ஜெர்மனி முதல் ஸ்பெயின் வரை: உலகின் அதிகமாக மதுபானம் அருந்தும் நாடுகள் - முதலிடத்தில் யார்?

பீர் மிகவும் பிரபலமான பானமாக இருக்கும் நாடுகள் முதல் 10 இடங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன. சரி மதுபானம் அதிகமாக அருந்துவதில் டாப் 10 நாடுகள் என்ன என்பதை இந்த பதிவில் காணலாம்
ஜெர்மனி முதல் ஸ்பெயின் வரை: உலகின் அதிகமாக மதுபானம் அருந்தும் நாடுகள் - முதலிடத்தில் யார்?
ஜெர்மனி முதல் ஸ்பெயின் வரை: உலகின் அதிகமாக மதுபானம் அருந்தும் நாடுகள் - முதலிடத்தில் யார்?canva

குடி நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்று சொன்னாலும், மதுபானம் அருந்தும் வழக்கம் காலம் காலமாக இருந்துவரும் ஒன்று. மேற்கத்திய நாடுகளில் மதுபானம் அருந்தும் பழக்கம் கலாச்சார செயல்பாடுகளில் ஒன்றாகவே இருக்கிறது.

உலகளவில் மதுபானம் அருந்தும் சதவிகிதம் சற்றே அதிகமாக தான் இருக்கிறது. Our World In Data என்கிற இணையதளம் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் இவை.

15 வயதுக்கு மேற்பட்ட தனிநபர்களின் சராசரி நுகர்வுகளைப் பதிவு செய்கிறது. உலகளாவிய சராசரி நுகர்வு 6.18 லிட்டராக இருக்கிறது. குறிப்பாக ஐரோப்பாவில் மதுபானம் அருந்துவோர் அதிக அளவில் உள்ளனர்.

பீர் மிகவும் பிரபலமான பானமாக இருக்கும் நாடுகள் முதல் 10 இடங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

சரி மதுபானம் அதிகமாக அருந்துவதில் டாப் 10 நாடுகள் என்ன என்பதை இந்த பதிவில் காணலாம்

செய்செல்ஸ் - 20.50 லிட்டர்

செய்செல்ஸ் என்பது இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு தீவுக்கூட்டம். தனி நபர் வருமானத்தை பொருத்தவரையில், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், செய்செல்ஸ் இந்த பட்டியலில் பெரிதாக போட்டியிடாது என்றாலும், இங்குள்ள மக்கள் தொகையை பார்க்கையில், மதுபானம் அருந்துவோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

1,00,00-த்துக்கும் குறைவான மக்கள் தொகையை கொண்டுள்ள இத்தீவுக் கூட்டத்தில் சராசரியாக ஒரு குடும்பத்தின் வருமானத்தில், 4ல் ஒரு பங்கு மதுபானத்திற்கு செலவிடப்படுகிறது. பெண்களை விட ஆண்கள் அதிகமாக குடிக்கிறார்கள். மேலும் இங்கு பீர் சமீப காலமாக பிரபலமடைந்து வருகிறது

ஜெர்மனி முதல் ஸ்பெயின் வரை: உலகின் அதிகமாக மதுபானம் அருந்தும் நாடுகள் - முதலிடத்தில் யார்?
Summer Special: ஒரு ஜோடி மாம்பழம் ரூ.4 லட்சமா? உலகின் காஸ்ட்லியான மாம்பழங்கள் இவை தான்!

உகாண்டா - 15.09 லிட்டர்

உகாண்டா நாட்டு தலைநகர் கம்பாலாவில் ஒரு பீரின் விலை, 0.87 பௌண்ட். எனினும் இங்கு பீர் மீதான மோகம் அதிகமே. பீர் தவிர இங்கு தென் ஆப்பிரிக்க வைனுக்கு மவுசு அதிகம். தென் ஆப்பிரிக்க வைனின் இறக்குமதி உகாண்டாவில் எப்போதும் ஏறுமுகமாகவே இருக்கிறது

செக் குடியரசு - 14.45 லிட்டர்

மதுபானம் அருந்துவதற்காகவே செக் குடியரசின் தலைநகரான ப்ரேக் நாட்டிற்கு சுற்றுலா பயணிகள் குவிகின்றனர் என்கின்றது our world in data தளம். தவிர, செக் குடியரசின் மக்கள், அவர்கள் நாட்டின் பீர் மிகவும் சுவையானது என்று பறைச்சாற்றுகின்றனர். தங்கள் நாட்டின் பீர் சுவையை கூட்ட, அதன் தயாரிப்பில் இன்னும் புதிய புதிய முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்

ஜெர்மனி முதல் ஸ்பெயின் வரை: உலகின் அதிகமாக மதுபானம் அருந்தும் நாடுகள் - முதலிடத்தில் யார்?
சென்னை டூ புதுச்சேரி: Unlimited பீர் வழங்கும் பஸ் - எவ்வளவு கட்டணம் தெரியுமா?

