சீனாவில் உள்ள இந்தக் கல் காடுகளுக்குள் என்ன இருக்கிறது?

ஒரு அற்புதமான இயற்கை படைப்பு தான் இந்த சீனாவின் கல் காடு. யுனான் மாகாணத்தில் அமைந்துள்ள ஸ்டோன் காடு சுண்ணாம்புக் கற்களால் ஆன அமைப்புகளைக் கொண்டுள்ளது. எப்படி உருவானது இந்த அதிசயம்?
What’s inside this forest of stone in China?
What’s inside this forest of stone in China?Twitter

இயற்கை ஆர்வலர்கள் மலைகள் மற்றும் காடுகளின் அழகில் தானாகவே ஈர்க்கப்படுகிறார்கள். இயற்கையின் அழகை பொதுவாக யாராலும் புறக்கணிக்க முடியாது.

உங்கள் கண்களை வியப்பில் ஆழ்த்தக்கூடிய மிகவும் வினோதமான மற்றும் தனித்துவமான இடங்களை இந்த உலகம் கொண்டுள்ளது.

அப்படிப்பட்ட ஒரு அற்புதமான இயற்கை படைப்பு தான் இந்த சீனாவின் கல் காடு. சீனாவின் யுனான் மாகாணத்தில் அமைந்துள்ள ஸ்டோன் காடு சுண்ணாம்புக் கற்களால் ஆன அமைப்புகளைக் கொண்டுள்ளது.

ஸ்டோன் ஃபாரஸ்ட் ஒரு முக்கிய சுற்றுலா தலமாக உருவெடுத்துள்ளது. ஏறக்குறைய 300 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட இந்த பாறை வடிவங்கள் தரையில் இருந்து உயர்ந்து, அவற்றின் உச்சத்தில் கூர்மையாக இருக்கிறது.

ஏறக்குறைய 270 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் ஆழமற்ற கடல் இருந்ததாக நம்பப்படுகிறது, அங்கு இப்போது கல் படைப்புகள் உருவாகியுள்ளன.

மெல்ல, பாறையை விட்டு கடல் மறைந்தது. நீர் மற்றும் காற்றின் தொடர்ச்சியான அரிப்பு காரணமாக, இந்த கல் தூண்கள் காலப்போக்கில் உருவாக்கப்பட்டன. சில பாறைகள் சிங்கங்கள், யானைகள் மற்றும் பறவைகள் போன்ற குறிப்பிட்ட விலங்குகளை ஒத்திருக்கின்றன என்றும் கூறப்படுகிறது.

இடையில் வரிசையாக மரங்கள் இருந்தாலும், உறுதியான பாறைகள் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

What’s inside this forest of stone in China?
Pichavaram Mangrove: இந்த சதுப்புநிலக் காடுகள் தமிழ்நாட்டிற்கு ஏன் முக்கியம்?

குன்மிங் ஸ்டோன் காடு நக்சி மற்றும் சானி சமூகங்களின் தாயகமாகவும் உள்ளது. இந்த பகுதி பார்வையாளர்களுக்கு காலை 8:30 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். இந்த இடத்தை, ஆராய உங்களுக்கு மூன்று முதல் நான்கு மணிநேரம் ஆகும்.

அதன் இயற்கையான இடங்களான நீர்வீழ்ச்சிகள், ஏரிகள், குகைகள் மற்றும் அங்கு வாழும் சமூகங்களின் உள்ளூர் கலாச்சாரம் போன்றவற்றை கண்டு அனுபவிக்கலாம்.

வழக்கத்திற்கு மாறான இந்த காடு புவியியல் அதிசயம் மட்டுமல்ல, புதிய மற்றும் தனித்துவமான கலாச்சாரத்தை ஆராய்வதற்கான ஒரு குறிப்பிடத்தக்க வாய்ப்பாகவும் அமைக்கிறது.

What’s inside this forest of stone in China?
அவதார் படத்தில் வருவது போல ஒளிரும் காடுகள் - இந்தியாவில் எங்கு பார்க்கலாம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com