
Students
உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட பாகிஸ்தான் மாணவர்கள் இந்திய தேசிய கொடியை ஏந்தியது போல சமூக ஊடகங்களில் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
சமூக ஊடகங்களில் மட்டும் அல்ல, சில பத்திரிகைகள், தொலைக்காட்சிகளும் அந்த புகைப்படத்தை பயன்படுத்தின.
இது உண்மையா? ஆம். ஆனால், பாதி உண்மை.
பாகிஸ்தான் மாணவர்கள் மட்டுமல்ல, துருக்கி மாணவர்களும் உக்ரைனில் இருந்து தப்பிக்க இந்திய தேசிய கொடியை ஏந்தி இருக்கிறார்கள்.
ஆனால் சமூக ஊடகங்களில் பகிரப்படும் புகைப்படங்கள் உண்மை அல்ல.
சந்தேகமே வேண்டாம் அது இந்திய மாணவர்களுடையது.
உக்ரைனில் இருந்து ஹங்கேரி சென்ற இந்திய மாணவர்களின் புகைப்படம் அது. அவர்கள் புடாபஸ்ட் வழியாக இந்தியா திரும்பிய மாணவர்கள்.