எகிப்தின் கிசா முதல் லடாக் வரை - டைம் மேகசின் வெளியிட்ட பட்டியல்
எகிப்தின் கிசா முதல் லடாக் வரை - டைம் மேகசின் வெளியிட்ட பட்டியல்Twitter

World’s Greatest Places: எகிப்தின் கிசா முதல் லடாக் வரை - டைம் மேகசின் வெளியிட்ட பட்டியல்!

டைம் மேகசினின் சர்வதேச அளவிலான பங்களிப்பாளர்களின் அனுபவ பகிர்வுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்டியலை உருவாக்கியுள்ளது.

அமெரிக்காவில் இருந்து வெளியாகும் சர்வதேச வார இதழான டைம் மேகசின் பத்திரிகையில் World’s Greatest Places of 2023 என்ற பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த பட்டியலில் உலகில் உள்ள அதி அற்புதமான 50 தlaங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இதில் இந்தியாவில் காஷ்மீரின் லடாக் மற்றும் ஒடிஷாவின் மயூர்பஞ்ச் மாவட்டம் இடம் பெற்றுள்ளது.

டைம் மேகசினின் சர்வதேச அளவிலான பங்களிப்பாளர்களின் அனுபவ பகிர்வுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்டியலை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ஒடிஷாவின் மயூர்பஞ்ச்
ஒடிஷாவின் மயூர்பஞ்ச்

இந்த பட்டியலில் உள்ள இடங்கள் இப்போது பார்வையிடுவதற்கு மிக சிறந்த இடங்களாக இருப்பதுடன் ஒருபோதும் சுற்றுலாப்பயணிகளை ஏமாற்றாதவையாக உள்ளன.

இதிலுள்ள பல இடங்களில் உள்ளூர் மக்கள் துணையுடன் சுற்றுலா குழுக்கள் இயங்குகின்றன. அவர்களின் ஹோம்ஸ்டேக்களிலும் தங்கும் போது சுற்றுசூழலுடன் ஒன்றியது போன்ற உணர்வைக் கொடுக்கின்றன.

இந்த 50 சுற்றுலாத்தலங்களின் பட்டியலில் மிகவும் பிரபலமான எகிப்தின் கிசா மற்றும் சக்கரா நகரங்கள் முதல் உணவுக்கு புகழ்பெற்ற பிரான்ஸ் நாட்டின் டிஜோன் வரை பல இடங்கள் இருக்கின்றன.

இதிலுள்ள சில இடங்களில் இயற்கை அழகை பாதுகாக்க வேண்டும் என்பதனால் பல சுற்றுலா கட்டுப்பாடுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பிரெஞ்சு பாலினேசியாவில் உள்ள Tuamotu Archipelago என்ற இடத்துக்கு ஒரு உள்நாட்டு வழிகாட்டியுடன் ஒரு வெளிநாட்டு நபர் என்ற அடிப்படையிலேயே சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

 Tuamotu Archipelago
Tuamotu Archipelago

இப்படி பலவகையான சுற்றுலாத்தலங்களை இந்த பட்டியலில் காணமுடிகிறது.

 எகிப்தின் கிசா முதல் லடாக் வரை - டைம் மேகசின் வெளியிட்ட பட்டியல்
புத்தாண்டில் பாஸிடிவ் அனுபவங்கள்: ரூ.10,000 செலவில் சுற்றிபார்க்க 6 சுற்றுலா தலங்கள்!

பட்டியலில் உள்ள 50 இடங்கள்,

  • தம்பா, புளோரிடா

  • வில்லமேட் பள்ளத்தாக்கு, ஓரிகான்

  • ரியோ கிராண்டே, பி.ஆர்.

  • டியூசன், அரிசோனா

  • யோசெமிட்டி தேசிய பூங்கா, கலிபோர்னியா

  • போஸ்மேன், மொன்டானா

  • வாஷிங்டன் டிசி

 எகிப்தின் கிசா முதல் லடாக் வரை - டைம் மேகசின் வெளியிட்ட பட்டியல்
பார்வை இழக்கப்போகும் குழந்தைகள்: உலக சுற்றுலா கூட்டிச் சென்ற பெற்றோர் - நெகிழவைக்கும் கதை!
  • வான்கூவர்

  • சர்ச்சில், மனிடோபா

  • டிஜோன், பிரான்ஸ்

  • Pantelleria, இத்தாலி

  • நேபிள்ஸ், இத்தாலி

  • ஆர்ஹஸ், டென்மார்க்

  • செயின்ட் மோரிட்ஸ், சுவிட்சர்லாந்து

  • பார்சிலோனா

  • டிமிசோரா, ருமேனியா

  • சில்ட், ஜெர்மனி

 எகிப்தின் கிசா முதல் லடாக் வரை - டைம் மேகசின் வெளியிட்ட பட்டியல்
பாலியல் சுற்றுலா, பௌத்தம், யானைகள் - 'தாய்லாந்து' பூலோக சொர்க்கமாக இருக்க என்ன காரணம்?
  • பெராட், அல்பேனியா

  • புடாபெஸ்ட்

  • வியன்னா

  • பிரிஸ்பேன், ஆஸ்திரேலியா

  • கங்காரு தீவு, ஆஸ்திரேலியா

  • டொமினிகா

  • மெக்சிக்கோ நகரம்

  • குவாடலஜாரா, மெக்சிகோ

  • டோரஸ் டெல் பெயின் தேசிய பூங்கா, சிலி

  • பாண்டனல், பிரேசில்

 எகிப்தின் கிசா முதல் லடாக் வரை - டைம் மேகசின் வெளியிட்ட பட்டியல்
Ladakh : சுற்றுலா பயணிகளால் சுடுகாடாகும் லடாக் - தண்ணீர் பஞ்சத்தில் தவிக்கும் மக்கள்
  • மெடலின், கொலம்பியா

  • ஒல்லந்தாய்டம்போ, பெரு

  • ரோட்டன், ஹோண்டுராஸ்

  • லடாக், இந்தியா

  • மயூர்பஞ்ச், இந்தியா

  • கியோட்டோ

  • நகோயா, ஜப்பான்

  • இசான், தாய்லாந்து

  • ஃபூகெட், தாய்லாந்து

  • ஜெஜு தீவு, தென் கொரியா

 எகிப்தின் கிசா முதல் லடாக் வரை - டைம் மேகசின் வெளியிட்ட பட்டியல்
2022: உலகின் சிறந்த சுற்றுலா தலங்கள்- UNWTO குறிப்பிட்ட ஒரு இந்திய கிராமம் எது தெரியுமா?
  • லுவாங் பிரபாங், லாவோஸ்

  • கிசா மற்றும் சக்காரா, எகிப்து

  • சியுலு ஹில்ஸ், கென்யா

  • முசன்சே, ருவாண்டா

  • ரபாத், மொராக்கோ

  • டாக்கர், செனகல்

  • லோங்கோ தேசிய பூங்கா, காபோன்

  • ஃப்ரீடவுன் தீபகற்பம், சியரா லியோன்

  • செங்கடல், சவுதி அரேபியா

  • அகபா, ஜோர்டான்

  • எருசலேம்

  • ஷார்ஜா, யுஏஇ

  • Tuamotu Archipelago, பிரெஞ்சு பாலினேசியா

 எகிப்தின் கிசா முதல் லடாக் வரை - டைம் மேகசின் வெளியிட்ட பட்டியல்
ஈரோடு : பவானி முதல் சத்தியமங்கலம் வரை - சுற்றிப்பார்க்க சிறந்த இடங்கள் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Related Stories

No stories found.
logo
Newssense
www.newssensetn.com