உலக சாதனை படைத்த திப்பு சுல்தானின் வாள் - ரூ.143 கோடிக்கு ஏலம்!

திப்பு சுல்தான் மைசூர் புலி என்று அழைக்கப்பட்டவர். அவரைப் போரில் தோற்கடித்த பின்னர் ஆங்கிலேயே இராணுவம் அவரது படுக்கையறையில் இருந்து இந்த வாளைக் கைப்பற்றியது.
உலக சாதனை படைத்த திப்பு சுல்தானின் வாள் - ரூ.143 கோடிக்கு ஏலம்!
உலக சாதனை படைத்த திப்பு சுல்தானின் வாள் - ரூ.143 கோடிக்கு ஏலம்!Twitter

கடந்த செவ்வாய் கிழமை மன்னர் திப்பு சுல்தான் தனிப்பட்ட முறையில் எப்போதும் உடன் வைத்திருந்த வாள் ஏலத்தில் விடப்பட்டது. லண்டனில் நடந்த இந்த ஏலத்தில் திப்பு சுல்தானின் வாள் 14 மில்லியன் பவுண்ட்கள், இந்திய மதிப்பில் 143 கோடி ரூபாய்க்கு விற்பனையானது.

Bonhams என்ற ஏல நிறுவனம் தான் இந்த ஏலத்தை நடத்தியது. அவர்கள் கூறுவதன் படி இந்திய மற்றும் இஸ்லாமிய பொருட்களின் ஏலத்தில் இது உலக சாதனையாம்.

Bonhams-ன் இந்திய மற்றும் இஸ்லாமிய கலைகள் குழுவின் தலைவர் நிமா சகர்சி, “இந்த வாளுக்கு உறுதியான வரலாறு மற்றும் நிகரற்ற கலைத்தன்மை இருக்கிறது. இந்த வாள் ஏலதாரர்களுக்கு இடையில் பரபரப்பான போட்டியை ஏற்படுத்தியதில் ஆச்சரியம் எதுவுமில்லை.” எனக் கூறியிருக்கிறார்.

திப்பு சுல்தான் மைசூர் புலி என்று அழைக்கப்பட்டவர். அவரைப் போரில் தோற்கடித்த பின்னர் ஆங்கிலேயே இராணுவம் அவரது படுக்கையறையில் இருந்து இந்த வாளைக் கைப்பற்றியது.

செரிங்கபடம் அரண்மனையில் இருந்து 4 மே 1799ம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த வாளில் “ஆட்சியாளரின் வாள்” எனப் பொறிக்கப்பட்டு உள்ளது. 

இந்த வாள் மேஜர் ஜெனரல் டேவிட் பேர்டு என்பவருக்கு, திப்பு சுல்தானுக்கு எதிராக அவரது நடவடிக்கைகளுக்காக பரிசாக வழங்கப்பட்டது.

உலக சாதனை படைத்த திப்பு சுல்தானின் வாள் - ரூ.143 கோடிக்கு ஏலம்!
Mir Jafar: ஆங்கிலேயர்களிடம் இந்தியாவை விற்ற நபர் - துரோகத்தின் வரலாறு

இந்த வாளை இப்போது ஏலத்தில் வாங்கியிருப்பது யார் என்பது குறித்த தகவல்களை ஏல நிறுவனம் பகிர்ந்துகொள்ளவில்லை.

இந்த வாள் திப்பு சுல்தானின் வாள் என்பதைத் தாண்டி இது இந்திய பழங்குடி கலை வெளிப்பாட்டின் எடுத்துக்காட்டாகும். இதன் தங்க கைப்பிடியும் அலங்கார வேலைப்பாடுகளும் இதன் மதிப்பைக் கூட்டுகின்றன.

உலக சாதனை படைத்த திப்பு சுல்தானின் வாள் - ரூ.143 கோடிக்கு ஏலம்!
Tipu Sultan History : மன்னிப்பு கேட்காமல் போராடிய மாவீரன் திப்பு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com