NATO -வில் இணையும் ஸ்வீடன்; தடுக்கும் துருக்கி - குரான் எரிப்பு தான் காரணமா?
NATO -வில் இணையும் ஸ்வீடன்; தடுக்கும் துருக்கி - குரான் எரிப்பு தான் காரணமா?Twitter

NATO -வில் இணையும் ஸ்வீடன்; தடுக்கும் துருக்கி - குரான் எரிப்பு தான் காரணமா? | Explained

ஸ்வீடனில் ராஸ்மஸ் பால்டன் என்ற வலதுசாரி அரசியல்வாதி ஜனவரி 21ம் தேதி போராட்டத்தின் போது துருக்கி தூதரகம் முன் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை எரித்தார்.

பிலிப்பைன்ஸ் நாட்டைத் தொடர்ந்து ஸ்வீடனும் நேட்டோ அமைப்பில் இணைவதாக கூறியிருக்கிறது. இதற்கு நேட்டோ ஒப்புதல் அளிக்கும் என்றே தோன்றுகிறது.

ஆனால், ஸ்வீடன் நேட்டோவில் இணைவதற்கு வேறு ஒரு தடை வந்துள்ளது.

ஆரம்பத்தில் துருக்கி ஸ்வீடன் நேட்டோ உடன் இணைவதற்கு சம்மதித்தாலும் சமீபத்தில் நடந்த குரான் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு துருக்கி ஸ்வீடனை கடுமையாக சாடி வருகிறது.

ராஸ்மஸ் பால்டன் என்ற வலதுசாரி அரசியல்வாதி ஜனவரி 21ம் தேதி போராட்டத்தின் போது துருக்கி தூதரகம் முன் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை எரித்தார். இந்த போராட்டமே இஸ்லாமியர்களின் குடியேற்றத்துக்கு எதிராக நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

குரான் எரிப்பு சம்பவம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது, "கருத்து சுதந்திரம் என்ற பெயரில் முஸ்லீம்களை குறிவைத்து தாக்குவதும், எங்கள் புனித விழுமியங்கள்கை அவமதிப்பதையும், இத்தகைய போராட்டங்களை அனுமதிப்பதையும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது" என்று துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குரானை எரித்த வலது சாரி அரசியல் வாதி, "கருத்துச் சுதந்திரம் இருக்க வேண்டாம் என்று நினைத்தால், நீங்கள் வேறு எங்காவது வாழ வேண்டும்" எனக் கூறியிருக்கிறார்.

"இந்த சம்பவம் கருத்து சுதந்திரம் பற்றியது அல்ல, இனவெறி" என துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சர்  Mevlut Cavusoglu கூறியுள்ளார்.

குரான் எரிப்பு சம்பவம்
குரான் எரிப்பு சம்பவம்

இந்த சம்பவம் இஸ்லாமிய நாடுகளை கொதித்தெழ செய்தது, துருக்கி மட்டுமின்றி பாகிஸ்தான், குவைத், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், ஈரான், ஜோர்டான், எகிப்து மற்றும் சர்வதேச முஸ்லீம் அமைப்பு, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) ஸ்வீடனை கண்டித்து வருகின்றன.

ஸ்வீடன் வெளியுறவுத்துறை அமைச்சர் இது தொடர்பாக தனது ட்விட்டரில், "ஸ்வீடனுக்கு தொலைநோக்குடைய கருத்து சுதந்திரம் உள்ளது. அதற்காக நாங்கள் சொல்லப்பட்ட அனைத்து கருத்துகளையும் ஆதரிக்கிறோம் என்று பொருள் இல்லை" எனத் தெரிவித்திருக்கிறார்.

இந்த சம்பவத்தால் ஸ்வீடனின் நேட்டோவில் இணையும் திட்டத்துக்கு பெரும் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

நேட்டோ என்பது என்ன?

நேட்டோ - வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு

NATO - North Atlantic Treaty Organization என்பது அட்லாண்டிக் மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்த அமைப்பு என்று கூறிக்கொள்கிறது.

1949ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி நேட்டோ உருவான போது அதில் 12 நாடுகள் உறுப்பினர்களாக இருந்தன.

NATO
NATO

NewsSense

இந்த நாடுகள் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஒன்றாக நிற்பதாக உறுதியளித்தன; ஒருவருக்கு எதிரான தாக்குதல் அனைவருக்கும் எதிரான தாக்குதலாகவும் கருதப்படும் என்கின்றனர்.

சுவீடன் ஏன் நேட்டோவில் இணைய விரும்புகிறது?

ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்துள்ள நிலையில் சர்வதேச பாதுகாப்பு அமைப்பில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

ஐரோப்பிய நாடுகள் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயத்தில் இருப்பதாக கருதுகின்றன.

NATO -வில் இணையும் ஸ்வீடன்; தடுக்கும் துருக்கி - குரான் எரிப்பு தான் காரணமா?
சிரியா: நிலநடுக்கத்தில் பிறந்த 'அதிசய' குழந்தை - தத்தெடுத்து வளர்க்க குவியும் விண்ணபங்கள்

இந்த காராணிகளால் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக சுவீடன் நேட்டோவில் இணைய முடிவு செய்தது.

எதிர்பாராத விதமாக குரான் எரிப்பு சம்பவம் குறுக்கிட்டுள்ளது.

சுவீடன் நேட்டோ அமைப்பில் இணையும் முயற்சியில் தோற்றுவிட்டதா?

நேட்டோ அமைப்பின் பொது செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் ஸ்வீடன் மற்றும் ஃபின்லாந்து நாடுகள் விரைந்து நேட்டோவில் சேர வேண்டும் என்றே பத்திரிகைகளில் தெரிவித்திருக்கிறார்.

NATO -வில் இணையும் ஸ்வீடன்; தடுக்கும் துருக்கி - குரான் எரிப்பு தான் காரணமா?
துருக்கி: ஏலியன்களா? அடுத்த பிரபஞ்சத்துக்கு செல்லும் வழியா? வானில் தோன்றிய UFO மேகங்கள்!

ஆனால் அதற்கு அனைத்து நேட்டோ உறுப்பினர்களின் ஒப்புதலும் தேவை. சுவீடனின் இஸ்லாமிய, குர்து மக்கள் மீதான சகிப்பு தன்மை மீது கேள்வி எழுந்துள்ளதால், துருக்கி ஒப்புதல் அளிக்க தயங்குகிறது.

ஆனாலும் போலந்து உள்ளிட்ட நாடுகள் துருக்கி மீது அழுத்தம் கொடுக்க தொடங்கியிருக்கின்றன. இதனால் நிச்சயமாக சில வாரங்களில் சுவீடன் நேட்டோவில் சேர்த்துக்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

NATO -வில் இணையும் ஸ்வீடன்; தடுக்கும் துருக்கி - குரான் எரிப்பு தான் காரணமா?
2022ன் இழிவான நபர்: ரஷ்ய அதிபர் புதினுக்கு ஆணுறுப்பு சிலை வைத்த மக்கள் - எங்கே?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Related Stories

No stories found.
logo
Newssense
www.newssensetn.com