”பிரதமர் மோடி மீது புகார் கொடுக்கணும்” பாகிஸ்தான் நடிகை ட்வீட் - டெல்லி போலீஸ் பதில் என்ன?

பாகிஸ்தான் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவுகையில், பாகிஸ்தான் நடிகை ஒருவர் பிரதமர் மோடிக்கு எதிராக புகாரளிக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.
Pakistani Actress Says She Wants To Complain Against PM Modi, Delhi Police Has EPIC Reply
Pakistani Actress Says She Wants To Complain Against PM Modi, Delhi Police Has EPIC ReplyTwitter

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் பெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த களவரங்களுக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி மீது புகார் அளிக்கக் கோரி பாகிஸ்தான் நடிகை ட்வீட் செய்ததற்கு டெல்லி காவல்துறை அளித்த பதில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஊழல் வழக்கு தொடர்பாக நேற்று இஸ்லாமாபாத் நீதிமன்றத்துக்கு நேரில் ஆஜராக வந்தார்.

இம்ரான் கான்
இம்ரான் கான்Twitter

அப்போது துணை ராணுவப்படையினர் நீதிமன்ற வளாகத்திலேயே இம்ரான் கானை கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கை அவரின் கட்சியிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

பாகிஸ்தான் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவுகையில், பாகிஸ்தான் நடிகை ஒருவர் பிரதமர் மோடிக்கு எதிராக புகாரளிக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.

Pakistani Actress Says She Wants To Complain Against PM Modi, Delhi Police Has EPIC Reply
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை கொல்ல சதியா? என்ன நடக்கிறது அங்கே?

பாகிஸ்தான் நடிகை சேஹர் ஷின்வாரி (Sehar Shinwari) என்பவர் தன் ட்விட்டர் பக்கத்தில்,

டெல்லி காவல்துறையின் ஆன்லைன் முகவரி யாருக்காவது தெரியுமா? எனது நாடான பாகிஸ்தானில் குழப்பத்தையும், தீவிரவாதத்தையும் பரப்பும் இந்திய பிரதமர், இந்திய உளவு அமைப்பின் (RAW) மீது நான் புகாரளிக்க வேண்டும்.

இந்திய நீதிமன்றங்கள் சுதந்திரமாக இருக்கும் பட்சத்தில் இந்திய உச்ச நீதிமன்றம் எனக்கு நீதி வழங்கும் என்று நான் நம்புகிறேன்" என்று ட்வீட் செய்திருந்தார்.

Pakistani Actress Says She Wants To Complain Against PM Modi, Delhi Police Has EPIC Reply
பாகிஸ்தான் என்ன உங்கள் அடிமையா - இந்தியாவிடம் இப்படி கேட்க முடியுமா ? இம்ரான் கண்டனம்

அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் நடிகையின் ட்வீட்டுக்கு ட்விட்டரில் பதிலளித்த டெல்லி போலீஸ்,

பாகிஸ்தானில் எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று நாங்கள் பயப்படுகிறோம். ஆனால், நாங்கள் ஒன்றைத் தெரிந்துகொள்ள விரும்புகிறோம். உங்கள் நாட்டில் இணையதளம் முடக்கப்பட்டிருக்கும்போது நீங்கள் எப்படி ட்வீட் செய்கிறீர்கள்" எனக் கேட்டிருப்பது பலரையும் அதிர்ச்சியடை செய்துள்ளது.

Pakistani Actress Says She Wants To Complain Against PM Modi, Delhi Police Has EPIC Reply
அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா : உலகிலேயே அதிகமாக பில்லியனர்கள் இருக்கும் நாடு எது தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com