Rolex: உலகப்போருக்கும் வாட்சுக்கும் என்ன தொடர்பு? Wrist Watch உருவான கதை இது தான்!

கைகடிகாரங்கள் முதலில் பெண்களின் அலங்கார அணிகலனாக தான் இருந்தது என்பது தெரியுமா? உலகப்போர் தான் கைகடிகாரத்தை ஆண்களுக்கான ஒரு அணிகலனாகவும் மாற்றியது. இந்த கைக் கடிகாரங்கள் உருவான கதை என்ன? இங்கு பார்க்கலாம்.
Rolex: உலகப்போருக்கும் வாட்சுக்கும் என்ன தொடர்பு?  Wrist Watch உருவான கதை இது தான்!
Rolex: உலகப்போருக்கும் வாட்சுக்கும் என்ன தொடர்பு? Wrist Watch உருவான கதை இது தான்! canva

நாம் கையில் அணியும் கடிகாரம் தற்போது வித விதமான மாடல்களில், விலைகளில் நிறங்களில் வருகின்றன. ஆண்கள், பெண்கள், குழந்தைகள், யூனிசெக்ஸ் என வகைப்படுத்தப்பட்டும் வாட்சுகள் தயாரிக்கப்படுகின்றன.

ரோலெக்ஸ், கால்வின் க்ளெயின், ஜோக்கர் அண்ட் விட்ச், ஃபாஸ்டிராக் என பல சர்வதேச வாட்ச் பிராண்டுகளை நாம் கேள்விபடுகிறோம், இதன் விலையும் சில ஆயிரம் முதல், சில லட்சங்களை தொடும்.

ஆனால், கைகடிகாரங்கள் முதலில் பெண்களின் அலங்கார அணிகலனாக தான் இருந்தது என்பது தெரியுமா? உலகப்போர் தான் கைகடிகாரத்தை ஆண்களுக்கான ஒரு அணிகலனாகவும் மாற்றியது.

இந்த கைக் கடிகாரங்கள் உருவான வரலாறு என்ன? இங்கு பார்க்கலாம்.

Rolex: உலகப்போருக்கும் வாட்சுக்கும் என்ன தொடர்பு?  Wrist Watch உருவான கதை இது தான்!
சுபாஷ் சந்திர போஸ்: "என் இதயத்தின் ராணி நீ தான்!" நேதாஜியை ஆட்டிப்படைத்த ஆஸ்த்ரிய காதல்

மெக்கானிக்கல் வாட்சுகள்:

1275ஆம் ஆண்டு இங்கிலாந்தில் தான் மெக்கானிக்கல் கடிகாரங்கள் உருவாக்கப்பட்டன. அதுவரை சன் டயல், வாட்டர் க்ளாக்குகள் ஆகியவற்றை வைத்து தான் நேரத்தை கணித்தனர்.

இந்த மெக்கானிக்கல் கடிகாரங்கள், நிமிடங்களை கணக்கிட்டன. இவற்றில் டயல் கிடையாது. இங்கிலாந்தை தொடர்ந்து, இத்தாலி, மூன்று வகையான கடிகாரங்களை வடிவமைத்தது.

ஒன்று வானியல் ( astronomical) கடிகாரம். இரண்டாவது chime எனப்படும் மணியோசை எழுப்பும் கடிகாரம் மற்றும், மூன்றாவது சூரிய உதயம், மணிநேரம் மற்றும் நாட்களை கணிக்கும் கடிகாரம்.

இவை 14,15 ஆம் நூற்றண்டுகளில் தயாரிக்கப்பட்டன. அதன் பிறகு 1462 ஆம் ஆண்டு தான் முதன் முதலில் பாக்கெட் வாட்சுகள் தயாரிக்கப்பட்டன.

1500 ஆம் ஆண்டு மத்தியில், சுவிஸ் வாட்ச் துறை அறிமுகமானது. அந்த நூற்றண்டில், வெள்ளி, வெண்கலம் உள்ளிட்ட உலோகங்கள் அதிகமாக விரும்பப்பட்டன.

அதே சமயத்தில் அணிகலன்களின் மீது தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதனால் அணிகலன் வடிவமைப்பாளர்கள் வாட்சுகளை தயாரிக்கத் தொடங்கினர்.

பாக்கெட் வாட்ச்

1462 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பாக்கெட் வாட்சுகள், முதலில் மணிநேரத்தை (Hour) மட்டுமே காட்டின. 1680 ஆம் ஆண்டு தான் மினிட் ஹேண்ட் அறிமுகமானது.

இவை கழுத்தை சுற்றி சங்கிலி போல அணியப்பட்டன. இங்கிலாந்து அரசர் இரண்டாம் சார்லஸ், அவர் அணிந்த கோட்டின் மீது இந்த கடிகாரத்தை அணிந்தார்.

இவை கடிகாரங்களுக்கு பாதுகாப்பும் அளித்தன, ஆண்களின் உடைகளில் இருக்கும் பாக்கெட்டுகளில் இவை வைக்கப்பட்டன. இப்படி தான் பாக்கெட் வாட்ச் என்ற பெயர் வந்தது.

ரிஸ்ட் வாட்ச் எப்படி வந்தது?

