துருக்கி : 50,000 பேரை காவு வாங்கிய நிலநடுக்கம்; கட்டுமான பணியில் ஊழலா? 200 பேரை கைது

சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தாலும், பலி எண்ணிக்கை அதிகமானதற்கு மோசமான கட்டுமானமே காரணம் என துருக்கியை சேர்ந்த கட்டிடவியல் வல்லுநர்கள், பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
Turkey arrests nearly 200 people over alleged poor building construction
Turkey arrests nearly 200 people over alleged poor building construction Twitter

பிப்ரவரி மாத தொடக்கத்தில் துருக்கியில் ஏற்பட்ட பேரழிவுகரமான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மோசமான கட்டுமானமே காரணம் எனக் கூறி கிட்டத்தட்ட 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று துருக்கியின் நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 6 ஆம் தேதி துருக்கியின் காசியான்டெப் நகரில் 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் பேரழிவை ஏற்படுத்தியது.

சிரியா மற்றும் துருக்கியில் நிலநடுக்கத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது.

Twitter

சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தாலும், பலி எண்ணிக்கை அதிகமானதற்கு மோசமான கட்டுமானமே காரணம் என துருக்கியை சேர்ந்த கட்டிடவியல் வல்லுநர்கள், பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த கட்டுமான ஊழல் குறித்து அந்த நாட்டின் நீதித்துறை விசாரித்து வருகிறது.

துருக்கியின் அமைச்சர் பெகிர் போஸ்டாக், ஆயிரக்கணக்கான கட்டிடங்களில் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன என்றார்.

Turkey arrests nearly 200 people over alleged poor building construction
துருக்கி நிலநடுக்கம் : குர்து இன மக்களை அழிக்க செயற்கையாக உருவாக்கப்பட்டதா? உண்மை என்ன?

துருக்கியில் 5,700க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த நாட்டின் கட்டுமான விதிமுறையை உரிய வகையில் அமல்படுத்தாமல் ஊழல் செய்து கட்டுமான பணிகளை மேற்கொண்டதால் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து பல்லாயிரக்கணக்கானோர் பலியானதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த நிலையில் இந்த விசாரணை தொடர்பாக இதுவரை கட்டிட ஒப்பந்ததாரர்கள், கட்டிட உரிமையாளர்கள் உள்பட 200 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக துருக்கி அரசு தெரிவித்துள்ளது.

மேலும் இது தொடர்பாக 600க்கும் அதிகமானோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாவும், இன்னும் பலர் கைது செய்யப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Turkey arrests nearly 200 people over alleged poor building construction
துருக்கி : உதவ சென்ற இந்திய விமானம் - பாகிஸ்தான் வழியாக பறக்க அனுமதி மறுக்கப்பட்டதா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com