சிறிய நாட்டில் குவிந்திருக்கும் செல்வம் : வரி இல்லை, கல்வி, மருத்துவம் இலவசம் - எங்கே?

கொரோனா காலத்தில் கூட எல்லா நாடுகளும் மருந்துகளுக்கும் பிறத் தேவைகளுக்கும் கடன் வாங்கின. அப்போதும் கூட இங்கு எந்த பாதிப்பும் இல்லை. வெளிநாடுகளில் இருந்து வாங்குவதை விட பல மடங்கு கடனை கொடுத்துவருகிறது திருநெல்வேலி அளவே இருக்கும் ஒரு நாடு.
சிறிய நாட்டில் குவிந்திருக்கும் செல்வம் : வரி இல்லை, கல்வி, மருத்துவம் இலவசம் - எங்கே?
சிறிய நாட்டில் குவிந்திருக்கும் செல்வம் : வரி இல்லை, கல்வி, மருத்துவம் இலவசம் - எங்கே?Twitter

புருனே மலேசியாவையும் இந்தோனேசியாவையும் எல்லையாகக் கொண்டுள்ள கிழக்கு ஆசிய நாடாகும். மன்னராட்சியை பின்பற்றும் இந்த நாட்டில் சுல்தான் ஹசனல் போல்கியா மற்றும் அவரது அரச குடும்பத்தினரிடம் எல்லையில்லாத செல்வம் இருக்கிறது.

உலகமே பொருளாதார சிக்கல்களை சந்தித்து வருவதை நாம் அறிவோம். அமெரிக்காவே பணவீக்கம் உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்கொள்ள அஞ்சிக்கொண்டிருக்கிறது. இது நம் ஊர் மென்பொருள் நிறுவனங்களையும் கூட நடுங்க வைத்திருக்கிறது. பலரும் வேலை இழப்பதையும் நிறுவனங்கள், வங்கிகள் மூடப்படுவதையும் பார்க்கிறோம்.

இந்த பொருளாதார தலைவலிகள் எதுவுமே இல்லாமல் நிம்மதியாக ஒரு நாட்டில் மக்களால் இருக்க முடியும் என்றால், உலகிலேயே புருனேவில் மட்டுமே அது சாத்தியம்.

கொரோனா காலத்தில் கூட எல்லா நாடுகளும் மருந்துகளுக்கும் பிறத் தேவைகளுக்கும் கடன் வாங்கின. பல தொழில்களும் முடங்கியதால் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டது.

ஆனால் அப்போது கூட புருனேவில் எந்த பாதிப்பும் இல்லை. மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் புருனேவின் கடன் 1.9 சதவீதம் தான் என்கிறது பிபிசி வலைத்தள கட்டுரை ஒன்று.

கடன் மிகவும் குறைவாக இருப்பதை புருனேவில் பெருஞ்செல்வம் இருக்கிறது என்றோ அல்லது செலவு மிகக் குறைவாக இருக்கிறது என்றோ எடுத்துக்கொள்ளலாம்.

எங்கிருந்து வந்தது இவ்வளவு செல்வம்?

புருனே செல்வத்தின் பெரும்பகுதி பெட்ரோலியத்தில் இருந்தே கிடைக்கிறது. எண்ணெய்யையும் எரிவாயுவையுமே நம்பியிருக்கும் பொருளாதாரம்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 90% பெட்ரோலியத்தில் இருந்தே கிடைக்கிறது.

2017 ஆம் ஆண்டு மதிப்பீடு படி, அங்கு ஒரு பில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் இருந்தது. 2.6 ட்ரில்லியன் கனமீட்டர் எரிவாயு இருந்தது.

சிறிய நாட்டில் குவிந்திருக்கும் செல்வம் : வரி இல்லை, கல்வி, மருத்துவம் இலவசம் - எங்கே?
வியட்நாம் : மனித காலடி தடமே பதியாத உலகின் மிக பெரிய குகை - உள்ளே இருக்கும் தனி ஒரு உலகம்!

புருனேவில் வரி இல்லையா?

எந்த ஒரு நாடும், அரசாங்கமும் இயங்க வரிகள் அவசியம். ஆனால் புருனேவில் அந்த நிலைமை இல்லை. மக்கள் வருமானவரி கட்ட தேவையில்லை.

அதுமட்டுமல்ல நாட்டில் உள்ள ஒவ்வொருத்தருக்கும் கல்வியும், மருத்துவமும் நிச்சயமான முறையில் இலவசமாக வழங்கப்படுகிறது.

வீடு தேவைபடுவோருக்கு வீடு வழங்குவது, இல்லாதவருக்கு கருணை காட்டுவது என நற்பண்புகள் நிறைந்தவராக பார்க்கப்படுகிறார் சுல்தான்.

