டெக்ஸாஸ்: மனைவியின் நண்பர்கள் மீது வழக்கு தொடுத்த முன்னாள் கணவர் - ஏன்?

டெக்ஸாஸ் மாகாணத்தைச் சேர்ந்த மார்க்கஸ் சில்வா என்கிற நபர், 3 பெண்கள் மீது கொலைக் குற்றத்தைச் சுமத்தியுள்ளார்.
டெக்ஸாஸ்: மனைவியின் நண்பர்கள் மீது வழக்கு தொடுத்த முன்னாள் கணவர் - ஏன்?
டெக்ஸாஸ்: மனைவியின் நண்பர்கள் மீது வழக்கு தொடுத்த முன்னாள் கணவர் - ஏன்?ட்விட்டர்

பெண்கள் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது அவர்கள் விருப்பம். அது அவர்களுடைய உடல் என்பதால், ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ளலாமா இல்லையா என்கிற உரிமையும் அவர்களுடையதே என்பது ஒரு பொது வாதம்.

ஆனால், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலேயே, ஒரு சில மாகாணங்களில் கருவைக் கலைப்பது சட்டப்படி குற்றம் என சட்டங்கள் திருத்தப்பட்டு இருக்கின்றன.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் சட்டம் நடைமுறையில் இருக்கிறது. அங்கு கருவைக் கலைப்பது சட்ட விரோதம்.

மருத்துவ ரீதியிலான அவசர காலத்தின் போது மருத்துவமனைகளின் அறிவுறுத்தலின் பேரில் மட்டும் கருவைக் கலைக்க அனுமதி உண்டு.

இந்த சட்டத்தை மீறி ஒருவர் கருவைக் கலைத்தாலோ அல்லது ஒரு பெண் தன் வயிற்றில் வளரும் குழந்தையைக் கலைக்க வேறு ஒருவர் உதவினாலோ அது தண்டனைக்குரிய குற்றம். அவர்களுக்கு வாழ்நாள் சிறையோடு, 1 லட்சம் அமெரிக்க டாலர் வரை அபராதம் விதிக்கப்படலாம் என டெக்ஸாஸ் மாகாணாச் சட்டம் சொல்கிறது.

ஒரு புதிய வழக்கு:

டெக்ஸாஸ் மாகாணத்தைச் சேர்ந்த மார்க்கஸ் சில்வா என்கிற நபர், 3 பெண்கள் மீது கொலைக் குற்றத்தைச் சுமத்தியுள்ளார். அதோடு, தன் முன்னாள் மனைவி கருவைக் கலைக்க அவரது நண்பர்கள் மாத்திரை மருந்துகளை வாங்கிக் கொடுத்ததாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

இப்படி ஒரு புகார் கொடுக்கப்பட்டு இருப்பது, டெக்ஸாஸ் மாகாணத்தில் இதுவே முதல் முறையேன சில சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் தான், தெற்கு கரோலினாவைச் சேர்ந்த பெண் ஒருவர், தான் வயிற்றில் வளரும் கருவைக் கலைக்க மாத்திரை எடுத்துக் கொண்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர்: புதிய வகை கரப்பான் பூச்சி கண்டுபிடிப்பு - pokemon பெயர் வைத்தது ஏன் தெரியுமா?

டெக்ஸாஸ்: மனைவியின் நண்பர்கள் மீது வழக்கு தொடுத்த முன்னாள் கணவர் - ஏன்?
புதுமண தம்பதிகளுக்கு ஆணுறை மற்றும் கருத்தடை மாத்திரைகள் வழங்கும் அரசு - எங்கே?

நீதிமன்றத்தை நாடி இருக்கும் மார்க்கஸ் சில்வா தரப்பில், டெக்ஸாஸ் மாகாணத்தில் கருக்கலைப்பு சட்டத்தை இயற்ற முக்கிய பங்களித்த முன்னாள் டெக்ஸாஸ் மாகாணத்தின் சாலிசிட்டார் ஜெனரல் ஜானதன் மிட்செல் ஆஜர் ஆகிறார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு, மே மாதம் மார்க்கஸ் சில்வாவும், அவரது மனைவியும் விவாகரத்துக்கு விண்ணப்பித்தனர். 2022 ஜூலை மாதம் சில்வாவின் மனைவி தான் கரப்பமாக இருந்தது தெரிய வந்தது.

கடந்த 2023 பிப்ரவரியில் தான் மார்க்கஸ் சில்வாவுக்கும், அவரது மனைவிக்கும் விவாகரத்து உறுதி செய்யப்பட்டது.

தன் முன்னாள் மனைவியின் இரண்டு நண்பர்கள், அவர் வயிற்றில் வளர்ந்த கருவைக் கலைக்க மாத்திரைகளைத் தருவித்து உதவியதாகவும், ஒருவர் அந்த மாத்திரைகளைக் கொண்டு வந்து கொடுத்ததாகவும் மார்க்கஸ் சில்வா குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த வழக்கில் தனக்கு நஷ்ட ஈடாக 1 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

நல்லவேளையாக இப்படிப்பட்ட சிக்கலான சட்ட திட்டங்கள் எல்லாம் இந்தியாவில் இல்லை. ஒருவேளை இருந்திருந்தால், எத்தனை ஆண்களும், பெண்களும் நீதிமன்றத்தை நாடி இருப்பார்களோ தெரியவில்லை.

டெக்ஸாஸ்: மனைவியின் நண்பர்கள் மீது வழக்கு தொடுத்த முன்னாள் கணவர் - ஏன்?
Spain : பெற்றோரின் அனுமதியின்றி கருக்கலைப்பு செய்யலாம் - ஸ்பெயின் அரசு ஒப்புதல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com