அரசியல்வாதிகளை கூண்டில் அடைத்து ஆற்றில் விடும் விசித்திர தண்டனை - எங்கே? என்ன காரணம்?

மக்களின் பிரதிநிதிகளான அரசியல்வாதிகள் கொடுத்த வாக்கை நிறைவேற்ற மறந்தால், அவர்களை ஒரு கூண்டில் வைத்துப் பூட்டி ஆற்றில் விட்டுவிடுகிறார்கள்
அரசியல்வாதிகளை கூண்டில் அடைத்து ஆற்றில் விடும் விசித்திர தண்டனை - எங்கே? என்ன காரணம்?
அரசியல்வாதிகளை கூண்டில் அடைத்து ஆற்றில் விடும் விசித்திர தண்டனை - எங்கே? என்ன காரணம்?ட்விட்டர்

இத்தாலி நாட்டின் ஒரு நகரத்தில், கொடுத்த வாக்கை காப்பாற்றாத அரசியல்வாதிகளை மக்கள் கூண்டில் அடைத்து அவர்களை தண்ணீரில் விடும் விநோத தண்டனை முறை பின்பற்றப்பட்டு வருகிறது.

சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் மக்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்காகவும் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தலைவர்கள்

”நான் மட்டும் பதவிக்கு வந்தால்...இதை செய்துகாட்டுவேன், அதை நிறைவேற்றுவேன்” என்று தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசுவது வழக்கம்.

மக்களின் ஆதரவோடு பதவியில் அமர்ந்துவிட்ட பிறகு கொடுத்த வாக்கினை காப்பாற்றும் பொறுப்பு ஒரு ஒரு தலைவருக்கும் உண்டு.

ஒரு வேளை அப்படி சொன்ன சொல்லை காப்பாற்றவில்லை என்றால், இந்நகர மக்கள் அவர்களது தலைவருக்கு ஒரு வித்தியாசமான தண்டனையை வழங்குகின்றனர்.

இத்தாலியின் வடக்கு பகுதியில் அமைந்திருக்கும் ஒரு நகரம் டிரெண்டோ. இங்கு மக்களின் பிரதிநிதிகளான அரசியல்வாதிகள் கொடுத்த வாக்கை நிறைவேற்ற மறந்தால், அவர்களை ஒரு கூண்டில் வைத்துப் பூட்டி ஆற்றில் விட்டுவிடுகிறார்கள்

அரசியல்வாதிகளை கூண்டில் அடைத்து ஆற்றில் விடும் விசித்திர தண்டனை - எங்கே? என்ன காரணம்?
மேகாலயா: "விசில் தான் எங்க மொழி" - இசை கிராமத்தின் விசித்திர கதை

இது மிகவும் தீவிரமான தண்டனையாக அல்லாமல், கேளிக்கையாகவே செய்யப்படுகிறது. எனினும், அரசியல் தலைவர்கள் தங்களது தவற்றினை உணருவதற்காகவே இப்படி செய்யப்படுகிறது.

கூண்டில் அடைக்கப்பட்ட நபர்கள் வெறும் ஒரு சில வினாடிகளே தண்ணீரில் இறக்கிவிடப்படுகின்றனர். அதன் பிறகு அவர்களை மேல் தூக்கி விடுகின்றனர். இந்த தண்டனையை நிறைவேற்ற ஒரு நீதிபதியும் இருக்கிறார்

டிரெண்டோ நகரில் டான்கா என்ற வழக்கம் ஒன்று பின்பற்றப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு ஒரு முறை ஜூன் மாதத்தின் பிற்பகுதியில் கொண்டாடப்படுகிறது இந்த சம்பிரதாயம். இந்த விழாவில் தான் இந்த தண்டனை முறை செய்யப்படுகிறது

இவ்வாறு தலைவர்களை கூண்டில் அடைத்து தண்ணீரில் இறக்கிவுடுவதை "தவத்தின் நீதிமன்றம்” (Court of Pertinance) என்கின்றனர்.

அரசியல்வாதிகள் அல்லாமல், அந்த ஊரில் பிரபலமாக இருக்கும் எந்த ஒரு நபரும் தவறு செய்திருந்தால், இந்த முறைப்படி தண்டிக்கப்படுகின்றனர்

அரசியல்வாதிகளை கூண்டில் அடைத்து ஆற்றில் விடும் விசித்திர தண்டனை - எங்கே? என்ன காரணம்?
வடகொரியா : ஹாலிவுட் சீரிஸ் பார்த்தால் குழந்தைகளுக்கும் தண்டனை - அதிபரின் கறார் கண்டிஷன்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com