
உலகில் தற்போது 195 நாடுகள் உள்ளன. இதில் ஒரு சில நாடுகள் வேறொரு நாட்டில் இருந்து பிரிந்து தனி சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது.
இவற்றில் சமீபத்தில் உருவான நாடுகளை பற்றி தான் சொல்ல போகிறோம்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான இது ஜூலை 9, 2011 அன்று பிரிந்து தனி நாடாக உருவானது. இது சூடானின் பத்து தெற்கு மாநிலங்களை உள்ளடக்கியது.
தெற்கு சூடான் 1899 முதல் 1956 வரை இங்கிலாந்து மாறும் எகிப்தால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. சுதந்திர தேசமாக மாறுவதற்கான போராட்டம் பல தசாப்தங்களாக நீடித்த பின்னர் தனி நாடானது.
கொசோவா பிப்ரவரி 17, 2008 அன்று செர்பியாவிலிருந்து சுதந்திரம் பெற்றது. அதன் இறையாண்மைக்கான போராட்டம் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு தொடங்கியது, செர்பியா ஒட்டோமான் பேரரசில் இருந்து பிரிந்து தனி நாடானது. இருந்தபோதிலும் செர்பியா கொசோவோவை ஒரு இறையாண்மை நாடாக அங்கீகரிக்கவில்லை.
பழங்காலத்தில், ரோமானியப் பேரரசு, பைசண்டைன் , பல்கேரியப் , செர்பியப் பேரரசு மற்றும் ஒட்டோமான் பேரரசு உள்ளிட்ட பல்வேறு பேரரசுகளால் கொசோவோ ஆளப்பட்டது.
மாண்டினீக்ரோவும் சேர்பியாவில் இருந்து பிரிந்தது தான். ஜூன் 2, 2006 இல் மாண்டினீக்ரோ தனி இராச்சியமாக மாறியது.
முதலாம் உலகப் போருக்கு பின் யூகோஸ்லாவியாவின் ஒரு பகுதியாக இருந்த இது 1990 களில் செர்பியாவுடன் ஒரு கூட்டமைப்பை உருவாக்கியது. பின்னர் சுதந்திரம் பெற்றது.
செர்பியா 2006 இல் மாண்டினீக்ரோவிலிருந்து பிரிந்தபோது அதன் சொந்த தேசமாக மாறியது. இரண்டாம் உலக போருக்கு பின்னர் யூகோஸ்லாவியாவாக இருந்து பின்னர் மாண்டினீக்ரோ பிரிந்ததும் செர்பியா தனி நாடானது.
கிழக்கு திமோர் , அதிகாரப்பூர்வமாக திமோர்-லெஸ்டே ஜனநாயகக் குடியரசு என்று அழைக்கப்படும் தென்கிழக்கு ஆசிய தீவு நாடு மே 20, 2002 தனி நாடானது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust