Breaking Bad: ஏலத்திற்கு வரும் வால்டர் வைட்டின் உள்ளாடை - விலை என்ன தெரியுமா?

லாஸ் ஏஞ்சல்ஸ் ஆன்லைன் எண்டெர்டெயின்மெண்ட் மெமொரபீலிய ஆக்‌ஷன் நடத்தும் இந்த ஏலம் கடந்த 13 ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கிட்டதட்ட 1000 டிவி மற்றும் எண்டெர்டெயின்மெண்ட் நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ஏலத்தில் விடப்படும்.
Breaking Bad: ஏலத்திற்கு வரும் வால்டர் வைட்டின் உள்ளாடை - விலை என்ன தெரியுமா?
Breaking Bad: ஏலத்திற்கு வரும் வால்டர் வைட்டின் உள்ளாடை - விலை என்ன தெரியுமா?Twitter

Breaking Bad என்ற வெப் சீரீஸின் முக்கிய கதாபாத்திரமான வால்டர் வைட் அணிந்திருந்த வெள்ளை நிற உள்ளாடை 4 லட்சம் ரூபாய்க்கும் மேல் ஏலம் விடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல ஹாலிவுட் வெப் சீரீஸ் பிரேக்கிங் பேட். பள்ளியில் வேதியல் ஆசிரியராக இருக்கும் ஒரு நடுத்தர குடும்பத்தின் தலைவன் வால்டர் வைட், தனக்கு புற்றுநோய் இருப்பதை அறிகிறார். இவருக்கு பதின் பருவத்தில் இருக்கும் ஒரு மாற்றுத்திறனாளி மகன், மற்றும் நிறைமாத கர்ப்பிணியான மனைவி.

சிகிச்சை, மனைவி குழந்தைகளின் எதிர்காலத்திற்கு என, அவரிடம் போதிய பணம் இல்லை. அவருக்கு இருக்கும் நேரமும் குறைவு. மரணம் நெருங்கிக்கொண்டிருக்கையில், உயிர் போவதற்கு முன் தன் கடமைகளை நிறைவேற்றிவிட வேண்டும் என்ற அழுத்தம்.

அப்போது அதே சமயத்தில் தன் முன்னாள் மாணவன் ஜெஸ்ஸி பின்க்மேனின் பரிச்சயம் கிடைக்கிறது. போதை பொருட்களை கடத்தும் கும்பலில் ஒருவனாக இருக்கிறான் முன்னாள் மாணவன்.

அவனுடன் சேர்ந்து நிழல் உலகத்தில், தனது வேதியல் மூளையை பயன்படுத்தி கிரிஸ்டல் மெத் எனப்படும் போதை பொருளை தயாரிக்கிறார் வால்டர்.

விரைவில் இவரது போதை மருந்திற்கு கள்ளச்சந்தையில் வரவேற்பு பெருக, மெல்ல அந்த உலகத்தின் அதிபதி ஆகிறார் ஹைசென்பெர்க் என்கிற வால்டர் வைட்

Breaking Bad: ஏலத்திற்கு வரும் வால்டர் வைட்டின் உள்ளாடை - விலை என்ன தெரியுமா?
மூழ்கிய கப்பலில் கண்டுபிடிக்கப்பட்ட ஜீன்ஸ் - எத்தனை லட்சத்துக்கு ஏலம் போனது தெரியுமா?

வால்டர், ஜெஸ்ஸி பின்க்மேன் மற்றும் இவர்களுடன் தொடர்புடையவர்களின் வாழ்க்கை மாற்றம் தான் இந்த வெப் சீரீஸ். 2008 முதல் 2013 வரை மொத்தம் 5 சீசன்கள் வெளியாகின. இதன் தொடர்ச்சியாக வெளியான தொடர் பெட்டர் கால் சால். El Camino: A Breaking Bad Movie என்கிற திரைப்படமும் 2019ல் வெளியானது.

இன்று வரை ஹாலிவுட்டில் மட்டுமல்லாமல், உலகளவில் அதிகம் விரும்பி பார்க்கப்படும் வெப் சீரீஸ் ஆக இருக்கிறது பிரேக்கிங் பேட். ஐஎம்டிபியில் 10க்கு 10 ரேட்டிங் இருக்கும் ஒரே வெப் சீரீஸ் இது தான்.

இந்த வெப் சீரீஸின் பைலட் எனப்படும் முதல் எபிசோடில், ஹைசன்பெர்க் வெள்ளை நிற உள்ளாடை அணிந்திருப்பார். இந்த உள்ளாடை தற்போது ஏலத்திற்கு வந்திருக்கிறது.

Breaking Bad: ஏலத்திற்கு வரும் வால்டர் வைட்டின் உள்ளாடை - விலை என்ன தெரியுமா?
சார்லஸ் - டயானா : 41 ஆண்டுகள் பழமையான திருமண கேக்கை ஏலம் விட முடிவு!

லாஸ் ஏஞ்சல்ஸ் ஆன்லைன் எண்டெர்டெயின்மெண்ட் மெமொரபீலிய ஆக்‌ஷன் நடத்தும் இந்த ஏலம் கடந்த 13 ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கிட்ட தட்ட 1000 டிவி மற்றும் எண்டெர்டெயின்மெண்ட் நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ஏலத்தில் விடப்படும்.

இந்த ஏலத்தில், பிரேக்கிங் பேட் நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்ட மற்ற பொருட்களுடன் சேர்த்து, வால்டர் வைட் கதாபாத்திரம் அணிந்திருந்த உள்ளாடைகளும் இருக்கிறது. இதன் விலை 5000 அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் 4,13,310 ரூபாய். இதுவரை 14 முறை ஏலம் கேட்கப்பட்டுள்ளது என்று இந்தியா டைம்ஸ் தளம் தெரிவிக்கிறது

Breaking Bad: ஏலத்திற்கு வரும் வால்டர் வைட்டின் உள்ளாடை - விலை என்ன தெரியுமா?
பிரிட்டன் இளவரசி டயானாவின் உடை ஏலம் - எத்தனை கோடிக்கு தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com