ஓட்டமான்: அடிமை பெண்கள் அதிகராத்தை பிடிக்கும் கதை - சுல்தான் சொந்த சகோதரர்களை கொல்வது ஏன்?

ஒரு சுல்தான் 4 மனைவிகளையும் அந்தப்புரத்தில் பெண்களையும் கொண்டிருக்கலாம். எந்த பெண்ணுக்கும் பிறக்கும் ஆண் மகனுக்கும் அரியணை ஏறும் வாய்ப்பு சமமாக கிடைக்கும்.
ஓட்டமான்: அடிமை பெண்கள் அதிகராத்தை பிடிக்கும் கதை - சுல்தான் சொந்த சகோதரர்களை கொல்வது ஏன்?
ஓட்டமான்: அடிமை பெண்கள் அதிகராத்தை பிடிக்கும் கதை - சுல்தான் சொந்த சகோதரர்களை கொல்வது ஏன்? Canva

மனித குலம் வரலாற்றின் பெரும்பகுதியை ஆணாதிக்க சமுகமாகவே கழித்திருக்கிறது. குறிப்பாக அரசர் காலத்தில் ஆண் வாரிசுகளை மையமாக வைத்தே அதிகாரப் போட்டிகள் நடைபெற்றன.

இருப்பினும் பெண்கள் தங்களுக்கான அதிகாரத்தை ஏதோ ஒரு வகையில் பெற்றுக்கொள்ள முனைந்தனர். சில நேரங்களில் கணவர் வழியாக சில நேரங்களில் பிள்ளைகள் வாயிலாக.

ஓட்டாமான் பேரரசில் அடிமையாக இருந்த பெண்கள் எப்படி செல்வத்தையும், அதிகாரத்தையும் தங்களதாக்கிக்கொண்டனர் என விரிவாக எடுத்துரைக்கிறது இந்த பதிவு.

ஓட்டமான் பேரரசு

உலக வரலாற்றில் மிகப்பெரிய & நீண்ட காலம் ஆட்சி செய்த ராஜ்ஜியங்கள் என பட்டியலிட்டால், அதில் ஓட்டமான் ராஜ்ஜியத்துக்கு நிச்சயம் ஓரிடமுண்டு.

துருக்கிய பேரரசான ஓட்டமான் ஒரு காலத்தில் ஐரோப்பாவின் கணிசமான பகுதிகளையும் சேர்த்து ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்தது.

இந்த பேரரசில் அரச பரம்பரையில் ஒருவர் முடி சூட்டிக்கொண்ட பின்னர் உடன் பிறந்த அனைவரும் கொல்லப்பட்டது ஏன்? இந்த மன்னர்களின் தாய்மார் எல்லாருமே அடிப்படையில் அடிமைகள் என வரலாற்றாசிரியர்கள் சொல்வது ஏன் எனக் காணலாம்.

ஓட்டமான் பேரரசில் பெண்கள்

ஓட்டமான் பேரரசில் பெண்கள் அந்தப்புரத்துக்கு வரும் மன்னர்களின் இச்சையைத் தீர்க்க மட்டுமே பயன்படுத்தப்பட்டனர்.

அவர்கள் அடிமைகள், குழந்தைப் பெற்றுக்கொடுக்கும் இயந்திரங்கள் அவ்வளவு தான்.

அடிமை வாழ்க்கை வாழ்ந்த போதும், அமைச்சர்களைப் போல அரசியல் திட்டங்களையும் அப்பெண்கள் தீட்டிக்கொண்டிருந்தனர். குறிப்பாக அடுத்த வாரிசாக ஆளப்போவது யார் என்ற விஷயத்தில்.

சுல்தான்கள்

ஓட்டமான் பேரரசில் சுல்தான்கள் ராஜியத்தின் நலன் கருதியே ராணிகளைத் தேர்ந்தெடுத்து திருமணம் செய்தனர். அதற்காக அவர்கள் காதலிக்காமல் இல்லை.

அரசியல் ரீதியில் கூட்டணிகளை நிறுவவும், தேவைப்படும் ராஜ்ஜியங்களுடன் உறவை ஏற்படுத்திக்கொள்ளவும் பெண்களை திருமணம் செய்தனர். அதே நேரத்தில் அடிமைகளாக கடத்தப்பட்ட பல பெண்களை அந்தபுரத்தில் வைத்திருந்தனர்.

அடிப்படையில் இந்த அந்தப்புர பெண்கள் அடிமைகள் என்றாலும் அவர்களுக்கு பிறக்கும் மகன்களுக்கும் ராஜ்ஜியத்தின் அடுத்த வாரிசாகும் உரிமை இருந்தது.

சுல்தான்களின் மனைவிகள் அரசியல் செல்வாக்கு மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். என்ற போதிலும் அந்தப்புற பெண்களுடன் அதிக குழந்தைகளைப் பெற்று அதிலிருந்து ஒருவரை வாரிசாக்குவது தான் ராஜ்ஜியத்துக்கு சிறந்தது என சுல்தான்கள் முடிவு செய்தனர்.

ஒரு சுல்தான் 4 மனைவிகளையும் அந்தப்புரத்தில் பெண்களையும் கொண்டிருக்கலாம். எந்த பெண்ணுக்கும் பிறக்கும் ஆண் மகனுக்கும் அரியணை ஏறும் வாய்ப்பு சமமாக கிடைக்கும்.

இதனால் அரசியல் பின்புலம் இல்லாமல் அடிமையாக வந்த பெண்களும் அரசியல்வயப்பட்டனர். தங்கள் மூலம் பிறந்த மகன் சுல்தானாக வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்தது.

ஆண் வாரிசுகள்

இந்த பெண்கள் எங்கிருந்து வந்தனர் என்ற கேள்வி உங்களுக்கும் இருக்கும். போரில் வெற்றி பெறுவதன் மூலமாகவும், பிற ஆக்கிரமிப்புகள் மூலமாகவும் அடிமைகளாக வலுக்காடயமாக அந்தபுரத்தில் தள்ளப்பட்டவர்கள் இவர்கள்.

அந்தபுரத்துக்கு நுழைந்த பின்னர் இவர்கள் சுல்தானின் உடைமைகளாக கருதப்பட்டனர். இப்போது இருக்கும் ருமேனியா, உக்ரைன், தெற்கு ரஷ்யா ஆகிய பகுதிகளில் இருந்தே பெரும்பாலான பெண்கள் கொண்டுவரப்பட்டனர்.

இந்த பெண்களுக்கு இங்கு கொடுக்கப்படும் ஒரே வேலை ஆண் குழந்தை பெற்றுக்கொடுப்பது. அதைச் சரியாக செய்தால் அவர்களின் அடிமை வாழ்க்கை மாறிவிடும்.

ஏனென்றால் ஆண் குழந்தையைப் பெற்றுக்கொடுக்கும் ஒரு பெண் அடுத்த சுல்தானின் ராஜமாதாவாக கூட மாறக்கூடும் அல்லவா?

மனைவிகள் மூலமாகவும் ஆண்குழந்தைகள் பிறந்தனர். போர், நோய்கள் போன்ற காரணங்களுக்காக பல இளவரசர்கள் கொல்லப்பட்டனர். இதனால் பல இளவரசர்கள் ராஜ்ஜியத்துக்கு தேவைப்பட்டனர்.

அந்தப்புரத்தில் தனக்கு பிறந்த மகனை அரசனாக்குவது பெண்களின் கனவாக இருந்தது என்றே கூறலாம். அவர் வாழ்க்கையின் ஒரே நோக்கம் இதுவாகவும் இருக்கலாம்.

அரசியல்

அந்தப்புர தாயும் அவரது மகனும் போட்டிக்கு இருக்கும் அனைவரையும் தாண்டி சுல்தானுக்கு பிடித்தவரராக இருக்க பாடுபட்டனர்.

சுல்தானின் மகன்கள் 10-13 வயதுக்குள்ளாகவே ஒரு நகரத்தை ஆள அனுப்பிவைக்கப்படுவார்கள். இதன் மூலம் அவர்களின் திறமை பரிசோதிக்கப்படும்.

10 வயது சிறுவனால் ஒரு நகரை ஆள முடியாது என்பது அவர்களுக்கும் தெரியும். இதனால் சிறுவர்கள் மட்டுமல்லாமல் அவர்களின் தாயாரும் ஆட்சிப்பணியில் ஈடுபட்டனர்.

