
உக்ரைன் மீது படையெடுப்பை மேற்கொண்டதனால் ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக பல சதித்திட்டங்க்கள் மேற்கொள்ளப்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அவரது உயிருக்கு ஆபத்து இருக்கிறதா என கண்காணிக்க அவரது மலம் கூட சோதனை செய்யப்படுகிறது. புதினுக்கு காதலிகளும் பலர் உள்ளனர்.
இப்போது புதின் யாருடன் இருக்கிறார், எங்கு வசிக்கிறார் போன்ற தகவல்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியாகியிருக்கின்றன.
ஒலிம்பிக் பதக்கம் வென்ற ரிதமிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான அலினா கபேவா உடன் புதின் இருப்பதாக தி ப்ராஜக்ட் என்ற ரஷ்ய செய்திதளம் கூறியுள்ளது.
புதினும் அவரது காதலியும் வால்டை என்ற ஏரிக்கு அருகில் உள்ள சொகுசு மாளிகையில் வசித்து வருகின்றனர். இந்த மாளிகை 1.2 சதுர கிலோமீட்டர் பரப்பில் அமைந்துள்ளது.
இந்த மாளிகை ரஷ்ய பாரம்பரிய வடிவமைப்பைக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மாஸ்கோவிற்கு வடமேற்கில் 400 கிலோமீட்டர் தொலைவில் இந்த இடம் அமைந்துள்ளது.
வீட்டில் புதினின் குழந்தைகளும் இருப்பதாக பெயர் தெரிவிக்காத அதிகாரிகள் கூறியதாக தி புராஜெக்ட் தளம் கூறுகிறது.
இந்த மாளிகையில் விளையாடுவதற்காக பெரிய இடம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. செயற்கைகோள் புகைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன.
இந்த மாளிகை புதினின் மிகவும் தனிப்பட்ட வசிப்பிடமாகும். மேலும் அவருக்கு உயர் பாதுகாப்பு வசதிகள் இருக்கின்றன. அவர் எவ்வித பொது சந்திப்புகளையும் இங்கு நிகழ்த்துவதில்லை.
இந்த மாளிகை குறித்து எதிர்கட்சித் தலைவரான அலெக்ஸி நவல்னி முதன்முதலாக கூறினார்.
ரஷ்ய அதிபர் புதின் மற்றும் அவருடன் இப்போது வசிக்கும் அலினா கபேவாவும் இதற்கு முன்னர் தாங்கள் காதலிப்பதாக கூறியதில்லை. இருவருமே அது மாதிரியான கருத்துகளை மறுத்துள்ளனர்.
சில உயர்மட்ட அதிகாரிகாளுக்கு மட்டுமே இந்த விஷயங்காள் தெரியும். 2014ம் ஆண்டு போதிய அனுபவம் இல்லாமல் கூட ரஷ்யாவின் தேசிய ஊடகக் குழுவை வழிநடத்தும் பதவியில் அலினா அமரவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அலினாவுக்கு ரஷ்யா முழுவதும் பல பிரம்மாண்ட சொத்துபத்துகள் இருக்கிறதாம்.
"ரகசியமானது காதல்" என்ற பாடல் அதிபர்களுக்கு கூட பொருந்தும் போல...
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust