அடுத்த 100 ஆண்டுகளில் என்ன நடக்கலாம்? 1900-ல் கணித்தவற்றில் என்னென்ன நடந்தது?

அடுத்த நூறு ஆண்டுகளில் என்ன நடக்கலாம், 2000 ஆம் ஆண்டில் உலகம் எப்படி இருக்கும் என்று யூகிக்கப்பட்டிருந்தது. சில கணிப்புகள் ஓரளவுக்கு உண்மையற்றதாகவும் இருந்தாலும், மற்றவை மிகவும் துல்லியமாக இருந்தன.
These Predictions Made In 1900 Are Eerily Accurate, But Some Didn’t Come True. See List
These Predictions Made In 1900 Are Eerily Accurate, But Some Didn’t Come True. See ListTwitter

உலகில் விசித்திரமான, மர்மமான, இயற்கை பேரழிவு போன்ற பல விஷயங்கள் அவ்வபோது நடைப்பெற்று தான் வருகிறது. ஆயிரக்கணக்கான உயிரை காவு வாங்கிய டைட்டானிக் கப்பல் முழ்குவது கூட முன்பே கணித்து புத்தகங்களில் எழுதப்பட்டிருந்தது.

அப்படி உலகில் நிழ்ந்த, நிகழ இருக்கும் பல விஷயங்களை விஞ்ஞானிகளும் ஞானிகளும் கணித்து வருகின்றனர்.

அந்த வகையில் 1900 ஆம் ஆண்டு 'தி லேடீஸ்' ஹோம் ஜர்னலில் வெளியிடப்பட்ட பொறியாளர் ஜான் எல்ஃப்ரத் வாட்கின்ஸ் ஜூனியரின் கட்டுரையில், அடுத்த 100 ஆண்டுகளுக்கான பல கணிப்புகள் இடம்பெற்றன.

அடுத்த நூறு ஆண்டுகளில் என்ன நடக்கலாம், 2000 ஆம் ஆண்டில் உலகம் எப்படி இருக்கும் என்று யூகிக்கப்பட்டிருந்தது. சில கணிப்புகள் ஓரளவுக்கு உண்மையற்றதாகவும் இருந்தாலும், மற்றவை மிகவும் துல்லியமாக இருந்தன.

எந்தக் கணிப்புகள் நிறைவேறின, எது நடக்கவில்லை என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

மனிதன் உலகையே கைக்குள் வைத்திருப்பான்

கேமராக்களோ அல்லது திரை மூலமாகவோ உலகம் முழுவதும் மக்கள் இணைக்கப்படுவார்கள் என்று கணிக்கப்பட்டது. நினைத்தது போல உலகம் இன்று இணையம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

கண்ணுக்குத் தெரியாத ஒளிக் கதிர்கள்

இந்த முறையின் மூலம், ஒரு மருத்துவர் உயிருடன் துடிக்கும் இதயத்தையும், மற்ற எந்த உறுப்புகளையும் பார்க்கவும் புகைப்படம் எடுக்கவும் முடியும் என்பது கணிப்பு. அதே போன்று இன்று மருத்துவர்கள் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு கூட அறுவை சிகிச்சை செய்கின்றனர்.

சமையலறைகளுக்குப் பதிலாக ஆய்வகம்

அந்தக் கால பேக்கரிகள் போன்ற இடங்களில் தயாராக சமைத்த உணவுகள் கிடைக்கும் என்று கட்டுரை கணித்துள்ளது.

இந்த உணவுகள் சமையலறைகளுக்குப் பதிலாக ஆய்வகங்களில் தயாரிக்கப்படும் என்றும், சமையல் பாத்திரங்களில் உள்ள நுண்ணுயிரிகளைக் கழுவவும் கொல்லவும் இரசாயனங்கள் பயன்படுத்தப்படும் என்றும் அது கூறியது.

சூடான மற்றும் குளிர்ந்த காற்று

நீங்கள் தண்ணீருக்காக ஒரு குழாயைப் பயன்படுத்துவதைப் போலவே உங்கள் வீட்டிலும் சூடான மற்றும் குளிர்ந்த காற்றை கண்டிஷனர் மூலம் பெறலாம். அந்த ஏர் கண்டிஷனர் 1900 ஆம் ஆண்டிலேயே கணிக்கப்பட்டுள்ளது.

Smart Phone
Smart PhoneTwitter

உலகெங்கிலும் உள்ள தொலைபேசிகள் வயர்லெஸ் ஆக இருக்கும் என்பது கணிப்பு, 1973 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட செல்போன் தற்போது ஒவ்வொருவரின் கையில் ஸ்மார்ட் போன்களாக தவழ்ந்து வந்துள்ளது.

புகைப்படங்கள் இயற்கையின் அனைத்து வண்ணங்களையும் மெருகேற்றும் என்பது கணிப்பு, வண்ண புகைப்படம் புகைப்படக் கலையை மற்றொரு நிலைக்கு கொண்டு சென்றது. அதுமட்டுமில்லாமல், நேரில் பார்க்க முடியாத பல விஷயங்களை இணையம் கொண்டு புகைப்பட வாயிலாக பார்க்கிறோம்.

ரயில்கள் 150 மைல் வேகத்தில் பயணிக்கும் மற்றும் நிலக்கரி ரயில்களுக்கு எரிபொருளாகப் பயன்படுத்தப்படாது.

ஜப்பானின் L0 தொடர், எடுத்துக்காட்டாக, 375 மைல் வேகம் வரை பயணிக்க முடியும்.

These Predictions Made In 1900 Are Eerily Accurate, But Some Didn’t Come True. See List
2022 -ல் ஒரு பாபா வாங்கா? 11 நிகழ்வுகளை சரியாக கணித்த 19 வயது பெண்; அடுத்த கணிப்பு என்ன?

அமெரிக்கர்கள் உயரமாக இருப்பார்கள்

அமெரிக்கர்கள் ஒன்று முதல் இரண்டு அங்குலம் வரை உயரம் வளருவார்கள் என்றும், ஆயுட்காலம் 30க்கு பதிலாக 50 ஆக உயரும் என்றும் கணிப்பு இருந்தது! 100 ஆண்டுகளில் அமெரிக்கர்களின் உயரம் சுமார் இரண்டு அங்குலம் அதிகரித்துள்ளது, மேலும் ஆயுட்காலம் கணிசமாக அதிகரித்துள்ளது.

These Predictions Made In 1900 Are Eerily Accurate, But Some Didn’t Come True. See List
2023ஆம் ஆண்டு பெரும் போர் வரும் - பீதியூட்டும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு

இலவசப் பல்கலைக்கழகக் கல்வி

இலவச மருத்துவம், இலவச உணவு, புத்தகங்கள் மற்றும் ஏழை மாணவர்களுக்கு உடைகள், இன்னும் உலகின் பல நாடுகளின் கனவாகவே உள்ளது.

500 மில்லியன் மக்கள்

அமெரிக்காவில் 350 முதல் 500 மில்லியன் மக்கள் இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டது. ஒரு 100 ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்காவில் சுமார் 285 மில்லியன் இருந்தது, இது குறிப்பிடத்தக்க வளர்ச்சியே தவிர கணிக்கப்பட்டது போன்று 500 மில்லியன் அல்ல.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com