1810 ஆம் ஆண்டு நேபில்ஸ் நாட்டின் அரசிக்காக முதன்முதலில் ரிஸ்ட் வாட்ச் தயாரிக்கப்பட்டன.

ஹங்கேரி நாட்டின் கவுண்டஸ் கோஸ்கோவிச் என்பவருக்காக தான் 1868 ஆம் ஆண்டு படேக் பிலிப் என்பவரால் முதன் முதலில் வாட்ச் தயாரிக்கப்பட்டது என கின்னஸ் உலக சாதனைகள் கூறுகிறது.

19 ஆம் நூற்றாண்டில், தொழில்நுட்பம் வளர வளர, மலிவான விலைகளில் கிடைத்த பொருட்களை வைத்து வாட்சுகள் தயாரிக்கப்பட்டன. இப்படி தயாரிக்கப்பட்ட கடிகாரங்களின் பாதுகாப்பு சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

அதுவரை கடிகாரங்களுக்கு கண்ணாடி திரை போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இல்லை. அமெரிக்காவின் வால்தம் வாட்ச் கம்பனி, கடிகார தயாரிப்பில் முன்னோடியாக திகழ்ந்தது.

இந்த நிறுவனம், ராணுவ வீரர்கள் அல்லாமல், சாதாரண மக்களுக்கும் வாட்சுகளை தயாரித்தது

Rolex: உலகப்போருக்கும் வாட்சுக்கும் என்ன தொடர்பு?  Wrist Watch உருவான கதை இது தான்!
எலிசபெத் : உலக போரில் அமெரிக்கா வெற்றிபெற காரணமான பெண்- இவரின் கதை மறைக்கப்பட்டது ஏன்?

பெண்களின் அணிகலன்:

பெண்கள் மட்டுமே கை கடிகாரங்களை அணிந்தனர். அவை பெண்களின் அலங்கார பொருட்களில் ஒன்றாக இருந்ததே தவிர, நேரம் பார்க்கும் கருவியாக அப்போது அவை பயன்படுத்தப்படவில்லை.

ராணுவம், கடற்ப்படை வீரர்கள், போரின்போது பாக்கெட் வாட்சை பயன்படுத்தினர். ஆனால், இவற்றை ஒவ்வொரு முறையும் பாக்கெட்டிலிருந்து எடுத்து நேரம் பார்க்க அவர்களுக்கு சிரமமாக இருந்தது.

அப்போது, 1880 ஆம் ஆண்டு ஜெர்மன் கடற்ப்படைக்கு, முதன் முதலாக கைக்கடிகாரங்கள் வழங்கப்பட்டன. இவை பாக்கெட் வாட்சுகளில் இருந்து சற்றே மாற்றி வடிவமைக்கப்பட்டவை.

பாக்கெட் வாட்ச், கைகளோடு இணைக்கும்படியாக வடிவமைக்கப்பட்டன. இதுவே ஆண்களுக்கான ரிஸ்ட் வாட்ச் தயாரிப்புக்கு அடித்தளமாக அமைந்தது எனலாம்.

இந்த மாற்று அவர்களுக்கு சாதகமாக அமையவே, பிரேஸ்லட்களுடன் இணைக்கப்பட்ட சிறிய டைம்பீஸ்களை தயாரிக்க முடிவு செய்தனர். இதற்காக சுவிட்சர்லாந்திலிருந்து பெர்லினுக்கு வாட்ச் தயாரிக்க ஆட்கள் வரவழைக்கப்பட்டனர்.

கடிகாரமும் உலகப்போரும்:

இதன் பிறகு 1917ஆம் ஆண்டில், கார்டியர் நிறுவனம் டேங்க் வாட்சை தயாரித்தது. இவை முதலாம் உலகப்போரின்போது பயன்படுத்தப்பட்ட டாங்கிகளின் வடிவத்தால் ஈர்க்கப்பட்டவை.

கைக்கடிகாரங்கள் முதலாம் உலகப்போரின்போது ஒரு முக்கிய ராணுவ கருவியாக திகழ்ந்தன என வரலாறு சொல்கிறது.

ராணுவ வீரகள், கண்டிப்பாக சொந்தமாக வாட்ச் வைத்திருக்கவேண்டும்.

ராணுவ வீரர்கள் வாட்ச்களை அதிகமாக பயன்படுத்தியதை வாட்ச் நிறுவனங்கள் தங்களது லாபத்திற்கு சாதமாக மாற்றிக்கொண்டது.

ராணுவ வீரர்களுக்கான கடிகாரங்களை தயாரித்து விளம்பரப்படுத்தினர். இந்த விளம்பரங்கள் மக்கள் மனதில் இடம் பிடித்தது. அவர்கள் மெல்ல பாக்கெட் வாட்ச் கலாச்சாரத்திலிருந்து கைகடிகாரத்திற்கு மாறினர்.

அதன் பிறகு 1923 ஆம் ஆண்டு முதல் ஆட்டோமாட்டிக் வாட்ச் அறிமுகமானது.

Rolex: உலகப்போருக்கும் வாட்சுக்கும் என்ன தொடர்பு?  Wrist Watch உருவான கதை இது தான்!
Gol Gumbaz: தென்னிந்தியாவின் தாஜ் மஹால் என்றழைக்கப்படும் ஒற்றை அறை கல்லறை - வரலாறு என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com