
ஒரு மணி நேரம் உயிருடன் சவப்பெட்டியில் வைத்து மண்ணில் மக்களை புதைத்து அளிக்கப்படும் சிகிச்சை இணையவாசிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவில் உள்ள Prekated Academy என்ற நிறுவனம், தனிநபர்களின் கவலை பிரச்னைகளை எதிர்த்துப் போராட "மனநோய் சிகிச்சை" என்ற முறையைக் கொண்டு வந்தது.
அதன்படி ஒரு நபர் சவப்பெட்டியில் வைத்து மண்ணுக்கு அடியில் உயிருடன் புதைக்கப்படுகிறார். இதற்காக ரூ. 47 லட்சத்தை வசூலிக்கிறது ரஷ்யாவை சேர்ந்த ப்ரிகேடட் அகாடமி நிறுவனம்.
தற்போது வேலை, குடும்ப சூழல் என பல்வேறு காரணங்களால் பலர் மனநலப் பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு, Prekated Academy என்ற ரஷ்ய நிறுவனம் அதனை சமாளிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
அதன்படி ஒரு மணி நேரம் உயிருடன் சவப்பெட்டியில் புதைக்கின்றனர். இது பயமாகத் தோன்றினாலும், மக்கள் தங்கள் கவலைகள் மற்றும் அச்சங்களைப் போக்க இது உதவும் என்று நிறுவனம் கூறுகிறது.
இருப்பினும், "மனநல சிகிச்சை" என்று பெயரிடப்பட்ட இந்த முறைக்கும் சார்ச் செய்யப்படுகிறது. ஒரு மணி நேரம் அந்த சிகிச்சைக்காக சவப்பெட்டியில் வைத்து மண்ணில் புதைக்க நிறுவனம் 47 லட்சம் ரூபாய் வசூலிக்கிறது.
இந்த நிறுவனத்தின் நிறுவனர் Yakaterina Preobrazhenskaya, அடக்கம் முறை முற்றிலும் பாதுகாப்பானது என்று உறுதியளித்தார்.
தங்கள் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு நிறுவனத்திற்கு முதன்மை முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர் கூறினார்.
புதைக்கப்பட்ட செயல்முறைக்குப் பிறகு, புத்துயிர் பெற்ற ஒரு விழிப்புணர்வு வரும், வாழ்வதற்கான விருப்பத்தை மீண்டும் உருவாக்க உதவும்.இது பதட்டத்தை போக்க உதவும் என்று கூறுவதுடன், சில மனநல திறன்களை வளர்க்க இந்த சிகிச்சை உதவும் என்றும் நிறுவனம் கூறியது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust