அமேசான் அதிசயம்: 'கொதிக்கும் நதி' தங்க நகருக்கு செல்லும் வழியா? - அறிவியல் சொல்வதென்ன?

அமேசானில் மறைந்திருக்கும் தங்க நகரத்தின் பகுதி தான் இந்த ஆறு என புராணங்கள் கூறுகின்றன. பழங்குடி மக்கள் இதற்கு ஆன்மிக சக்தி இருப்பதாக நம்புகின்றனர். இந்த கொதிக்கும் தண்ணீர் குறித்து 3 அறிவியல் தியரிகள் இருக்கின்றன.
அமேசான் அதிசயம்: 'கொதிக்கும் நதி' தங்க நகருக்கு செல்லும் வழியா? - அறிவியல் சொல்வதென்ன?
அமேசான் அதிசயம்: 'கொதிக்கும் நதி' தங்க நகருக்கு செல்லும் வழியா? - அறிவியல் சொல்வதென்ன?Twitter

இயற்கையில் பல விஷயங்கள் நம்மால் நம்பமுடியாத வியப்பூட்டுவதாக இருக்கின்றன. பல நிலப்பரப்புகள் நம்மை மெய்மறந்து ரசிக்க வைக்கின்றன.

மகாராஷ்டிராவின் ஒளிரும் காடுகள், மாலத்தீவின் ஒளிரும் அலைகள், ரகசியங்களை உள்ளேக் கொண்டிருக்கும் பெர்முடா முக்கோணம், வட துருவ ஒளி, நியூசிலாந்தில் இயற்கையாக வெளிச்சம் இருக்கும் பனிக்குகைகள், நில நடுக்கத்துக்கும் அசையாத மச்சுபிச்சு, அணையாமல் எரியும் நெருப்புக் குழிகள் என பல இயற்கை அற்புதங்களைக் குறித்து நம் தளத்தில் பார்த்துள்ளோம் அந்த வரிசையில் இணைகிறது பெருவில் உள்ள சூடானஆறு.

இயற்கை அற்புதங்களைப் பற்றி பேசினால் தென்னமெரிக்க கண்டம் குறித்து பேசாமல் தவிர்க்க முடியாது. குறிப்பாக அமேசான் காடுகள். பெருவில் உள்ள அமேசான் காட்டில் தான் இந்த கொதிக்கும் ஆறு இருக்கிறது. இதனை ஷனாய் டிம்பிஸ்கா (Shanay-Timpishka) என்று அழைக்கின்றனர்.

அமேசான் காட்டை 3 நாடுகள் பகிர்ந்துகொள்கின்றன என்பது நமக்குத் தெரியும். ஆனால் யாரும் அமேசானின் ஆழம் வரை சென்று ஆராய்ந்ததில்லை.

அமேசான் காடு மனித குலத்துக்கு காட்ட இன்னும் பல அற்புதங்களை தன்னகத்தில் வைத்திருக்கலாம். முதலில் இந்த கொதிக்கும் நதிக்கு பின்னிருக்கும் மர்மம் என்ன என்பதைக் காணலாம்.

பெருவின் கொதிக்கும் நெருப்பு பற்றி பல உண்மைகளும் கட்டுக்கதைகளும் உலாவுகின்றன. அமேசானில் மறைந்திருக்கும் தங்க நகரத்தின் பகுதி தான் இந்த ஆறு என புராணங்கள் கூறுகின்றன.

ஆனால் அமேசான் காட்டை ஆராய்ந்த புவியியலாளர்கள் இந்த ஆறு அமேசானுக்கு நடுவில் ஆழமான அடர்ந்த காட்டில் இருந்து தொடங்குவதாக தெரிவித்துள்ளனர்.

ஷனாய் டிம்பிஸ்கா நதிக்கரையில் ஷாமன்முறையில் வாழும் பழங்குடிமக்கள் இருக்கின்றனர். அவர்கள் இந்த நதியை Mayantuyacu என்று அழைக்கின்றனர். இதற்கு பிரம்மாண்டமான ஆன்மிக சக்தி இருப்பதாக அவர்கள் கருதுகின்றனர். காட்டின் மொத்த ஆற்றலுக்கும் இந்த நதிதான் காரணம் என்றும் சக்தி வாய்ந்த ஷாமன்கள் மட்டுமே இந்த காட்டுக்குள் செல்ல முடியுமென்றும் கருதினர். உண்மையில் ஷாமன்கள் அல்லாத மக்கள் இந்த ஆற்றுக்கு செல்ல அஞ்சினர்.

இந்த கொதிக்கும் ஆறு குளிர்ந்த நீரோடைகளாக தொடங்கி போகும் வழியில் வெப்பமடைகிறது. இதன் பாதையில் சில வெப்ப ஊற்றுகள் இருப்பதாக கூறப்படுகிறது. இரவு நேரத்தில் ஷனாய் டிம்பிஸ்கா ஆறு ஓரளவு குளிர்ச்சியடையும் என்று கூறப்படுகிறது.
மொத்தம் 9 கிலோமீட்டர் நீளமான இந்த நதியில் 6.24 கிலோமீட்டர் கொதிக்கும் நீராக இருக்கிறது.


இந்த நதியின் பெரும்பாலான இடங்களில் இருக்கும் வெப்பம் பெரிய பாலூட்டிகளின் உயிரைப் பறிக்காது. ஆனால் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். சிறிய விலங்குகள் இதில் விழுந்து இறப்பது அன்றாடாமாக நடந்து வருகிறது.

அமேசான் அதிசயம்: 'கொதிக்கும் நதி' தங்க நகருக்கு செல்லும் வழியா? - அறிவியல் சொல்வதென்ன?
சீனா, மெக்சிகோ : பூமிக்கு பல நூறு அடிகளுக்கு கீழே இயங்கும் அற்புத உலகம் குறித்து தெரியுமா?


இந்த கொதிக்கும் ஆற்றின் உருவாக்கம் குறித்து 3 முக்கிய கருதுகோள்களை ஆய்வாளர்கள் முன் வைக்கின்றனர்.

முதலாவது எரிமலைகளால் ஏற்படக் கூடிய மக்மா அமைப்பின் விளைவாக இந்த ஆறு சூடாக இருக்கலாம் என்பது. பெருவில் அதிகமாக எரிமலைகள் இருப்பதும் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதும் குறிப்பிடத்தக்கது.


இரண்டாவது, இந்த ஆற்றுக்கு பூமியின் அடி ஆழத்தில் இருந்து வேகமாக நீர்சுரப்பு இருக்கலாம் என்பது. பூமியின் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க வெப்பம் அதிகரிக்கும் என்பது நாம் அறிந்ததே!

அமேசான் அதிசயம்: 'கொதிக்கும் நதி' தங்க நகருக்கு செல்லும் வழியா? - அறிவியல் சொல்வதென்ன?
சிறிய நாட்டில் குவிந்திருக்கும் செல்வம் : வரி இல்லை, கல்வி, மருத்துவம் இலவசம் - எங்கே?


மூன்றாவது, இது ஒரு எண்ணெய் வயல் விபத்தால் ஏற்பட்டிருக்கலாம். இந்த நதியில் இருந்து 2,3 கிலோமீட்டர் தொலைவில் பழமையான எண்ணெய் வயல்கள் இருக்கிறது.


இங்கு பணியாற்றிய நிறுவனங்கள் எண்ணெய் மற்றும் இயற்கையை வாயுவை உறிஞ்சும் பொருட்டு துளையிட்டு புவியின் வெப்ப மண்டலத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய பிறகு கைவிட்டிருக்கின்றனர் எனக் கூறுகின்றனர்.


இந்த மூன்று தியரிகளில் இரண்டாவது பெரும்பாலும் நம்பப்படுகிறது. பூமியில் இருந்து சீரற்ற முறையில் நீர் ஊற்றெடுப்பதே காரணம் என்கின்றனர்.

யாருக்குத் தெரியும் பழங்குடி மக்கள் நம்புவதைப் போல ஷனாய் டிம்பிஸ்கா தங்க நகரின் பகுதியாகவோ, ஆன்மிக சக்திகள் உள்ளதாகவோ கூட இருக்கலாம்.

அமேசான் அதிசயம்: 'கொதிக்கும் நதி' தங்க நகருக்கு செல்லும் வழியா? - அறிவியல் சொல்வதென்ன?
வியட்நாம் : மனித காலடி தடமே பதியாத உலகின் மிக பெரிய குகை - உள்ளே இருக்கும் தனி ஒரு உலகம்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com