
மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்று வீடு, இன்றைய நவீன உலகிற்கேற்ப நமக்கு பிடித்த வகையில் வீடுகளை கட்டிக் கொள்கிறோம்.
அதே சமயம் அதிக ஆர்வத்தின் காரணமாக சில வித்தியாசமான வடிவமைப்புகளை கொண்ட வீடுகளை அமைத்து வருகின்றனர். அந்த வகையில் வளைந்த வீடு, முதலை வீடு, தலைகீழான வீடு என பல்வேறு ஐடியாக்களில் தங்குமிடங்களை அமைத்து வருகின்றனர்.
அப்படி உலகெங்கிலும் உள்ள வித்தியாசமான வீடுகள் குறித்தும் அதன் தனிதன்மை குறித்தும் இங்கே தெரிந்துக்கொள்வோம்.
நவம்பர் 9, 2007 அன்று, சியோலுக்கு தெற்கே சுமார் 46 கிமீ தொலைவில் இந்த கழிப்பறை வடிவ வீடு அமைக்கப்பட்டுள்ளது.
கழிப்பறை வடிவிலான இந்த வீட்டிற்கு ஹேவூஜே என்று பெயரிடப்பட்டது. இதன் பொருள் 'ஒருவர் தங்கள் கவலைகளைத் தீர்க்கும் இடம்' என்பதாகும்.
உலக கழிவறை சங்கத்தின் தொடக்க சபையின் தலைவர் இந்த வித்தியாசமான மற்றும் தனித்துவமான வீட்டை வடிவமைத்தார்.
போலாந்து ஸோபோட்டில் 2004ல் இந்த வீடு கட்டப்பட்டது. கட்டிடத்தை Szotynscy மற்றும் Zaleski ஆகியோர் வடிவமைத்தனர்.
லெபனானில் உள்ள மிசியாரா கிராமத்தில் அமைந்துள்ளது இந்த விமான வீடு.
பெல்கிரேடில் இருந்து சுமார் 160 கிமீ (99 மைல்) தொலைவில் உள்ள மேற்கு செர்பிய நகரமான பஜினா பஸ்தாவிற்கு அருகில் டிரினா ஆற்றின் மீது ஒரு பாறையில் கட்டப்பட்ட வீடு காணப்படுகிறது. இந்த வீடு 1968 ஆம் ஆண்டு இளைஞர்களால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
ஐவரி கோஸ்ட்டின் தலைநகரான அபிட்ஜானில் முதலை வடிவில் வீடு கட்டப்பட்டுள்ளது.
ஜப்பானில் அமைந்துள்ளது இந்த கால்பந்து வடிவ வீடு. மிதக்கும் மற்றும் பூகம்பங்களை எதிர்க்கும் வகையில் இந்த வீடு வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மெக்ஸிகோவின் வடக்கு மாநிலமான கோஹுய்லாவில் அமைந்துள்ளது இந்த பாறை வீடு. இதில் மக்கள் 30 வருடங்களாக வசிக்கின்றனர். மேற்புறத்தில் பாறையால் மூடப்பட்டிருக்கும், அதன் கீழே மக்கள் வசிக்கின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust