Travel: உலகில் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்காத இடங்கள் இவை தான்!

உலகில் அதிகம் சுற்றுலா பயணிகள் செல்லாத சில இடங்களும் உள்ளன. அவற்றை இந்த தொகுப்பில் பார்க்கலாம்
Travel: உலகில் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்காத இடங்கள் இவை தான்!
Travel: உலகில் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்காத இடங்கள் இவை தான்!Twitter

சுற்றுலா என்றதும் வெர்ல்ட் டூர் முதல் உள்ளூர் டூர் வரை சென்று வர நிறைய இடங்களை நாம் பட்டியலிடுவோம். ஐரோப்பிய நாடுகள் அதில் முதன்மையாக இருக்கும். தவிர சில ஆசிய நாடுகள், இந்தியாவிற்குள் என்றால் மலைப் பிரதேசங்களான கொடைக்கானல், காஷ்மீர், மணாலி போன்றவையை சொல்லலாம்

ஆனால் இவை பரவலாக காலங்காலமாக பலரால் பார்க்கப்படும் இடங்கள். உலகில் அதிகம் சுற்றுலா பயணிகள் செல்லாத சில இடங்களும் உள்ளன. அவற்றை இந்த தொகுப்பில் பார்க்கலாம்

துவாலு

பசிபிக் கடலில் அமைந்திருக்கும் இந்த தீவு தேசம் ஃபிஜி நாட்டுக்கு அருகில் சில மைல் தொலைவில் இருக்கிறது. இங்கு மொத்தம் 9 தீவுகள் இருக்கின்றன. ஆனால் ஒரு ஆண்டுக்கு இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2000 தான்.

ஒரே ஒரு விமானதளத்துடன் இருக்கும் இத்தீவுக்கு செல்ல மொத்தமே இரண்டு விமானங்கள் தான் உள்ளன. தவிர தங்குவதற்கும் 12 கெஸ்ட் ஹவுஸ்கள் தான் இருக்கின்றன

இதனாலேயே சுற்றுலா பயணிகளின் வரத்து குறைவாக உள்ளது.

சாலம்ன் தீவுகள்

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரிலிருந்து மூன்று மணி நேரத் தொலைவில் இருக்கிறது. இயற்கையையும், சற்றே அட்வெஞ்சரையும் விரும்புபவர்கள் கண்டிப்பாக இங்கு செல்லலாம்.

இங்கு மொத்தமே ஒராண்டிற்கு 30,000த்துக்கும் குறைவான சுற்றுலா பயணிகளே வருகின்றனர். இங்கு எரிமலைகளும், அழகிய சிகரங்களும் உள்ளன.

அன்றாட வாழ்க்கையிலிருந்து சற்றே அமைதியை நாடுபவர்களுக்கு இது சிறந்த இடம்!

Travel: உலகில் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்காத இடங்கள் இவை தான்!
15 வீடுகள், 159 பேர் மட்டுமே வாழும் இந்தியாவின் மிக உயரமான கிராமம் பற்றி தெரியுமா?

நவ்ரூ

ஆஸ்திரேலியா மற்றும் ஹவாய்க்கு இடையில் அமைந்திருக்கும் இந்த இடத்தில், சுற்றுலா என்ற ஒன்றே அதிகம் அறியப்படாத வார்த்தையாக இருக்கிறது.

ஓர் அழகிய பவளப்பாறையால் சூழப்பட்ட இந்த தீவு பாஸ்பேட் சுரங்கத்தால் பேரழிவை சந்தித்துவருகிறது. இதனால் ஆனதத்தின் தீவு என்று ஒரு சமயத்தில் அழைக்கப்பட்ட இது, தற்போது தன் அழகியலை இழந்து வருகிறது

Travel: உலகில் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்காத இடங்கள் இவை தான்!
Travel: டெல்லி முதல் துருக்கி வரை - உலகின் பிரபலமான சந்தைகள் என்னென்ன?

குயானா

தெற்கு அமெரிக்காவில் அமைந்திருக்கும் இந்த இடமானது, பெரும்பாலும் வெளியில் அறியப்படாத இடங்களில் ஒன்று. காரணம், இதன் அருகில் அமைந்திருக்கும் அர்ஜென்டினா, சிலி, பொலிவியா போன்ற நாடுகள் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்த்துவிடுவதால், குயானா இந்த நாடுகளின் பிரபலத்தால் மூடி மறைக்கப்பட்டுவிட்டது என்கின்றனர்.

இங்கு ஆண்டிற்கு 3000 சுற்றுலா பயணிகள் வந்தாலே பெரிய விஷயம் தான். இங்கு அழகிய மழைக்காடுகள், கடற்கரைகள், நதிகள் உள்ளன

Travel: உலகில் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்காத இடங்கள் இவை தான்!
Travel: இந்தியாவை பற்றிய இந்த தகவல்கள் உங்களுக்கு தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com