
தனது சொந்த இதயம் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதை பார்வையிட்டுள்ளார் ஒரு பெண்.
16 ஆண்டுகளுக்கு முன்னர் அவரிடம் இருந்து எடுக்கப்பட்ட இதயம் லண்டனில் உள்ள ஹண்டெரியன் அருங்காட்சியத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
ஜெனிஃபர் சுட்டன் என்ற பெண் தனது சொந்த இதயத்தைப் பார்த்த அற்புதமான அனுபவத்தை விளக்கினார். இந்த செய்தியைக் கேட்கும் மக்கள் உடலுறுப்பு தானம் செய்ய முன்வருவார்கள் என நம்புவதாகக் கூறியுள்ளார்.
ஜெனிஃபருக்கு 22 வயது இருந்த போது அவர் மிகவும் அடிப்படையான உடலிழைப்புகளைச் செய்யக் கூட மிகவும் சிரமப்பட்டு வருவதை உணர்ந்திருக்கிறார்.
மருத்துவரிடம் சென்றபோது அவருக்கு கட்டுப்படுத்தப்பட்ட கார்டியோமயோபதி (restrictive cardiomyopathy) இருப்பது தெரிந்தது. இதயமாற்று அறுவை சிகிச்சை செய்யவில்லை என்றால் அவரது உயிருக்கு ஆபத்து நேரிடும் என மருத்துவர்கள் எச்சரித்தனர்.
புதிய இதயத்துக்காக காத்திருந்த நாட்கள் ஜெனிஃபருக்கு மிகவும் கொடுமையானதாக இருந்திருக்கின்றன. 2007ம் ஆண்டி ஜூன் மாதம் ஜெனிஃபருக்கு பொருத்தமான இதயம் கிடைத்தது.
ஜெனிஃபருக்கு 13 வயது இருந்த போது அவரது அம்மாவுக்கும் இதயம் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த சிகிச்சையில் அம்மா இறந்துவிட்டார்.
இந்த சம்பவத்தால் தனது அறுவை சிகிச்சை குறித்து மிகுந்த அச்சத்துடன் இருந்தார் ஜெனிஃபர். எனினும் அவருக்கு அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது. இப்போது 16 ஆண்டுகள் கழித்து தனது இதயத்தை தானே பார்க்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust