Josephine Baker: இசை உலகின் மகாராணி உளவாளி ஆன கதை - மினி சீரிஸ் 6

எல்லா நாட்டு எல்லைக் காவல் படையினரும் ஜோசஃபைன் பேக்கரைச் சோதிப்பதற்கு பதில், அவரிடம் கையெழுத்து வாங்கிக் கொள்வதிலேயே கவனமாக இருந்தனர்.
Josephine Baker
Josephine BakerTWITTER

இதுநாள் வரை ஜேக்ஸ் அப்டே இல்லாமல் ஒரு அடி கூட உளவுத் துறையில் எடுத்து வைக்காத ஜோசஃபைன் பேக்கர் இப்போது தனியாக செயல்பட வேண்டிய கட்டாயத்துக்குக்குத் தள்ளப்பட்டார். ஜேக்ஸ் அப்டேவின் பாதுகாப்பும் அன்பும் இல்லாத ஜோசஃபைன் பேக்கர் கொஞ்சம் கலங்கினாலும், பிரான்ஸ் நாட்டுக்குத் தேவையான தன் உளவுப் பணிகளை தனியே முன்னெடுத்தார்.

வெற்றிகரமாக ஜேக்ஸ் அப்டேவின் தொடர்புகளை கண்டுபிடித்து உளவுத் தகவல்களைப் பகிர்ந்தார். அதோடு மொராக்காவுக்குச் சென்ற போது சில அரேபியர்களிடமிருந்தும் முக்கிய உளவுத் தகவல்களைப் பெற்றார்.

தன் பயணம் குறித்து, ஒரு முழு அறிக்கையை அமெரிக்க வைஸ் கவுன்சிலுக்கு தட்டச்சு செய்து அனுப்பினார். எந்த நாடு தன்னை ஒரு பொருட்டாகக் கூடக் கருதவில்லையோ, தற்போது அதே நாடு தன் உளவுத் தகவல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படிப்பது ஜோசஃபைன் பேக்கருக்கு பெருமகிழ்ச்சியைக் கொடுத்தது.

ஜேக்ஸ் அப்டே போர்ச்சுகள் நாட்டிலிருந்து வெளியேறினாலும், அடுத்து மொராக்கோவில் சிக்கிக் கொண்டார். ஆனால் ஜோசஃபைன் பேக்கருக்கு கலைஞர் என்கிற அடையாளம் இருந்ததால் மிகச் சுதந்திரமாக காசாபிளாங்கா, லிஸ்பன், செவில்லி, மேட்ரிட், பார்சிலோனா என நினைத்த நகரங்களுக்குப் பயணிக்க முடிந்தது.

இசைக் கச்சேரிகளுக்கு இடையில் சேகரித்த உளவுத் தகவல்களை லிஸ்பனில் கொடுத்து லண்டன் நகரத்துக்கு அனுப்பி வைத்தார். இந்த வேலை ஒருகட்டத்தில் ஜோசஃபைன் பேக்கருக்கு எந்த ஒரு அச்சத்தையோ, பதற்றத்தையோ கொடுக்கவில்லை. அநாயாசமாக உளவுப் பணிகளைச் செய்யும் அளவுக்கு அது அவருக்குப் பழகிப் போனது. எல்லா நாட்டு எல்லைக் காவல் படையினரும் ஜோசஃபைன் பேக்கரைச் சோதிப்பதற்கு பதில், அவரிடம் கையெழுத்து வாங்கிக் கொள்வதிலேயே கவனமாக இருந்தனர்.

தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு எந்த வித சந்தேகமும் இல்லாமல், நாஜிப் படைகளின் முக்கிய சந்திப்புகள், உள்ளூரில் நாஜிப் படைகள் நிலை நிறுத்தப்பட்டு இருக்கும் இடங்கள், போர் விமானங்கள் எண்ணிக்கை மற்றும் அது நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் இடம்... என பல முக்கிய போர் தரவுகள் மற்றும் தகவல்களை சேகரித்தார். அவ்வப்போது ஜேக்ஸ் அப்டேவையும் மொராக்கோ நாட்டில் வந்து சந்தித்துச் சென்றார்.

