இனி விண்ணில் திருமணம் செய்துகொள்ளலாம்! செலவு எவ்வளவு ஆகும் தெரியுமா?

ஒரு கால்பந்து மைதானத்தின் அளவு பெரியதாக இருக்கும் இந்த நெப்டியூன், இதில் பயணிப்பவர்களை பூமியிலிருந்து 1,00,000 அடி தொலைவுக்கு கூட்டி செல்கிறது , ஆறு மணி நேரம் வரை பறக்கக்கூடியது.
இனி விண்ணில் திருமணம் செய்துகொள்ளலாம்! செலவு எவ்வளவு ஆகும் தெரியுமா?
இனி விண்ணில் திருமணம் செய்துகொள்ளலாம்! செலவு எவ்வளவு ஆகும் தெரியுமா?Twitter

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று காலம் காலமாக சொல்லிக் கேள்விப்பட்டிருப்போம். வளர்ந்து வரும் டெக்னாலஜி, சொர்க்கத்தில் திருமணத்தை நடத்தாவிட்டாலும், சொர்க்கத்துக்கு கொஞ்சம் பக்கத்தில் நம்மை அழைத்து சென்று, நடத்த வழிவகுக்கிறது.

திருமணங்களை திட்டமிடும், வெட்டிங் ஈவண்ட்களை பிளான் செய்யும் பல நிறுவனங்களும் அவர்களின் கஸ்டமர்கள் கேட்பதற்கு ஏற்றவாரு, பீச்சிலோ, தீவுகளிலோ, பழமையான கோட்டைகளிலோ திருமண ஏற்பாடு செய்கின்றனர். அதில், ஆகாயத்தில் பறந்துகொண்டே திருமணம் செய்துகொண்டவர்களும் உள்ளனர்.

இது பெரும்பாலும் பறக்கும் விமானத்தில் நடந்த திருமணங்கள். ஸ்பேஸ் பர்ஸ்பெக்டிவ் என்கிற நிறுவனம் இதில் புதுமையை அறிமுகப்படுத்தியுள்ளது.

நெப்டியூன்

இவர்கள் ஒரு புதிய வகை ஸ்பேஸ் ஷிப்பை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதன் பெயர் நெப்டியூன்.

ஒரு கால்பந்து மைதானத்தின் அளவு பெரியதாக இருக்கும் இந்த நெப்டியூன், இதில் பயணிப்பவர்களை பூமியிலிருந்து 1,00,000 அடி தொலைவுக்கு கூட்டி செல்கிறது , ஆறு மணி நேரம் வரை பறக்கக்கூடியது.

இது ஒரு கார்பன் நியூட்ரல் பலூன். இதனால் பயணிகளுக்கு விண்ணில் சுவாச பிரச்னைகள் ஏற்படாது.

இதில் நிறைய ஜன்னல்கள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் வெளியில் ஆகாயத்தையும், கீழே பூமியையும் காணும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

ஆகாயத்தில் திருமணம் செய்துகொள்ள விரும்புபவர்களுக்காக இந்த ஐடியா கொண்டுவரப்பட்டுள்ளது.

இனி விண்ணில் திருமணம் செய்துகொள்ளலாம்! செலவு எவ்வளவு ஆகும் தெரியுமா?
Space Advertising : விண்வெளியில் விளம்பரம் செய்யும் நிறுவனங்கள் : பூமிக்கு அடுத்த ஆபத்தா?

எப்படி இயங்குகிறது நெப்டியூன்?

2024ஆம் ஆண்டு இந்த ஸ்பேஸ் ஷிப்பை பயன்பாட்டிற்கு கொண்டுவரவுள்ளனர். இதுவரை இதில் பயணிக்க 1000 டிக்கெட்கள் விற்கப்பட்டுள்ளன. ஒரு டிக்கெட்டின் விலை சுமார் 1 கோடி ரூபாய். இதில் 8 பேர், மற்றும் ஒரு பைலட் அமரும் அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பூமியிலிருந்து புறப்படும் இந்த நெப்டியுன், விண்ணை அடைந்ததும் (orbitல்) சுற்றுவட்டபாதையில் விடப்படும். இவை ஆர்பிட்டில் சுற்றிவர புதுபிக்கப்பட்ட ஹைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது. ராக்கெட்டின் உதவி தேவையில்லை.

இனி விண்ணில் திருமணம் செய்துகொள்ளலாம்! செலவு எவ்வளவு ஆகும் தெரியுமா?
”நான் விண்ணில் மாட்டிக்கொண்டேன்” ட்வீட் செய்த இளைஞர் - போலீசாரின் ரியாக்‌ஷன் என்ன?

வசதிகள் என்ன?

  • இலவச WiFi

  • காக்டெயில், பாட்டு கேட்கும் வசதி (நாம் விரும்பும் பிளே லிஸ்ட்டை முன்னரே தெரிவித்து வாங்கிக்கொள்ளலாம்)

  • ஸ்கை வியூ மற்றும் அனைத்து வசதிகளுடன் கூடிய கழிவறை

  • 360 டிகிரி வியூ தரும் வகையில் ஜன்னல்கள்

  • ரிக்லைனிங் (சாய்ந்துகொள்ளும்) சீட்கள்

  • ஒரு டைனிங் டேபிள் முதல் திருமண மேடை அமைக்கும் அளவு இடவசதி

இதை தவிர தனிப்பட்ட முறையில் பயணிக்கு வேறு ஏதாவது வசதிகள் தேவைப்பட்டால் கஸ்டமைஸ் செய்துகொள்ளலாம். மொத்தமாக இந்த ஸ்பேஸ் ஷிப்பை புக் செய்பவர்களுக்கு, கூடுதலாக டேபிள்கள், இருக்கைகள் வேண்டுமென்றால் வசதிகள் செய்து தரப்படும். இந்த பயணத்தின்போது சாப்பிட, அருந்த தேவையான உணவு வகைகளை முன்பதிவு செய்துகொள்ளலாம்.

இது முற்றிலும் பாதுகாப்பான பயணமாக அமையும் எனக் கூறியுள்ள நிறுவனம், இந்த ஸ்பேஸ் ஷிப்பில் பயணித்து திருமணம் செய்துகொள்ள விரும்புவோரின் பட்டியல் நீண்டுள்ளது எனக் கூறியுள்ளது. திருமணங்கள் மட்டுமல்லாது, ஸ்பேஸ் டிராவல் செய்யவேண்டும் என நினைப்பவர்களுக்கும் இது சரியான திட்டம் தான்.

இனி விண்ணில் திருமணம் செய்துகொள்ளலாம்! செலவு எவ்வளவு ஆகும் தெரியுமா?
பூமிக்கு 1000 அடி ஆழத்தில் ஒரு புதிய காடு கண்டுபிடிப்பு - பிரபஞ்ச ரகசியத்தின் திறவுகோலா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com