
உலகில் நாம் சுற்றிப்பார்க்க இன்னும் நிறைய இடங்கள் இருக்கின்றன. சுற்றுலா செல்பவர்கள், அவர்கள் செல்லும் இடம் குறித்து நிறைய தெரிந்துகொண்டு ட்ரிப்பை பிளான் செய்வார்கள். அல்லது, ஒரு இடத்தை தேர்வு செய்து அங்கு சென்ற பிறகு அவ்விடத்தை பற்றி தகவல்கள் தெரிந்துகொள்வார்கள்.
நீங்கள் இரண்டாவது வகையை சேர்ந்தவர்கள் என்றால், உங்களுக்கான பதிவு இது.
உலகில் இருக்கும் மிகப் பெரிய ஏரிகள் என்னென்ன என்றும் அவற்றைக் குறித்த சில சுவாரஸ்ய தகவல்களையும் இங்கு பார்க்கலாம்
வட அமெரிக்காவில் அமைந்திருக்கிறது இந்த லேக் சுபீரியர். உலகின் மிகப்பெரிய மேற்பரப்பு நன்னீர் ஏரி இதுதான், மற்றும் உலகளவில் மூன்றாவது பெரிய ஏரி இந்த லேக் சுபீரியர். இந்த ஏரியைச் சுற்றி மொத்தம் 400 தீவுகள் உள்ளன
வட அமெரிக்காவின் the five great lakesல் இந்த மிச்சிகன் ஏரியும் ஒன்று. இது உலகின் 4வது பெரிய நன்னீர் ஏரியாகும், பரப்பளவில் 5வது பெரிய ஏரி. இந்த ஏரியின் கரைகளில் பெரிய பெரிய நன்னீர் மணல் மேடுகள் உள்ளன.
ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய ஏரியான இது, உகாண்டா, தான்சேனியா மற்றும் கென்யா உள்ளிட்ட மூன்று நாடுகளிலும் அமைந்துள்ளது. இங்கிலாந்து அரசி விக்டோரியாவின் நினைவாக இந்த ஏரிக்கு விக்டோரியா ஏரி என்ற பெயர் சூட்டப்பட்டது.
ஆப்பிரிக்காவின் தி கிரேட் லேக்களில் ஒன்று இந்த மலாவி ஏரி. இந்த ஏரியிலிருந்து, இன்னும் சில சுற்றுலா தலங்களுக்கும் செல்லலாம். இந்த மலாவி ஏரி, மூன்று அடுக்குகளை கொண்டுள்ளது. ஒவ்வொரு அடுக்கிலும் உள்ள மாறுபட்ட வெப்பநிலை காரணமாக ஆழம் மாறுபடுகிறது
கனடாவில் அமைந்துள்ள இந்த ஏரி, இயற்கையின் அழகை ரசிக்க சிறந்த இடமாகும். இங்கு இடம்பெயர்ந்து வரும் பறவைகளை காணலாம். இந்த ஏரியின் நீரில் கால்சியம் கார்பனேட் அதிகமாக இருப்பதால், தண்ணீர் சமயத்தில் மிகவும் வெள்ளை நிறமாக மாறுகிறது
உலகின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றாக இந்த பைகால் ஏரி இடம்பெறாது என்றாலும், ஆழமான ஏரிகளில் ஒன்று இது. இது யுனெஸ்கோவின் பாரம்பரிய தலங்களுள் ஒன்று.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust