”கடல் தான் எங்க வீடு” தெற்காசிய பகுதிகளில் வாழும் கடல் நாடோடிகள் - யார் இவர்கள்?

வாழ்வும் சாவும் இரண்டுமே கடலின் மீது தான் இந்த பஜாவு மக்களுக்கு, இந்த பஜாவு மக்களுக்கு வயது தெரியாதாம்!
”கடல் தான் எங்க வீடு” தெற்காசிய பகுதிகளில் வாழும் கடல் நாடோடிகள் - யார் இவர்கள்?
”கடல் தான் எங்க வீடு” தெற்காசிய பகுதிகளில் வாழும் கடல் நாடோடிகள் - யார் இவர்கள்?ட்விட்டர்

ஆசிய நாடுகள் அதன் தனித்துவமான கலாச்சாரத்திற்காக அறியப்படுகிறது. குறிப்பாக தெற்கு ஆசிய நாடுகள். இதுவே உலகளவில் சுற்றுலா பயணிகளை இந்த இடங்களுக்கு மீண்டும் மீண்டும் வரவைக்கிறது எனலாம்.

தனித்துவத்தைப் பற்றி பேசுகையில், தெற்கு ஆசிய நாடுகளில் காணப்படும் நாடோடிகள் பற்றியும் நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.

நாடோடிகள் எல்லா இடத்திலும் தான் இருப்பார்கள். இதில் என்ன தனித்துவம் என்றால், இந்த பதிவில்...

கடல் தான் வீடே

பஜாவு என்றழைக்கப்படும் இவர்கள் கடல் நாடோடிகள். இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், மலேசியா போன்ற நாடுகளில் இவர்களை அதிகம் காணலாம். இவர்கள் கடலோரப் பகுதிகளில் வாழும் நாடோடி மக்கள் அல்ல. கடலின் மீதே வாழ்பவர்கள் ஆவர்.

பஜாவு மக்கள் நிலத்தில் வாழ்வதில்லை. இவர்களின் வீடுகளே கப்பல்கள் தான். பஜாவு மக்கள் சிறந்த மாலுமிகளாக திக்ழ்கின்றனர். கடலின் எந்த மாற்றத்திற்கும் இவர்கள் அஞ்சுவதில்லை.

இதனாலேயே இவர்களுக்கு நிரந்தமாக ஒரு தங்குமிடம் என்பது இல்லை. கடலில் ஆங்காங்கே சுற்றி திரிகிறார்கள். மீன்பிடி மற்றும் முத்துக்குளிப்பது இவர்களின் தொழிலாக இருக்கிறது.

கடலில் கிடைப்பவற்றை வைத்து வாழ்வாதாரத்தை உருவாக்கிக் கொண்டுள்ளனர். இவர்களின் அன்றாடமே கடலில் தான் கழிகிறது. இவர்கள் உயிர் வாழும் காலம்வரை கடலில் கிடைப்பவை தான் இவர்களின் சொத்துகள்.

குடியுரிமை அல்லாதாவர்கள்

இந்த பஜாவு மக்கள் பிலிப்பைன்ஸ் நாட்டின் சுலு தீவுக்கூடத்தில் இருந்து வருகிறார்கள். ஆனாலும் இவர்கள் எந்த ஒரு நாட்டுக்கும் சொந்தமான குடிமக்கள் அல்ல.

பிலிப்பைன்ஸ் அரசே இவர்களை தங்கள் நாட்டு மக்களாக அறிவிக்க விரும்பவில்லை என்ற கூற்றும் இருக்கிறது. இதனால், மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளும் கூட இவர்களை அங்கீகரிப்பதில்லை.

இவர்கள் நாடோடிகளாக ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பெயர்ந்துகொண்டே தான் இருக்கின்றனர்.

சேர்ந்தார்போல ஒரு இடத்தில் தங்கினாலும், உள்ளூர் மக்கள் இவர்களை துரத்தியடிக்கும் அவலங்களும் இன்றும் நடப்பதாக கூறப்படுகிறது.

இவர்கள் வாழும் பகுதிக்கு ஏற்றவாறு பாசைகளை கற்றுக்கொள்கின்றனர்.

பெரும்பாலான பஜாவு மக்கள் இஸ்லாமிய மதத்தினை சேர்ந்தவர்களாக உள்ளனர். இவர்கள் சிறந்த நீர் மூழ்கிகள், அதாவது divers. இவர்களால் தண்ணீருக்கு அடியில், குறைந்தது 5 நிமிடங்களுக்கு மூச்சை பிடித்துவைக்க முடியும்.

வாழ்வும் சாவும் இரண்டுமே கடலின் மீது தான் இந்த பஜாவு மக்களுக்கு. பெரும்பாலான மக்கள் இஸ்லாமிய மதத்தினை சேர்ந்தவர்கள் என்பதால், இறந்தவர்களின் உடல்களை புதைக்கமட்டும் நிலத்திற்கு வருகின்றனர்.

இவர்களுக்கென்று தனித்துவமான பாடல், நடனம், இசை இருக்கிறது. பலாவு எனப்படும் ஒரு காற்று இசைக்கருவியை இவர்கள் பயன்படுத்துகின்றனர். திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகளில் ஆடல் பாடல்கள் நடக்கிறது.

”கடல் தான் எங்க வீடு” தெற்காசிய பகுதிகளில் வாழும் கடல் நாடோடிகள் - யார் இவர்கள்?
மங்கோலியா : எப்போதும் சூடான தேநீருடன் காத்திருக்கும் நாடோடிகள்- யாருக்காக? அடடே தகவல்கள்

இந்த பஜாவு இன மக்களுக்கு படிப்பறிவு இல்லை. அதிகமாக பேசுவது மலாய் மொழி தான். மேலும் இந்த பஜாவு மக்களுக்கு வயது தெரியாதாம்!

இப்படியாக ஒரு நிரந்தரமற்ற வாழ்க்கையை வாழ்ந்து வரும் இவர்களுக்கு இயற்கையும் கைக்கொடுக்கவில்லை. வெப்பநிலை மாற்றம், கடல் மாசுபடுவது போன்ற காரணிகள் இவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கப்பட்டு வருகிறது.

”கடல் தான் எங்க வீடு” தெற்காசிய பகுதிகளில் வாழும் கடல் நாடோடிகள் - யார் இவர்கள்?
இராக் யாசிதி மக்கள்: யார் இவர்கள்? சாத்தானை வழிபடும் மக்களா இவர்கள்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com