எகிப்து: கிசா பிரமிட்டில் ஒளிந்திருக்கும் 9மீ ரகசிய பாதை- ஆராய்ச்சியாளர்கள் சொல்வதென்ன?

கிட்ட தட்ட 9 மீட்டர் நீளம் (30 அடி) உள்ள ஒரு ரகசிய பாதையை கிசா பிரமிட்டின் உள்ளே தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்
எகிப்து: கிசா பிரமிட்டில்  ஒளிந்திருக்கும் 9மீ ரகசியப் பாதை- ஆராய்ச்சியாளர்கள் சொல்வதென்ன?
எகிப்து: கிசா பிரமிட்டில் ஒளிந்திருக்கும் 9மீ ரகசியப் பாதை- ஆராய்ச்சியாளர்கள் சொல்வதென்ன?ட்விட்டர்

எகிப்து கிசா பிரமிட்டின் உள்ளே ரகசிய பாதை ஒன்று உள்ளதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

எகிப்து என்றவுடன் நம் நினைவுக்கு வருவது மம்மிக்கள், நைல் நதி மற்றும் பிரமிடுகள் தாம். பழங்கால எகிப்தியர்களின் அடையாளமான பிரமிடுகள் சுமார் 4500 ஆண்டுகள் பழமையானது எனக் கூறப்படுகிறது.

இதன் வடிவமைப்பு, உள்ளடக்கியிருக்கும் ரகசியங்கள் என அனைத்துமே இன்னும் விவரிக்க முடியாதபடியே இருக்கின்றன.

இந்நிலையில், கிட்ட தட்ட 9 மீட்டர் நீளம் (30 அடி) உள்ள ஒரு ரகசிய பாதையை கிசா பிரமிட்டின் உள்ளே தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர் என ராய்ட்டர்ஸ் செய்தி தளத்தின் அறிக்கை கூறுகிறது

எகிப்து: கிசா பிரமிட்டில்  ஒளிந்திருக்கும் 9மீ ரகசியப் பாதை- ஆராய்ச்சியாளர்கள் சொல்வதென்ன?
எகிப்து : மம்மிகளில் கிடைத்த தங்க நாக்குகள் - அறிஞர்களை வியக்க வைக்கும் கலாச்சார புதிர்!

இந்த பாதை இன்னும் பல மர்ம முடிச்சுகளை அவிழ்க்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் ஸ்கேன் பிரமிட்ஸ் திட்டத்தில் நிபுணர்கள் கிசா பிரமிட்டை ஆராய்ந்து வருகின்ரனர்.

அகச்சிவப்பு தெர்மோகிராபி, 3டி சிமுலேஷன்கள் மற்றும் காஸ்மிக்-ரே இமேஜிங் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நிபுணர்களால் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது

ரகசிய பாதை:

கிசா பிரமிட்டின் பிரதான நுழைவுவாயிலின் அருகே கண்டறியப்பட்டுள்ளது இந்த ரகசியப்பாதை. 9 மீட்டர் தூரம் இருக்கும் இந்த பாதை (30 அடி நீளம்) பிரமிட் வடிவமைப்பு குறித்த தகவல்களை வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அதன் தாழ்வாரத்தின் முகப்பில் அமைந்திருக்கும் கேம்பிள் சுண்ணாம்புக்கல் அமைப்பிற்கான உபயோகத்தையும் இது விள்ளக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது

இது குறித்து பேசிய ஆராய்ச்சியாளர்கள்,

”பிரதான நுழைவு வாயிலில் இருக்கும் எடையை மறுபகிர்வு செய்யும் நோக்கில் இந்த ரகசியப்பாதை கட்டப்பட்டிருக்கலாம்” என தெரிவித்துள்ளனர்.

இந்த ஆராய்ச்சியை அவர்கள் தொடரவுள்ளதாக கூறியுள்ள நிலையில், இது போல வேறு ஏதேனும் பாதை ஒளிந்திருக்கிறதா என்பதையும் கண்டறியவுள்ளோம் எனக் கூறியிருக்கின்றனர்

எகிப்து: கிசா பிரமிட்டில்  ஒளிந்திருக்கும் 9மீ ரகசியப் பாதை- ஆராய்ச்சியாளர்கள் சொல்வதென்ன?
இமாச்சல் : மம்மி சங்கா முதல் காந்த மலை வரை - அவிழ்க்க முடியாத 5 மர்ம முடிச்சுகள் !

கிசா பிரமிடு:

எகிப்து பிரமிடுகளில் கிசா பிரமிடு மிகப் பெரியது. கிட்டதட்ட 23 லட்சம் கற்களால் கட்டப்பட்டது. கிமு 2560 இல் பார்வோன் குஃபு காலத்தில் எழுப்பப்பட்டபோது 146 மீட்டர் உயர்ம் இருந்தது. தற்போது இதன் உயரம் 139 மீட்டராக இருக்கிறது.

1889ல் ஈஃபிள் டவர் கட்டப்படுவதற்கு முன்பு வரை மனிதர்களால் வடிவமைக்கப்பட்ட மிக உயர்ந்த வடிவமைப்பாக இருந்தது கிசா பிரமிடு

எகிப்து: கிசா பிரமிட்டில்  ஒளிந்திருக்கும் 9மீ ரகசியப் பாதை- ஆராய்ச்சியாளர்கள் சொல்வதென்ன?
எகிப்து மம்மிகளின் மர்ம ரகசியங்கள் : தோன்றியது எப்படி? உலகை மிரட்டும் ஆதாரங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com