
மந்த்கா மஜ்ரே அவுரங்காபாத் என்பது உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம்.
அங்கிருந்து மொத்த உலகமும் திரும்பிப்பார்க்கும்படியான செய்தி ஒன்று வைரலாகி வருகிறது.
முகமது ஆரிஃப் என்பவர் இன்று உத்தரபிரதேசம் முழுவதும் பேச்சுப் பொருளாக உள்ளார். அவருடைய வீடியோக்கள் ட்விட்டரில் வைரலாகி வருகின்றன.
ஆரிஃப் ஒரு நாள் காலில் அடிபட்டு பறக்க முடியாமல் பலவீனமாக கிடந்த சரஸ் கொக்கு ஒன்றைப் பார்த்துள்ளார்.
அந்த கொக்குக்கு மனிதாபிமானத்துடன் உதவ முடிவு செய்துள்ளார்.
அதனை வீட்டுக்கு எடுத்துச் சென்று காயங்களுக்கு மருந்து வைத்து உணவும் கொடுத்துள்ளார்.
கொக்கு நலமானதும் அதனுடைய நண்பர்களுடன் பறந்துவிடும் என ஆரிஃப் நினைத்துள்ளார். ஆனால் அப்படி நடக்கவில்லை.
கொக்கு மற்ற கொக்குகளுடன் இருப்பதை விட தனக்கு உதவிய ஆரிஃப் உடன் இருப்பதையே விரும்பியிருக்கிறது.
இதனால் எப்போதும் ஆரிஃப் இருக்கும் இடத்திலேயே கொக்கும் இருந்துள்ளது. அவர் சாலையில் செல்லும் போது நிழல் போல் பின் தொடர்ந்து சென்றிருக்கிறது.
சில நேரங்களில் 40 கிலோமீட்டர் கூட சலிக்காமல் பறந்து சென்று ஆரிஃபைப் பார்க்குமாம் கொக்கு.
ஒரு வேளை ஆரிஃப் எங்காவது வெளியில் சென்றால் சோகமடையும் கொக்கு, அவருக்காக காத்திருக்குமாம். அவர் வந்த பின்னர் சந்தோஷமாக பறக்குமாம்.
"அவனது நண்பர்கள் அவனை அழைத்துச் செல்ல அவ்வப்போது வந்தாலும் அவன் போவதில்லை. வராண்டாவில் ஒளிந்துகொள்வான்.
அவர்களுடன் விளையாட சென்றாலும் மாலையில் திரும்ப என்னிடம் வந்துவிடுவான்." என கொக்கு குறித்து நெகிழ்ந்து பேசியுள்ளார் முகமது ஆரிஃப்.
அவர் தோள் மீது வந்து அடிக்கடி இந்த பெரிய கொக்கு உட்காந்துக்கொள்கிறது.
இந்த அழகான நண்பர்களுடடையக் கதைதான் இப்போது வைரலாக பரவிவருகிறது.
ஆரிஃபின் நண்பனாக இருப்பது பெரிய கால்களும், ரோஸ் நிற கழுத்தும் கொண்ட சரஸ் கொக்கு, மிக முக்கியமான உயிரினமாகும்.
உலகிலேயே மிக உயரமாக பறக்கும் பறவை இது தான் என்கின்றனர். இது புவி முழுவதுமே 25000 - 37000 எண்ணிக்கையில் தான் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust