேர்ந்தார்.

காஷ்மீரில் இருந்து காஞ்சிபுரம் வரை பல முக்கிய நகரங்களுக்கு சென்றுள்ளார். புத்தரைப் பற்றிய அவரது தேடல் வழியில் சந்தித்த யாவருக்கும் ஆச்சரியமளிப்பதாக இருந்துள்ளது.

யுவான் சுவாங்: சீனாவிலிருந்து காஞ்சிபுரம் வரை - 17 ஆண்டு பயணத்தில் கண்டடைந்தது என்ன?
Silk Road History : ஐரோப்பாவையும் சீனாவையும் இணைத்த பட்டுவழிச் சாலையின் வரலாறு

யுவான் சுவாங்கின் காலமான 7ம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தில் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட வைகுண்ட பெருமாள் கோவிலில் அவரது உருவ சிலை உள்ளது.

பண்டைய காலத்தில் கல்வி என்றாலே அனைவரது நினைவுக்கும் வருவது நாளந்தா பல்கலைக்கழகம் தான். யுவான் சுவாங் தனது பயணத்தில் நாளந்தா பல்கலைக்கழகத்தில் பல நூல்களைக் கற்றுள்ளார்.

காஞ்சிபுரத்தில் இருந்து தனது சொந்த நாடான சீனாவுக்கு திரும்பினார் யுவான் சுவாங். கைபர் கணவாய் வழியாக 645ல் செங்கான் நகரத்தை அடைந்தார்.

திரும்பி சென்ற போது 657 புத்த மதம் குறித்த சமஸ்கிருத புத்தகங்களை எடுத்துச் சென்றார். பல புத்த மத நூல்களை சீன மொழிக்கு மொழிபெயர்த்தார்.

7ம் நூற்றாண்டில் மத்திய ஆசியா எப்படி இருந்தது எனத் தெரிந்துகொள்ள நாம் யுவான் சுவாங்கைப் படித்தாலே போதும்.
ஒரு உறுதியான யாத்திரியாக இந்தியா, பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான், நேபாளம் மற்றும் சீனாவை சுற்றி வந்துள்ளார்.

யுவான் சுவாங்: சீனாவிலிருந்து காஞ்சிபுரம் வரை - 17 ஆண்டு பயணத்தில் கண்டடைந்தது என்ன?
மனிதகுலம் அழிந்த பிறகு இந்த பூமி எப்படி  இருக்கும்? - எதிர்காலத்திற்கு ஒரு பயணம்

இந்த நாடுகளின் வரலாறு குறித்து தெளிவான அறிவுடன் இருந்திருக்கிறார் யுவான் சுவாங். சீன மன்னரான டாங் என்பவரின் ஆணைக்கு இணங்க தனது 17 ஆண்டுகால பயணத்தை சுய சரிதையாக எழுதியிருக்கிறார் யுவான் சுவாங்.

எந்த ஒரு பயணிக்கும் இருக்கும் ஈடில்லாத ஆசை யுவான் சுவாங்கின் வாழ்க்கைதான்! அத்தகைய வாழ்க்கையை வாழ ஆசையைத் தாண்டி ஆழமான தேடல் வேண்டும். புத்தரை யுவான் சுவாங் தேடியது போல.

யுவான் சுவாங்: சீனாவிலிருந்து காஞ்சிபுரம் வரை - 17 ஆண்டு பயணத்தில் கண்டடைந்தது என்ன?
பைலாகுப்பே: தமிழகத்துக்கு அருகில் ஒரு புத்த சாம்ராஜியம் - இங்கு Inner Peace நிச்சயம்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com