
இந்திய மருந்து நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை உட்கொண்ட 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Marion Biotech Private Limited என்ற நிறுவனம் உஸ்பெகிஸ்தானில் 2012 இல் பதிவு செய்யப்பட்டது. நொய்டாவில் உள்ள இந்த நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தான டாக்-1 மேக்ஸ் என்ற சிரப்பை குடித்ததால் 18 குழந்தைகள் உயிரிழந்ததாக ஆய்வக பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
மரியன் பயோடெக் தயாரித்த டாக்-1 மேக்ஸ் சிரப் மருந்தை இறந்த குழந்தைகள் சாப்பிட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடுமையான சுவாச நோயால் பாதிக்கப்பட்ட 21 குழந்தைகளில் 18 பேர் Doc-1 Max syrup எடுத்துக் கொண்டதால் இறந்துள்ளனர் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
"இறந்த குழந்தைகள், மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, இந்த மருந்தை 2-7 நாட்களுக்கு, ஒரு நாளைக்கு 3-4 முறை குழந்தைகளுக்கான மருந்தின் நிலையான அளவை விட அதிகமாக வீட்டில் உட்கொண்டது கண்டறியப்பட்டது" என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மருந்தின் முக்கிய கூறு பாராசிட்டமால் என்பதால், டாக்-1 மேக்ஸ் சிரப்பை பெற்றோர்கள் சளிக்கு எதிரான மருந்தாக தனிப்பட்ட அல்லது மருந்தக விற்பனையாளர்களின் பரிந்துரையின் பேரில் பயன்படுத்தியுள்ளனர்.
இந்த டாக்-1 மேக்ஸ் சிரப்பில் எத்திலீன் கிளைகோல் இருப்பதாக ஆரம்ப ஆய்வக ஆய்வுகள் கூறுகின்றன.
இதனை அதிகளவில் உட்கொள்ளும் போது வாந்தி, மயக்கம், வலிப்பு, இருதய பிரச்னைகள் மற்றும் கடுமையான சிறுநீரக செயலிழப்பு போன்ற தீவிர மாற்றங்கள் ஏற்படும் என்று அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
குழந்தைகளுக்கு நிலையான அளவை தாண்டி மருந்து கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துமாறும், மருந்துக் கடைகளில் மருந்துச் சீட்டு மூலம் மட்டுமே மருந்துகளை வாங்குமாறும் அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, ஏழு பணியாளர்களை பதவி நீக்கம் செய்துள்ளனர். பல நிபுணர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது, டாக்-1 மேக்ஸ் என்ற மருந்தின் மாத்திரைகள் மற்றும் சிரப்கள் பரிந்துரைக்கப்பட்ட முறையில் நாட்டின் அனைத்து மருந்தகங்களிலும் விற்பனையிலிருந்து திரும்பப் பெறப்படுகின்றன.
இதே போல் கடந்த அக்டோபர் மாதம், காம்பியா நாட்டில் 66 குழந்தைகள் பலியானதற்கு இந்தியாவின் இருமல் டானிக்குகள்தான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust