நிலத்திற்கு அடியில் வீடு கட்டி வாழும் மக்கள் - அடடே கிராமத்தின் பின்னணி என்ன?

இங்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கிராம மக்கள் தங்கள் வீடுகளின் சில பகுதிகளை ஓட்டல்களாக மாற்றியுள்ளனர். இந்த ஹோட்டல்கள் இப்போது அவர்களின் முக்கிய வருமான ஆதாரமாக மாறிவிட்டன.
matmata : people live underground in this village
matmata : people live underground in this villageTwitter

துனிசியாவில் அமைந்துள்ள மாட்மதா என்ற கிராம மக்கள் வீடுகளில் வசிக்காமல் குகைகளில் வசிக்கின்றனர். கிராம மக்கள் அனைவரும் நிலத்திற்கு அடியில் வீடு அமைத்து வசித்து வருகின்றனர். இதற்கு என்ன காரணம் என்று இங்கே தெரிந்துகொள்ளலாம்.

குகைகளில் மனிதர்கள் வாழ்வது குறித்து கேள்விப்பட்டிருப்போம். இங்கு ஒரு கிராமமே நிலத்தடியில் வசித்து வருகிறது.

1969 ஆம் ஆண்டு வரை இந்த கிராமத்தைப் பற்றி உலக மக்கள் அறிந்திருக்கவில்லை என்பதுதான் ஆச்சரியம். 1969ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் நிலத்தடி வீடுகள் தண்ணீரில் மூழ்கியபோது, இங்கு சிலர் வசித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வடக்கு ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் அரபு மொழி பேசும் பெர்பர் இன மக்கள் வாழும் சிறிய நகரம் ஒன்று உள்ளது. அதற்கு மட்மதா (matmata) என்று பெயர்.

இந்த கிராமத்தின் குடியிருப்பு முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது. இங்கு நிலத்தடியில் ஆழமான குகைகள் கட்டப்பட்டுள்ளன.

மக்கள் ஏன் நிலத்தடி குகைகளில் வாழ்கிறார்கள்? கடும் குளிர் மற்றும் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து எங்களை இந்த வீடு காத்து வருவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

இங்கு வசிக்கும் கிராம மக்கள் இந்த இடத்தை விட்டு வேறு எங்கும் செல்ல விரும்பவில்லை. இது தான் அவர்களுக்கு பாதுகாப்பான இடம் என்று நம்புகிறார்கள்.

எளிய கைக்கருவிகளுடன் தோண்டக்கூடிய அளவுக்கு மென்மையாக இருக்கும் மணற்கல்லில் முதலில் ஆழமான வட்டக் குழியைத் தோண்டி வீடுகள் கட்டுகின்றனர். குகையின் விளிம்புகளைச் சுற்றி தோண்டப்பட்டு, நிலத்தடி அறைகளை உருவாக்கி வீட்டின் அமைப்பை கொண்டு வருகின்றனர்.

இந்த வீட்டில் ஒவ்வொரு கொல்லைப்புறமும் ஒரு முற்றத்துடன் இணைக்கப்படுகிறது. நிலத்தடி வீட்டிற்கு இந்த முற்றம் மிக முக்கியமானது. ஏனெனில் அது தான் இந்த வீட்டிற்கு வெளியில் இருந்து காற்றைக் கொண்டு வருகிறது.

matmata : people live underground in this village
உலகில் இருக்கும் தனிமையான வீடுகள் குறித்து தெரியுமா? இந்தியாவில் எங்கே இருக்கிறது?

இந்த தனித்துவமான ட்ரோக்ளோடைட் (troglodyte) கட்டுமானமானது அவர்களை பல பருவநிலை மற்றத்திலிருந்து தப்பிக்க உதவியுள்ளது .

இன்றைய சூழலில் இந்த வீடுகள் அனைத்து நவீன வசதிகளுடன் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தடி கட்டிடங்கள் எல்லா நவீன வசதிகளையும் கொண்டுள்ளன. மின்சாரம் மற்றும் தொலைக்காட்சியும் உள்ளது.

இந்த கிராமத்தின் தனிச்சிறப்பு காரணமாக இந்த இடம் தற்போது சுற்றுலா தலமாக மாறியுள்ளது. ஸ்டார் வார்ஸ் உட்பட பல ஹாலிவுட் படங்கள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன.

matmata : people live underground in this village
தன்னந்தனியாக கப்பல் வீடு கட்டும் விவசாயி - 13 ஆண்டு கால உழைப்பு எப்போது நிறைவடையும்?

இங்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கிராம மக்கள் தங்கள் வீடுகளின் சில பகுதிகளை ஓட்டல்களாக மாற்றியுள்ளனர். இந்த ஹோட்டல்கள் இப்போது அவர்களின் முக்கிய வருமான ஆதாரமாக மாறிவிட்டன.

இங்கு வசிக்கும் பெரும்பாலான மக்கள் தங்கள் பாரம்பரியத்தை கைவிட விரும்பவில்லை, ஆனால் பணம் இல்லாததால் நவீன வீடுகளை கட்ட முடியாமல் சிலர் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

matmata : people live underground in this village
வீட்டுக்கு வீடு விமானம் உள்ள அதிசய நகரம் - இதற்கும் இரண்டாம் உலக போருக்கும் என்ன தொடர்பு?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com