கருப்பின அமெரிக்கருக்கு 400 ஆண்டு சிறை: 30 ஆண்டுகளிலேயே விடுவிப்பு - ஒரு நெகிழ்ச்சி கதை

தனக்கும் இந்த குற்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என அவர் வாதாடியுள்ளார். ஆனால் பலனில்லை. ஆயுதக் கடத்தலில் ஈடுபட்ட இரு குற்றவாளிகளுக்கு சிட்னி ஹோம்ஸ் துணையாக செயல்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டார்.
400 ஆண்டு சிறை விதிக்கப்பட்ட கருப்பின அமெரிக்கர் - 30 ஆண்டுகளில் வெளியான காரணம் என்ன?
400 ஆண்டு சிறை விதிக்கப்பட்ட கருப்பின அமெரிக்கர் - 30 ஆண்டுகளில் வெளியான காரணம் என்ன?ட்விட்டர்

400 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட கருப்பின அமெரிக்கர் ஒருவர் 30 ஆண்டுகள் சிறை வாழ்க்கைக்கு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த நாளை தான் எப்போதும் எதிர்பார்த்ததாக கண்ணீர் மல்க கூறியிருக்கிறார்.

என்ன நடந்தது? 400 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் அளவு என்ன குற்றம் செய்தார்?

சிட்னி ஹோம்ஸ் என்ற 57 வயது கருப்பின அமெரிக்கர் 1988 ஆம் ஆண்டு அயுதங்கள் கடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.

தனக்கும் இந்த குற்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என அவர் வாதாடியுள்ளார். ஆனால் பலனில்லை. ஆயுதக் கடத்தலில் ஈடுபட்ட இரு குற்றவாளிகளுக்கு சிட்னி ஹோம்ஸ் துணையாக செயல்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டார்.

1989ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் விசாரணைக்கு பிறகு சிட்னி ஹோம்ஸுக்கு 400 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

400 ஆண்டு சிறை விதிக்கப்பட்ட கருப்பின அமெரிக்கர் - 30 ஆண்டுகளில் வெளியான காரணம் என்ன?
அமெரிக்கா : 1992-ல் காணாமல் போன பெண் 30 ஆண்டுகள் கழித்து மீட்பு - என்ன நடந்தது?

கடந்த நவம்பர் 2020 ஆம் ஆண்டு அந்நாட்டின் State Attorney's Conviction Review Unit (CRU)ஐ தொடர்பு கொண்டார். தான் நிரபராதி எனவும், தவறாக குற்றம் சுமத்தப்பட்டிருப்பதாகவும் சிட்னி ஹோம்ஸ் வாதிட்டார்.

ஹோம்ஸின் கோரிக்கையை ஏற்று மீண்டும் விசாரணை நடத்திய தண்டனை மறு ஆய்வு பிரிவு, 1989 ஆம் ஆண்டு ஹோம்ஸுக்கு எதிராக சாட்சி சொன்னவர் தவறிழைத்திருப்பதாக கண்டறிந்தது. ஹோம்ஸின் கார் தவறாக கண்டறியப்பட்டதாகவும் தெரியவந்தது

மேலும், கொடுக்கப்பட்ட சாட்சியங்களும், இவர் தான் குற்றத்தில் ஈடுபட்டார் என்பதை நிரூபிக்கவில்லை. இதனால் 34 ஆண்டுகள் கழித்து இப்போது விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

“வெளியில் இருக்கும் எனது தாயை கட்டியணைத்துக்கொள்ள வேண்டும். நான் நம்பிக்கை இழக்கவில்லை. இந்த நாள் வரும் என எதிர்பார்த்தேன்” என கண்ணீர் மல்க ஹோம்ஸ் கூறியிருந்தார்

400 ஆண்டு சிறை விதிக்கப்பட்ட கருப்பின அமெரிக்கர் - 30 ஆண்டுகளில் வெளியான காரணம் என்ன?
வடகொரியா: படம் பார்க்கும் குழந்தைகளுக்கு 5 ஆண்டு சிறை- கிம் ஜாங் உன் அரசு அதிரடி அறிவிப்பு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com