4 ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே வெளியாகும் ஒரு அடடே நாளிதழ்- விலை என்ன? ஒரு சுவாரஸ்ய பின்னணி!

நகைச்சுவைகள், கட்டுரைகள், சொல் விளையாட்டுகள் போன்றவை இருக்கும். கடந்த நான்கு ஆண்டுகளில் என்னென்ன சம்பவங்கள், முக்கிய நிகழ்வுகள் நடந்ததோ, அவை செய்திகளாக வந்திருக்கும்.
4 ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே வெளியாகும் ஒரு அடடே நாளிதழ்- என்ன விலை? ஒரு சுவாரஸ்ய பின்னணி!
4 ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே வெளியாகும் ஒரு அடடே நாளிதழ்- என்ன விலை? ஒரு சுவாரஸ்ய பின்னணி!Twitter

தினமும் வெளியாவது நாளிதழ். அன்றைய நியூஸ்பேப்பரில், முன்தினம் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பை, நாட்டு நடப்பை நாம் படித்து தெரிந்துகொள்வோம்.

நமக்கு விவரம் தெரிந்த காலத்திலிருந்து, ஆயுத பூஜைக்கு அடுத்த நாளில் மட்டும் தான் நியூஸ்பேப்பர் வெளியாகாது. ஏனென்றால் ஆயுத பூஜை அன்று பிரிண்டிங் பிரஸ் லீவில் இருக்கும்.

ஆனால், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வெளியாகி வரும் நியூஸ்பேப்பர் ஒன்று இருக்கிறது! அதற்கு வாசகர்களும் இருக்கிறார்கள், தொடர்ந்து லட்சக்கணக்கில் லாபமும் ஈட்டி வருகிறது.

4 ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே வெளியாகும் ஒரு அடடே நாளிதழ்- என்ன விலை? ஒரு சுவாரஸ்ய பின்னணி!
பாம்பன் முதல் திவார் வரை : இந்தியாவில் பலரும் அறியாத 5 அழகான தீவுகள் - சுவாரஸ்ய தகவல்கள்

La Bougie du Sapeur நாளிதழ்:

La Bougie du Sapeur, என்ற பிரஞ்சு நாளிதழ் தான் அது. கடந்த 40 ஆண்டுகளாக வெளியாகிவரும் இந்த நாளிதழ், இதுவரை 11 பிரதிகளை மட்டுமே வெளியிட்டிருக்கிறது.

ஒவ்வொரு லீப் டேவுக்கும் இந்த La Bougie du Sapeur நாளிதழ் வெளியாகும். அதாவது, ஆங்கில காலண்டர் வழக்கத்தில் லீப் இயர் என்ற ஒரு வழக்கம் இருக்கிறது.

பொதுவாக ஒரு ஆண்டுக்கு 365 நாட்கள். அதுவே ஒரு ஆண்டில் 366 நாட்கள் இருந்தால் அது லீப் இயர் ஆகும். இந்த லீப் இயர் ஒவ்வொரு நான்கு ஆண்டும் வரும். லீப் இயரில், பிப்ரவரி மாதத்தில் வழக்கமாக இருக்கும் 28 நாட்கள் அல்லாமல், 29 நாட்கள் இருக்கும். பிப்ரவரி 29 லீப் டே எனப்படுகிறது

ஏன் பிப்ரவரி 29?

இந்த லீப் டேவில் தான் இந்த La Bougie du Sapeur நாளிதழ் வெளியிடப்படுகிறது. 1980 ஆம் ஆண்டு இரண்டு நண்பர்கள் இணைந்து விளையாட்டாக இந்த நாளிதழை தொடங்கினர்.

La Bougie du Sapeur என்பது ஆங்கிலத்தில் "The Sapper's Candle" என பொருள்படுகிறது. 19ஆம் நூற்றாண்டில் வெளியான கார்ட்டூனில் வரும் கதாபாத்திரத்தின் பெயரை இது குறிக்கிறது.

இந்த கதாபாத்திரம், கதையின்படி பிப்ரவரி 29 ஆம் தேதி பிறந்ததால் இதே தேதியில் நாளிதழ் தொடங்கப்பட்டது

4 ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே வெளியாகும் ஒரு அடடே நாளிதழ்- என்ன விலை? ஒரு சுவாரஸ்ய பின்னணி!
Popsicle : குச்சி ஐஸ் 11 வயது சிறுவனால் முதலில் கண்டுபிடிக்கப்பட்டதா? ஒரு ஆச்சரிய வரலாறு

இந்த நியூஸ்பேப்பரில் என்னென்ன இருக்கும்?

இந்த நியூஸ்பேப்பரில் மொத்தம் 20 பக்கங்கள். தினம்தோறும் வெளியாகும் நியூஸ்பேப்பரை போலவே இதிலும் காலங்கள் இருக்கிறது.

இதில் நகைச்சுவைகள், கட்டுரைகள், சொல் விளையாட்டுகள் போன்றவை இருக்கும். கடந்த நான்கு ஆண்டுகளில் என்னென்ன சம்பவங்கள், முக்கிய நிகழ்வுகள் நடந்ததோ, அவை செய்திகளாக வந்திருக்கும்.

தவிர அரசியல், பொருளாதாரம், சர்வதேச நிகழ்வுகள், எண்ட்டெர்டெயின்மெண்ட், விளையாட்டு செய்திகளும் இருக்கும்.

இதில் வேடிக்கை என்னவென்றால், ஒரு பிரதியில் வெளியான சொல் விளையாட்டுக்கான விடைகள், அடுத்த பிரதியில் தான் வெளியாகும். எனில் மக்கள் 4 வருடங்கள் காத்திருக்க வேண்டும்!

4 ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே வெளியாகும் ஒரு அடடே நாளிதழ்- என்ன விலை? ஒரு சுவாரஸ்ய பின்னணி!
எலிசபெத் : உலக போரில் அமெரிக்கா வெற்றிபெற காரணமான பெண்- இவரின் கதை மறைக்கப்பட்டது ஏன்?

சரி இந்த நாளிதழ் வெற்றிபெற்றதா?

தகவல்களின் அடிப்படையில் ஆமாம் என்று தான் சொல்லவேண்டும். 2020ஆம் ஆண்டின் பிரதிக்கு பிரான்ஸ், பெல்ஜியம், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பகுதிகள் பெரும் வரவேற்பு இருந்தது. சுமார் 200,000 பிரதிகள் விற்கப்பட்டுள்ளன, இதனால், விளம்பரதாரர்களின் உதவி இல்லாமலேயே லாபத்தை ஈட்டியுள்ளது இந்த நாளிதழ்.

ஈட்டும் லாபத்தில் ஒரு பங்கை மாற்றுதிறனாளிகளுக்கு உதவும் தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு அளித்துவருகிறார்கள் நாளிதழ் உரிமையாளர்கள்.

விலை என்ன?

ஒரு பிரதியின் விலை 4.80 யூரோக்கள். தொடர்ந்து படிக்க விரும்புபவர்களுக்கு நீண்ட கால சப்ஸ்கிரிப்ஷன்களும் உண்டு!

4 ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே வெளியாகும் ஒரு அடடே நாளிதழ்- என்ன விலை? ஒரு சுவாரஸ்ய பின்னணி!
சுபாஷ் சந்திர போஸ்: "என் இதயத்தின் ராணி நீ தான்!" நேதாஜியை ஆட்டிப்படைத்த ஆஸ்த்ரிய காதல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com