ஈரான்: பள்ளிக்கு செல்லாமல் இருக்க சிறுமிகளுக்கு விஷம் வைத்த கொடூரம் - திடுக்கிடும் தகவல்!

கடந்த சில மாதங்களாகவே, ஈரானின் பல பகுதிகளில், முக்கியமாக கோம் நகரில் பல பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக ஈரானின் துணை சுகாதார அமைச்சர் யூனஸ் பனாஹி தெரிவித்திருக்கிறார்.
ஈரான்: பள்ளிக்கு செல்லாமல் இருக்க சிறுமிகளுக்கு விஷம் வைத்த கொடூரம் - திடுக்கிடும் தகவல்!
ஈரான்: பள்ளிக்கு செல்லாமல் இருக்க சிறுமிகளுக்கு விஷம் வைத்த கொடூரம் - திடுக்கிடும் தகவல்!Twitter

ஈரானின் கோம் நகரில், பள்ளிக்கு செல்லாமல் இருக்க “குறிப்பிட்ட சிலர்” சிறுமிகளுக்கு விஷம் கொடுத்ததாக தெரிவித்திருக்கிறார் ஈரானின் துணை அமைச்சர்.

இந்த செய்தி உலக நாடுகளை நடுநடுங்க வைத்திருக்கிறது.

பெண் குழந்தைகளுக்கு கல்வி கிடைக்கக்கூடாது என்பதே இவர்களது நோக்கம் என அவர் தெரிவித்திருந்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இஸ்லாமிய தேசமான ஈரானில், பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறை நடவடிக்கைகள் இன்றளவும் அரங்கேறி வருகின்றன.

ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக் கூறி, அந்நாட்டின் ஒழுக்க காவலர்கள் இளம் பெண் ஒருவரை தாக்கி அவர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் இருந்த பெண்களை கொதித்தெழச் செய்தது.

கடும் போராட்டங்கள் வெடித்தன, இந்த போராட்டத்தில் 17 வயது சிறுமி உட்பட பல பெண்கள் உயிரிழந்தனர். உலகம் முழுக்க இருந்த பெண்கள் ஹிஜாப்களை எரித்தும், தலைமுடியை கத்தரித்துக்கொண்டும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

பெண்கள் முன்னேற்றத்துக்கான எந்த ஒரு விஷயமும் அங்கு தடை செய்யப்பட்டுள்ளது. பள்ளிக் கல்லூரிகளுக்கு செல்ல பெண்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஈரான்: பள்ளிக்கு செல்லாமல் இருக்க சிறுமிகளுக்கு விஷம் வைத்த கொடூரம் - திடுக்கிடும் தகவல்!
ஹிஜாப் அணிய மறுத்த பத்திரிக்கையாளர் - பேட்டியை ரத்து செய்த ஈரான் அதிபர்

இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே, ஈரானின் பல பகுதிகளில், முக்கியமாக கோம் நகரில் பல பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக ஈரானின் துணை சுகாதார அமைச்சர் யூனஸ் பனாஹி தெரிவித்திருக்கிறார்.

நவம்பர் பின்பகுதியிலிருந்தே பள்ளி மாணவிகளுக்கு, சுவாசக்குழாயில் விஷ வாயு தாக்கியதாகவும், இப்பிரச்னைக்காக பல பள்ளி மாணவிகள் சிகிச்சைக்கு அழைத்துவரப்பட்டனர் எனவும் துணை சுகாதார அமைச்சர் கூறியிருக்கிறார்.

மேலும் இது வேண்டுமென்றே செய்யப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.

ஈரான்: பள்ளிக்கு செல்லாமல் இருக்க சிறுமிகளுக்கு விஷம் வைத்த கொடூரம் - திடுக்கிடும் தகவல்!
ஹிஜாப் அணிய மறுத்த பத்திரிக்கையாளர் - பேட்டியை ரத்து செய்த ஈரான் அதிபர்
<div class="paragraphs"><p>Hijab</p></div>

Hijab

Twitter

“பல மாணவிகளுக்கு விஷம் அளிக்கப்பட்டது தெரியவந்த நிலையில், கோம் நகரின் பல பள்ளிகளை, முக்கியமாக பெண்கள் கல்வி நிலையங்கள் மூடப்பட வேண்டும் என சிலர் விரும்பியதாக கண்டறியப்பட்டது” என அமைச்சர் பனாஹி தெரிவித்ததாக ஐஆர்என்ஏ செய்தி நிறுவனம் கூறுகிறது

இது குறித்து வேறு எந்த தகவல்களும் இதுவரை கிடைக்கவில்லை. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

கடந்த பிப்ரவரி 14 அன்று பாதிக்கப்பட்ட சிறுமிகளின் குடும்பத்தார் இது குறித்து விளக்கம் கேட்டு ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டதாகவும், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

பள்ளி மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com