இந்தியர்களுக்கு விசா இல்லாமலும் அனுமதி அளிக்கும் கஜகஸ்தான் - சாகச பயணத்துக்கு ரெடியா?

கஜகஸ்தான் நிலவமைப்பு புல்வெளிகள், தைக்கா காடுகள், மலைப் பள்ளத்தாக்குகள், மலைகள், பனிச்சிகரங்கள் மற்றும் பாலைவனங்களைக் கொண்டுள்ளது.
Kazakhstan
KazakhstanTwitter

இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்தால் போதும் கஜகஸ்தான் நாட்டில் விசா இல்லாமல் அனுமதி அளிக்கப்படுகிறது.

இந்தியர்கள் இப்போது கஜகஸ்தான் குடியரசில் 14 நாட்கள் வரை விசா இல்லாமல் தங்கலாம்.

கஜகஸ்தான் சுற்றுலாப் பயணிகளுக்கு தனித்துவமான மற்றும் பல்வேறு வகையான ஈர்ப்புகளை வழங்குகிறது.

என்ன இருக்கிறது கஜகஸ்தானில்?

கஜகஸ்தான் இதன் எல்லைகளாக உருசியா, சீனா, கிர்கித்தான், உசுபெகித்தான், துர்க்மெனித்தான் ஆகியவற்றை கொண்டுள்ளது.

கஜகஸ்தான் நிலவமைப்பு புல்வெளிகள், தைக்கா காடுகள், மலைப் பள்ளத்தாக்குகள், மலைகள், பனிச்சிகரங்கள் மற்றும் பாலைவனங்களைக் கொண்டுள்ளது.

அங்கு இருக்கும் அல்மாட்டி நகரம், நவீன மற்றும் சோவியத் கால கட்டிடக்கலையின் கலவையுடன், துடிப்பான நகர்ப்புற அனுபவத்தை வழங்குகிறது.

பண்டைய நகரமான துர்கெஸ்தானில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான குவாஜா அகமது யாசாவியின் கல்லறை உள்ளது.

Kazakhstan
மனைவியின் பிறந்தநாளை மறந்தால் கணவருக்கு சிறையா? வினோத சட்டங்கள் கொண்ட நாடுகள் தெரியுமா?

கஜகஸ்தானில் உள்ள பைகோனூர் காஸ்மோட்ரோம் உலகின் முதல் மற்றும் மிகப்பெரிய விண்வெளி ஏவுதளம் என்பது உங்களுக்குத் தெரியுமா?

விண்வெளி ஏவுதளம் ரஷ்யாவிற்கு நீண்ட காலத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டின் (2023) முற்பகுதியில், ஏவுதள வசதி மீண்டும் கஜகஸ்தானின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.

கஜகஸ்தானில் நீங்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பது இந்த நாடோடி பாரம்பரிய அனுபவம்.

அதுமட்டுமில்லாமல் ஹைக்கிங், பனிச்சறுக்கு, குதிரை சவாரி மற்றும் கேம்பிங் போன்ற பல்வேறு சாகச நடவடிக்கைகளை கஜகஸ்தான் வழங்குகிறது. குறிப்பாக டீன் ஷான் மலைகள் மற்றும் அல்தாய் மலைகள் போன்ற பகுதிகளில் இந்த சாகசங்களை மேற்கொள்ளலாம்.

Kazakhstan
கத்தார் முதல் ஓமன் வரை: இயற்கையாக காடுகளே இல்லாத உலகின் 4 நாடுகள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com