ஜப்பான்: 'இங்கு கோர்ட் தேவையில்லை' - விவாகரத்து கோவிலும் வினோத பாரம்பரியமும்

காகுசன் நி அவரது கணவர் இறந்த பிறகு துறவறம் ஏற்றுக்கொண்டு, கணவரை இழந்த அல்லது கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு ஆதரவளிக்க இந்த கோவிலை எழுப்பினார். பெரும்பாலும், கணவரின் கொடுமைகளை தாங்கிக்கொள்ள முடியாமல் பிரிந்து வந்த பெண்கள் இங்கு ஏராளமாக இருந்தனர்
கோர்ட் இல்லை கோவில்! ஜப்பானின் இந்த ’விவாகரத்து கோவில்’ குறித்து தெரியுமா?
கோர்ட் இல்லை கோவில்! ஜப்பானின் இந்த ’விவாகரத்து கோவில்’ குறித்து தெரியுமா?ட்விட்டர்

பொதுவாக கோவில்களுக்கு சென்று பலரும் தங்களுக்கு திருமணம் ஆக வேண்டும் என்று தான் வேண்டிக்கொள்வார்கள். இதற்காக உலகமெங்கும் பிரத்தியேகமாக கோவில்களும் உண்டு.

ஆனால் திருமணம் ஆனவர்களுக்கு விவாகரத்து ஆக ஒரு கோவில் இருக்கிறதென்றால்? அதுவும் பெண்களுக்காகவே செயல்படுகிறது இந்த கோவில்.

ஜப்பானில் இருக்கும் இக்கோவில் விருப்பமில்லாத திருமண வாழ்வில் இருந்து பெண்கள் விடுபட உதவுகிறது.

கோர்ட் இல்லை கோவில்! ஜப்பானின் இந்த ’விவாகரத்து கோவில்’ குறித்து தெரியுமா?
புத்தாடை, விருந்து, பரிசுகள் - இறந்தவர்களை கொண்டாடும் விநோத சடங்கு - எங்கே?

தொகெய்ஜி கோவில் - The Divorce Temple:

7 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தொகெய்ஜி கோவில் ஜப்பானின் கிடா கமகுரா என்ற இடத்தில் அமைந்திருக்கிறது. இது ஒரு சென் கோவில் (புத்தர் கோவில்) இந்த கோவிலை விவாகரத்து கோவில், (Divorce Temple) என்றும் உறவுகளை துண்டிக்கும் கோவில் என்றும் ஆதரவற்றோருக்கான கோவில் எனவும் அழைக்கின்றனர்.

1285 ஆம் ஆண்டு அப்போதைய கமகுராவின் அதிபராக இருந்த டொகிமுன் ஹோஜோ என்பவரின் மனைவி காகுசன் நி என்பவரால் நிறுவப்பட்டது தொகெய்ஜி கோவில்.

காகுசன் நி அவரது கணவர் இறந்த பிறகு துறவறம் ஏற்றுக்கொண்டு, கணவரை இழந்த அல்லது கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு ஆதரவளிக்க இந்த கோவிலை எழுப்பினார்.

கணவரின் கொடுமைகளை தாங்கிக்கொள்ள முடியாமல் பிரிந்து வந்த பெண்கள் இங்கு ஏராளமாக இருந்தனர்.

விவாகரத்து கெடுபிடி:

இந்தியாவில் மட்டுமல்லாது உலகின் பல நாடுகளிலும், கணவனை இழந்த பெண்களுக்கு சமூகத்தில் பல விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அந்த வகையில், ஜப்பானின் பெண்கள் கணவனை இழந்துவிட்டால் துறவறம் மேற்கொள்ள வேண்டும்.

அப்படியல்லாது, கணவரை ஒரு பெண் பிரியவேண்டும், விவாகரத்து வேண்டும் என்றால் சில விதிமுறைகள் இருந்தன. இந்த கட்டுபாடுகள் ஆண்களுக்கு இல்லை. விவாகரத்து வேண்டும் என சொன்னால் மட்டும் போதும்.

இதனால், விவாகரத்து கிடைக்கும் வரை, அப்பெண்ணுக்கு இருக்க இடமளித்தது இந்த தொகெய்ஜி கோவில். மூன்று ஆண்டுகள் இந்த கோவிலில் சேவை செய்த பிறகு, ஒரு பெண்ணுக்கு விவாகரத்து வழங்கப்படுகிறது.

இங்கு தஞ்சம் புகுந்த பெண்களில் இளவரசி யோதோ என்பவரும் இருந்ததாகவும், இவரது செல்வாக்கை பயன்படுத்தி, மூன்று ஆண்டுகள் வரை நீண்ட விவாகரத்து பணிகள், இரண்டு ஆண்டுகளாக குறைக்கப்பட்டது எனவும் வரலாறு சொல்கிறது

ஆனால், 1873 ஆண்டுக்கு பிறகு இங்கு யாருக்கும் விவாகரத்து வழங்கப்படவில்லை. விவாகரத்துக்கு பிரத்தியேகமாக கொண்டுவரப்பட்ட சட்டங்கள் அமல்படுத்தப்பட்டதனால், இம்முறை கைவிடப்பட்டது.

கோர்ட் இல்லை கோவில்! ஜப்பானின் இந்த ’விவாகரத்து கோவில்’ குறித்து தெரியுமா?
Karni Mata Temple : எலி குடித்த பால் தான் பிரசாதமா? எலி கோவில் குறித்து தெரியுமா?

சுற்றுலா தலம்:

தொகெய்ஜி கோவில் ஒரு பிரபலமான சுற்றுல தலமாகும். இயற்கை எழில்கொஞ்சும் இந்த கோவில் பல அரிய வகை மரங்கள், தாவரங்கள், வண்ண வண்ண பூச்செடிகளை காணலாம்.

இங்கு அமைந்திருக்கும் புத்தர் சிலையானது, இந்த அழகிய பச்சைப்பசேல் என்ற செடிகளுக்கு மத்தியில் இருப்பதனால், மன அமைதியை தருகிறது என்கின்றனர் சுற்றுலா பயணிகள்

கோர்ட் இல்லை கோவில்! ஜப்பானின் இந்த ’விவாகரத்து கோவில்’ குறித்து தெரியுமா?
முடி விற்பனை சந்தையில் டாப்பில் இருக்கும் இந்தியா : காணிக்கை முடி எங்கே போகிறது தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com