வெறும் 5 லட்சம் மட்டுமே மக்கள் தொகையிருக்கும் அந்த நாட்டில் மிகவும் பிரபலமானவராக உள்ளார் சுல்தான். மொத்த மக்களும் நாட்டின் ஒருபகுதியில் மட்டுமே வசிக்கின்றனர்.

கடன் குறைவாக இருப்பதனால் இங்கிருக்கும் பெட்ரோலியம் மட்டும் எரிவாயு மூலம் கிடைக்கும் பணம் பெரிமளவில் இருப்பாக உள்ளது.

சிறிய நாட்டில் குவிந்திருக்கும் செல்வம் : வரி இல்லை, கல்வி, மருத்துவம் இலவசம் - எங்கே?
சவுதி அரேபியா : உலகில் சக்தி வாய்ந்த நாடாக உருவான பாலைவனம் - எப்படி?

நாட்டில் உள்ள சின்ன சின்ன பற்றாக்குறைகள், செலவுகளுக்கு இந்த பணமே போதுமானதாக இருக்கிறது.பிற நாடுகளுக்கு கடன்களை வழங்கிவருகிறது.

ஆனால் இது எல்லாமே எண்ணெய் வளம் இருக்கும் வரை அல்லது எண்ணெய் வளத்துக்கான சந்தை இருக்கும் வரையே. ஏற்கெனவே கார்பன் உமிழ்வுக்கு எதிராக உலகமே மின்சார கார்கள் மற்றும் மாற்று சக்திகளை ஆராயத் தொடங்கியிருக்கின்றன.

எந்த ஒரு நாடும் ஒரே ஒரு மூல வருவாயை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தைச் சார்ந்து இருப்பது மோசமானதாகும். அதுவே பெட்ரோலியமாக இருந்தால் நிச்சயமாக மாற்றுகள் தேவை.

சிறிய நாட்டில் குவிந்திருக்கும் செல்வம் : வரி இல்லை, கல்வி, மருத்துவம் இலவசம் - எங்கே?
குவைத் : சலுகை, சொகுசு, சுக வாழ்வு - ஒரு கனவு தேசத்தின் கதை

புருனேவில் இஸ்லாமியச் சட்டம்

புருனேவை 1888 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் கைப்பற்றியது. 1929ல் இங்கு எண்ணெய் வளம் இருப்பது கண்டறியப்பட்டது.

1962 ஆம் ஆண்டு மன்னராட்சியை எதிர்த்து ஆயுதமேந்திய கலகம் பிறந்தது.

கிளர்ச்சியை முறியடித்த சுல்தான் மலேசியாவுடன் இணைய மறுத்துவிட்டார். புருனே தன்னை தனி நாடாக அறிவித்தது.

1984 ஆம் ஆண்டு அங்கிலேயர்கள் புருனேவை விட்டு வெளியேறினர். புருனே சுதந்திர நாடாக உருவானது.

தந்தை ஹாஜி உமர் அலி சைஃபுத்தீனுக்கு பிறகு சுல்தானாக பதவியேற்றார் ஹசனல் போல்கியா. இவர் தன்னையே பிரதமராகவும் அறிவித்துக்கொண்டார்.

சிறிய நாட்டில் குவிந்திருக்கும் செல்வம் : வரி இல்லை, கல்வி, மருத்துவம் இலவசம் - எங்கே?
துருக்கி : நீல மசூதி முதல் பாரம்பரிய வைன் வரை - 10 ஆச்சரிய தகவல்கள்

மலாய் முஸ்லீம் மன்னராட்சி சிந்தாந்தத்தை நடைமுறைப்படுத்தினார். இஸ்லாத்தின் பாதுகாவலராக உருவெடுத்தார்.

2014ம் ஆண்டு கிழக்கு ஆசியாவில் ஷரியா சட்டத்தை அமல்படுத்திய முதல் நாடாக உருவெடுத்தது புருனே. மிகவும் கடுமையான கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுகிறது.

2019ம் ஆண்டு ஓரினச்சேர்கையாளர்களை கல்லெறிந்துகொலை செய்யும் சட்டத்தை ரத்து செய்ததன் மூலம் தளர்வுகளிலும் காலடி எடுத்து வைத்திருக்கிறார் சுல்தான்.

நாட்டிலேயே பெரும் செல்வத்தைக் குவித்து வைத்திருப்பதனால் ஆடம்பரமான வாழ்க்கையை அனுபவித்து வருகிறார் சுல்தான் போல்கியா.

சிறிய நாட்டில் குவிந்திருக்கும் செல்வம் : வரி இல்லை, கல்வி, மருத்துவம் இலவசம் - எங்கே?
நவ்ரூ : வளமான நாடு கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்ட கதை - இருண்ட வரலாறு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com