ஏதோ ஒரு மூலையில் பிறக்கும் பெண்ணுக்கு ஓட்டமான் பேரரசின் ராஜமாதாவாகும் வாய்ப்பு கிடைக்கிறது. இதனால் அவர்கள் அந்தப்புரத்தை பள்ளிக்கூடம் போல செயல்படுத்தினர்.

தங்கள் மகனுக்கு தங்களால் முடிந்த எல்லாவற்றையும் கற்றுக்கொடுக்கின்றனர். ஆண் வாரிசுகளும் தங்கள் சகோதரர்களைப் போட்டியாகவே கருதினர்.

மேலும் சகோதரர்கள் ஒன்றாக நேரம் கழிக்க அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதும் இல்லை. சகோதரர்களில் ஒருவர் அரியணை ஏறிவிட்டால் போட்டியாக இருப்பார்கள் என நினைக்கும் மற்றவர்களைக் கொலை செய்துவிடுவார்.

பிற்காலத்தில் கருணை அடிப்படையில் சகோதரர்களை சிறையில் அடைத்து வைத்தனர்.

ஓட்டமான்: அடிமை பெண்கள் அதிகராத்தை பிடிக்கும் கதை - சுல்தான் சொந்த சகோதரர்களை கொல்வது ஏன்?
செலெஸ்டியல் பேரரசு முதல் கிரேட் பிரிட்டன் வரை : உலகை ஆண்ட டாப் 5 பேரரசுகள் எவை?

அரியணை மோகம்

சுல்தானிடம் நன்மதிப்பை பெறும் அந்தப்புர பெண்களின் மகன்களுக்கு வாய்ப்புகள் அதிகமாக இருந்தது. உதாரணமாக உக்ரைனில் இருந்து அடிமையாக வந்த ரோக்ஸெலானாவின் கதையப் பார்க்கலாம்.

இவருக்கும் சுல்தானுக்கும் ஆண் மகன் பிறந்தும் மூத்தமகனாக மனைவியுடன் பிறந்த முஸ்தபா சுல்தானின் வாரிசாக கருதப்பட்டதனால் ரோக்ஸெலானாவின் மகனுக்கு சுல்தானுகும் வாய்ப்பு இல்லாமல் இருந்தது.

ஆனால் ரோக்ஸெலானா சுல்தானின் அன்பைப் பெற்றவர். அதனைப் பயன்படுத்தி முஸ்தபா சுல்தானின் ஆட்சியைக் கலைக்க திட்டமிடுவதாக நம்பவைத்தார். இதனால் சுல்தான் முஸ்தபாவை தேச துரோக குற்றவாளியாக கருதி கொலை செய்தார்.

ஓட்டமான்: அடிமை பெண்கள் அதிகராத்தை பிடிக்கும் கதை - சுல்தான் சொந்த சகோதரர்களை கொல்வது ஏன்?
ஓட்டமான் : ஐரோப்பாவில் கோலோச்சிய இஸ்லாமிய பேரரசு வீழ்ந்தது எப்படி? - துருக்கியின் வரலாறு

ரோக்ஸெலானாவின் மகன் சுல்தானாவதற்கான கதவுகள் திறக்கப்பட்டது. அவரது மகன் இரண்டாம் செலிம் அரியணை ஏறினான்.

ஓட்டமானில் அந்தப்புர பெண்களின் வாழ்க்கை நாம் பார்த்த எந்த படத்தையும் விட அதிக முடிச்சுகளைக் கொண்டது. அவர்கள் அடிமைகள் தான் ஆனால் அதிகாரத்தையும், செல்வத்தையும் அடைவதற்கு தகுதிவாய்ந்த அடிமைகளாக இருந்தனர்.

சுல்தானின் உடைமைகளாக இருந்ததால் அவர்களில் ஓரிருவருக்கு சில நன்மைகள் நிகழ்ந்தேறின.

ஓட்டமான்: அடிமை பெண்கள் அதிகராத்தை பிடிக்கும் கதை - சுல்தான் சொந்த சகோதரர்களை கொல்வது ஏன்?
Winston Churchill: இவரின் இனவெறியால் 43 லட்சம் இந்தியர்கள் இறந்தனர்- நடுங்கவைக்கும் வரலாறு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com