”என் காதலி” 600 வருட பழமையான மம்மியை 30 ஆண்டுகளாக காதலித்த இளைஞர் - காத்திருந்த அதிர்ச்சி!

முப்பது ஆண்டுகளுக்கு முன் ஜூலியோவின் தந்தை இந்த மம்மியை அவருக்கு பரிசாக அளித்திருக்கிறார். அப்போது முதல் இதனை தன்னுடனே வைத்திருக்கும் ஜூலியோ, தன் நண்பர்களிடம் காண்பிக்க இதனை எடுத்து வந்துள்ளார்.
”என் காதலி” 600 வருட பழமையான மம்மியை 30 ஆண்டுகளாக காதலித்த இளைஞர் - காத்திருந்த அதிர்ச்சி!
”என் காதலி” 600 வருட பழமையான மம்மியை 30 ஆண்டுகளாக காதலித்த இளைஞர் - காத்திருந்த அதிர்ச்சி!ட்விட்டர்

600 ஆண்டுகள் பழமையான மம்மியை தனது உணவு டெலிவரி செய்யும் பையில் மறைத்துவைத்திருக்கிறார் பெருவை சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர். அந்த மம்மியை தனது ஆன்மீக காதலி என அவர் கூறியுள்ளது இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெருவின் கலாச்சார அமைச்சகம் கடந்த வாரம் இந்த மம்மி கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்திருக்கிறது.

பெருவின் பூனோ நகரில் மூன்று இளைஞர்கள் இணைந்து மது அருந்தி வந்ததாகவும் அவர்களிடத்தில் தான் இந்த மம்மி கைப்பற்றப்பட்டதாகவும் பெரு காவல்துறை சிஎன்என் செய்தி தளத்திடம் கூறியுள்ளது

பெரு நாட்டை சேர்ந்த ஜூலியோ என்ற 26 வயது இளைஞர், அந்த மம்மி தனக்கு சொந்தமானது எனக் கூறியிருக்கிறார். உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை பார்க்கும் இவரிடம் இந்த மம்மி எப்படி வந்தது என்ற சந்தேகத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது பேசிய அந்த இளைஞர், அந்த மம்மியின் பெயர் ஜுவானிடோ எனவும், அது தனது ஆன்மீக காதலி எனவும் தெரிவித்திருக்கிறார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன் ஜூலியோவின் தந்தை இந்த மம்மியை அவருக்கு பரிசாக அளித்திருக்கிறார். அப்போது முதல் இதனை தன்னுடனே வைத்திருக்கும் ஜூலியோ, தன் நண்பர்களிடம் காண்பிக்க இதனை எடுத்து வந்துள்ளார்.

“என் வீட்டில், அவள் என்னுடன் தான் உறங்குவாள். நான் தான் அவளை பார்த்துக்கொள்கிறேன்” என்கிறார் ஜூலியோ.

”என் காதலி” 600 வருட பழமையான மம்மியை 30 ஆண்டுகளாக காதலித்த இளைஞர் - காத்திருந்த அதிர்ச்சி!
எகிப்து மம்மிகளின் மர்ம ரகசியங்கள் : தோன்றியது எப்படி? உலகை மிரட்டும் ஆதாரங்கள்

ஜூலியோவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட இந்த மம்மி சுமார் 600 முதல் 800 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என அறியப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக பெருவின் கலாச்சார அமைச்சகம் இந்த மம்மியை தன் வசம் எடுத்துக்கொண்டது.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், தன் “ஆன்மீக காதலி” என்று ஜூலியோ கூறிய இந்த மம்மி ஒரு ஆண் என கண்டறியப்பட்டுள்ளது தான்!

”என் காதலி” 600 வருட பழமையான மம்மியை 30 ஆண்டுகளாக காதலித்த இளைஞர் - காத்திருந்த அதிர்ச்சி!
எகிப்து : மம்மிகளில் கிடைத்த தங்க நாக்குகள் - அறிஞர்களை வியக்க வைக்கும் கலாச்சார புதிர்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com