அப்படி ஒருநாள் ஜோசஃபைன் பேக்கர், ஜேக்ஸ் அப்டேவோடு இருந்த போது வயிற்று வழியால் துடித்தார் பேக்கர். உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு பேக்கரை அழைத்துச் சென்றார் அப்டே.

Josephine Baker
வியட்நாம் போர் வரலாறு : வல்லரசு நாட்டை மண்ணை கவ்வ வைத்த சிறிய நாடு | பாகம் 3

உளவுத் தொழிலில் இருப்பவர்களுக்கு எப்போது யார் விஷம் வைப்பார்கள், என்ன மாதிரியான விஷம் வைக்கப்படும் என்பதை எல்லாம் எவராலும் சொல்ல முடியாது. அப்படி ஜோசஃபைன் பேக்கருக்கு யாராவது விஷயம் வைத்துவிட்டார்களா என்று கூட சிந்தனையில் ஆழ்ந்தார் ஜேக்ஸ் அப்டே.

அந்த சிறிய மருத்துவமனையில் சிகிச்சை போதாமல், காசாபிளாங்கா நகரத்தில் உள்ள நல்ல பெரிய மருத்துவமனைக்கு காரிலேயே அழைத்துச் சென்றார் ஜேக்ஸ் அப்டே.

ஜோசஃபைன் பேக்கர் பெரிடொனிடிஸ் (peritonitis) நோயால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து பேக்கர் செப்ஸிஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. 1942 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், பால்டிமோர் ஆப்பிரிக்கன் - அமெரிக்க பத்திரிகையில் ஜோசஃபைன் பேக்கர் இறந்துவிட்டதாகச் செய்திகள் வெளியாயின. ஒருகட்டத்தில் இது உண்மை என நம்பி பல ரசிகர்கள் அஞ்சலி செலுத்தத் தொடங்கிவிட்டனர்.

ஆனால் உண்மையில் அவர் உயிரோடு தான் இருந்தார். அதே ஆண்டு டிசம்பர் மாதம் நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர், ஜோசஃபைன் பேக்கரை உயிரோடு பார்த்த பின், உலகத்துக்கு அவர் உயிரோடு இருக்கும் விஷயம் தெரிய வந்தது.

ஒருகட்டத்தில், தன்னைக் காண வருபவர்களொடு பேசும் அளவுக்கு உடல் நலம் தேறிய பிறகு, தன் மருத்துவமனை அறையிலிருந்த படியே உளவுத் தகவல்களைப் பெற ஒரு யோசனையை முன்வைத்தார் ஜேக்ஸ் அப்டே.

ஜோசஃபைன் பேக்கரை நலம் விசாரித்து சந்திக்க வரலாம் என அறிவிக்கப்பட்டது. அவ்வளவு தான் பெரிய அதிகாரிகள், அரசியல்வாதிகள் என பல தரப்பினரும் தேடி வந்து ஜோசஃபைன் பேக்கர் காதில் பல செய்திகளைச் சொல்லிச் சென்றனர். அப்படி ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த உளவுப் படையினர் குறித்த சில முக்கியத் தகவல்கள், அவர்கள் ஐரோப்பிய கண்டத்தில் அட்லாண்டிக் கடற்கரையில் வலுவாக நிலைபெற்று இருக்கும் இடம் என பல தகவல்களை படுத்த படுக்கையில் இருந்த படி திரட்டினார்.

கடைசியில், ஜோசஃபைன் பேக்கர் எதிர்பார்த்தது போல, 1941ஆம் ஆண்டு இறுதியில் அமெரிக்காவும் இரண்டாம் உலகப் போரில் குதித்தது, அதன் பின் நடந்த சம்பவங்களை உலகறியும்.

1945ஆம் ஆண்டு உலகப் போர் என்னவோ முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் ஜோசஃபைன் பேக்கரின் போராட்டம் முடிவுக்கு வரவில்லை. மீண்டும் அவர் உடல் நிறம், அவருக்கான மரியாதைக்குத் தடையாக அமைந்தது.

Josephine Baker
சைரஸ் மிஸ்திரி : யார் இவர்? டாடா குழுமத்துக்கும் இவருக்குமான உறவு என்ன? - விரிவான தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com