லிதுவேனியா - 13.22 லிட்டர்

ஐரோப்பிய நாடுகளில் வைத்து ஒப்பிடும் போது, தினசரி கணக்கில் மதுபானம் அருந்துவோரின் எண்ணிக்கை இங்கு குறைவே. ஆனால், மாத அடிப்படையில் பார்த்தால் மதுபானம் அருந்துவோரின் எண்ணிக்கை இங்கு அதிகமாக இருக்கிறது என தரவுகள் சொல்லுகின்றன.

இங்கு பீர், வோட்கா தவிர கவா என்கிற வகை பானமும் அதிகமாக அருந்தப்படுகிறது

லக்சம்போர்க் - 12.94 லிட்டர்

பிரேசில், ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளால் சூழப்பட்டுள்ள இந்த நகரத்தில், மதுபானப் பிரியர்கள் அதிகமே. குறிப்பாக வைன். இங்கு மதுபானம் விலை குறைவாக கிடைப்பதால், உள்ளூர் வாசிகள் மட்டுமல்லாது, அக்கம்பக்கத்து நாட்டினரையும் இது ஈர்க்கிறது.

இங்கு மதுபானம் அருந்த 16 வயதை நிறைவு செய்திருந்தால் போதும்.

ஜெர்மனி - 12.91 லிட்டர்

ஜெர்மனியில் பீர், வைன் சாம்பெயின் உள்ளிட்ட மது பானங்களுக்கு மவுசு அதிகம். குறிப்பாக இங்கு முனிச் நகரில் நடத்தப்படும் அக்டோபர்ஃபெஸ்ட் என்ற நிகழ்வு மிகவும் பிரபலம். இது ஒரு பீர் அருந்தும் திருவிழா.

ஒரு திருவிழா கொண்டாடும் அளவு இங்கு மதுபானம் அருந்தும் வழக்கம் ஊடுருவியுள்ளது

ஜெர்மனி முதல் ஸ்பெயின் வரை: உலகின் அதிகமாக மதுபானம் அருந்தும் நாடுகள் - முதலிடத்தில் யார்?
ஜெர்மனியில் கொண்டாடப்பட்ட பீர் திருவிழா - ஈட்டிய வருமானம் எவ்வளவு?

ஐயர்லாந்து - 12.88 லிட்டர்

இங்கு ஸ்டௌட் என்ற வகை பீர் மற்றும் விஸ்கி பிரபலம். என்னதான் இங்கு விஸ்கி விற்பனைக்கு கட்டுப்பாடுகள் இருந்தாலும், மதுபானப் பிரியர்களின் எண்ணிக்கை என்னவோ அதிகம் தான்

லாட்வியா -12.77 லிட்டர்

இங்கு சராசரியாக ஒரு வளர்ந்த நபர், ஒரு ஆண்டுக்கு 9.23 லிட்டர் மதுபானம் அருந்துவதாக தகவல்கள் சொல்லுகின்றன. லாட்வியாவில் ஸ்டோலி என்ற வோட்கா பானம் தயாரிக்கப்படுகிறது. ஆனால் இதை தவிர இங்கு விஸ்கி உட்கொள்வோரின் எண்ணிக்கையும் அதிகம்

ஜெர்மனி முதல் ஸ்பெயின் வரை: உலகின் அதிகமாக மதுபானம் அருந்தும் நாடுகள் - முதலிடத்தில் யார்?
Travel: உலகில் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்காத இடங்கள் இவை தான்!

ஸ்பெயின் - 12.72 லிட்டர்

இங்கு காக்டெயில், பீர், வைன் என பல வகையான மதுபானங்கள் மிகவும் விருப்பப்பட்டு அருந்தப்படுகிறது. உலகளவில், பீர் தயாரிக்கும் முதன்மையான நாடுகளில் ஸ்பெயினும் ஒன்று. மற்றும் வைன் தயாரிப்பில் இத்தாலிக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கிறது

பல்கேரியா - 12.65 லிட்டர்

உலகளவில் பல்கேரியாவின் மதுபானங்கள் அவ்வளவு பிரபலம் இல்லை என்றாலும், உள்நாட்டு தயாரிப்பான மஸ்திகா இங்கு பிரபலம்

ஜெர்மனி முதல் ஸ்பெயின் வரை: உலகின் அதிகமாக மதுபானம் அருந்தும் நாடுகள் - முதலிடத்தில் யார்?
உலகில் இருக்கும் தனிமையான வீடுகள் குறித்து தெரியுமா? இந்தியாவில் எங்கே இருக்கிறது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com