Netflix  : உலக அளவில் கட்டணத்தை குறைக்கும் OTT - இந்தியாவில் எவ்வளவு குறைவு?
Netflix : உலக அளவில் கட்டணத்தை குறைக்கும் OTT - இந்தியாவில் எவ்வளவு குறைவு?Netflix

Netflix : உலக அளவில் கட்டணத்தை குறைக்கும் OTT - இந்தியாவில் எவ்வளவு குறைவு?

ஸ்லோவேனியா, பல்கேரியா, நிகராகுவா, ஈக்வடார், வியட்னாம் போன்ற நாடுகளில் நெட்ஃப்ளிக்ஸ் தன் சப்ஸ்கிரிப்ஷன் கட்டணத்தைக் குறைத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அதுவும் ஒரு சில திட்டங்களில் மட்டுமே விலை குறைக்கப்பட்டிருக்கின்றன.

ஒருகாலத்தில், ஓடிடி தளத்தில் தனிப்பெரும் சாம்ராஜ்ஜியத்தை நடத்திக் கொண்டிருந்த நெட்ஃப்ளிக்ஸ் இன்று தன் இருப்பை நிலை நிறுத்திக் கொள்வதற்காக சுமார் 30 நாடுகளுக்கு மேல், ஓடிடி கட்டணத்தைக் குறைத்திருக்கிறது.

ஆசியா, ஐரோப்பிய ஒன்றியம், லத்தின் அமெரிக்கா, சப் சஹாரா ஆப்பிரிக்க பகுதி, மத்தியக் கிழக்கு என உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த நாடுகளில் கட்டணங்களைக் குறைத்திருக்கிறது.

ஒருபக்கம் விலைவாசி அதிகரிப்பு, பணவீக்கம் போன்ற பிரச்னைகளிலிருந்து மீள மக்கள் திண்டாடுகிறார்கள்.

அத்தியாவசியப் பொருட்கள் & சேவைகளுக்கு அதிக பணம் செலவழிப்பதால் வாழ்க்கை தரச் செலவுகள் அதிகரித்திருக்கின்றன.

Netflix  : உலக அளவில் கட்டணத்தை குறைக்கும் OTT - இந்தியாவில் எவ்வளவு குறைவு?
Netflix : எல்லாம் தோல்வி, Amazon, Hotstar -உடன் மோத முடியாமல் திணறல் - என்ன காரணம்?

அது போக நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தோடு மல்லு கட்டும் அளவுக்கு பல நாடுகளில் (இந்தியா போன்ற பல மொழி மக்கள் வாழும் இடங்களில் பல பிராந்திய ஓடிடி தளங்களும்) புதிய ஓடிடி தளங்கள் வந்து விட்டன.

எனவே முன்பைப் போல நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தால் அத்தனை எளிதாக வியாபாரம் செய்ய முடியவில்லை.

சுருக்கமாக, இன்று உலகில் வாழும் மனிதர் ஒருவருக்கு வெப் சீரிஸ் பார்த்து பொழுதைக் கழிப்பதா, படம் பார்த்து பொழுதைக் கழிப்பதா, லைவ் டிவி ஒளிபரப்பைப் பார்த்து பொழுது கழிப்பதா… என்கிற குழப்பம் ஏற்படும் அளவுக்கு அத்தனை ஆப்ஷன்கள் அவர்களது விரல் நுனியில் இருக்கின்றன.

மலேசியா, இந்தோனேஷியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், குரோஷியா, வெனிசுலா, கென்யா, இரான், எகிப்து, யேமன்,ஜோர்டன், லிபியா, ஸ்லோவேனியா, பல்கேரியா, நிகராகுவா, ஈக்வடார், வியட்னாம் போன்ற நாடுகளில் நெட்ஃப்ளிக்ஸ் தன் சப்ஸ்கிரிப்ஷன் கட்டணத்தைக் குறைத்துள்ளதாக பிபிசி வலைதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

அதுவும் ஒரு சில திட்டங்களில் மட்டுமே விலை குறைக்கப்பட்டிருக்கின்றன.

அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா போன்ற நாடுகளில் தன் விலை குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Netflix  : உலக அளவில் கட்டணத்தை குறைக்கும் OTT - இந்தியாவில் எவ்வளவு குறைவு?
NetFlix : 6 மாதம், காணாமல் போன 15,60,000 கோடி ரூபாய் - என்ன ஆச்சு நெட்ஃப்ளிக்ஸுக்கு?

மீளும் நெட்ஃப்ளிக்ஸ்:

கடந்த 2022ஆம் ஆண்டு மே - ஜூன் மாத காலத்தில் நெட்ஃப்ளிக்ஸ் தளம் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட சந்தாதாரர்களை இழந்ததாக வெளியான செய்தி, ஒட்டுமொத்த சந்தையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அதனைத் தொடர்ந்து, நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் பங்குகளின் விலை 162 அமெரிக்க டாலர் வரை தரை தட்டியது. அதன் பின் மெல்ல கை கால்களை ஊனி எழுந்து இப்போது தான் கொஞ்சம் பழைய நிலைக்குத் திரும்பி 317 அமெரிக்க டாலரைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது.

2023ஆம் ஆண்டின் தொடக்கத்தில், 2022ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் தனது சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக செய்தி வெளியான பிறகு தான் முதலீட்டாளர்கள் சற்றே நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர்.

நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தன்னுடைய சப்ஸ்கிரைபர்கள் தங்களுடைய பாஸ்வேர்டை மற்றவர்களுக்கு பகிர்வதைத் தடுக்கவும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

விரைவில் நெட்ஃப்ளிக்ஸ் மீண்டும் சந்தையில் தன் திறனை நிரூபித்து, பெரும்பகுதியை பிடிக்க வேண்டும் என்கிற முனைப்போடு செயல்படுவது தெளிவாகத் தெரிகிறது.

Netflix  : உலக அளவில் கட்டணத்தை குறைக்கும் OTT - இந்தியாவில் எவ்வளவு குறைவு?
Netflix: விமான உதவியாளரை தேடும் ஓடிடி நிறுவனம் - சம்பளம் என்ன தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Related Stories

No stories found.
logo
Newssense
www.newssensetn.com