காதலியிடம் பிரேக் அப் செய்ய கடிதத்தில் கையெழுத்து கேட்ட இளைஞர் - வைரலாகும் புகைப்படம்
காதலியிடம் பிரேக் அப் செய்ய கடிதத்தில் கையெழுத்து கேட்ட இளைஞர் - வைரலாகும் புகைப்படம் twitter

காதலியிடம் பிரேக் அப் செய்ய கடிதத்தில் கையெழுத்து கேட்ட இளைஞர் - வைரலாகும் புகைப்படம்

இந்த கடிதத்தை தனது காதலிக்கு வாட்ஸ் அப் மூலம் அவர் பகிர்ந்து அதில் கையெழுத்திடவேண்டும் எனவும் கேட்டுகொண்டார். கையெழுத்தைப் போட்டு காதலி கொடுத்ததும் தன் மகிழ்ச்சியை ட்விட்டரில் அவர் பகிர்ந்திருந்தார்.

தனக்கு இந்த ரிலேஷன்ஷிப் பிடிக்கவில்லை, அதனால் பிரேக் அப் செய்துகொள்கிறேன் என நவீன முறையில் காதலியிடம் தெரிவித்திருக்கிறார் இளைஞர் ஒருவர். இவரது இந்த அணுகுமுறை இணையவாசிகளை கவர்ந்துள்ளது

பொதுவாக காதலைச் சொல்லத்தான் நாம் தொழில்நுட்பத்தின் உதவியை நாடுவோம். சமீபத்தில் கூட சுமார் 62 சதவிகித இந்தியர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்த சாட் ஜிபிடி தொழிநுட்பத்தின் உதவியை எடுத்துக்கொண்டதாக செய்திகள் வெளியாகின.

ஆனால் இங்கு ஒருவர் தன் காதலியிடம் பிரேக் அப் செய்துகொள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருக்கிறார்

வெலின் என்ற இளைஞர் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் தன் காதலி சரி என்று சொல்லிவிட்டதாக தலைப்பிட்டிருந்தார்.

இருவருக்கும் திருமணமாகப் போகிறதா என்றால் அதுதான் இல்லை. அவரது காதலி தனது பிரேக் அப் கடிதத்தை ஏற்றுக்கொண்டு, அதில் கையெழுத்தும் போட்டிருப்பதாக அவர் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திருக்கிறார்.

காதலியிடம் பிரேக் அப் செய்ய கடிதத்தில் கையெழுத்து கேட்ட இளைஞர் - வைரலாகும் புகைப்படம்
”ரூ.81 கோடி பணத்தை செலவு செய்ய காதலி தேவை” - லாட்டரி வென்றவரின் அடடே ஆசை!

வெலின் அந்த பதிவில் கடிதம் ஒன்று இருந்தது.

அக்கடிதத்தில்,

“நீ நலமாக இருக்கிறாய் என்று நினைக்கிறேன். உன்னைப்பற்றி நான் அறிந்த ஒரு விஷயம் நமது ரிலேஷன்ஷிப் குறித்து என்னை யோசிக்கவைத்துள்ளது. அதனால் இனி என்னால் உன்னுடன் ரிலேஷன்ஷிப்பை தொடரமுடியாது” என்று இருந்தது.

இந்த கடிதத்தை தனது காதலிக்கு வாட்ஸ் அப் மூலம் அவர் பகிர்ந்து அதில் கையெழுத்திடவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். கையெழுத்தைப் போட்டு காதலி கொடுத்ததும் தன் மகிழ்ச்சியை ட்விட்டரில் அவர் பகிர்ந்திருந்தார்.

இந்த போஸ்ட் வைரலாகி வருகிறது

காதலியிடம் பிரேக் அப் செய்ய கடிதத்தில் கையெழுத்து கேட்ட இளைஞர் - வைரலாகும் புகைப்படம்
காதலன் ஃபோனில் பெண் குரல் : கோபத்தில் வீட்டை கொளுத்திய காதலி - என்ன நடந்தது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Related Stories

No stories found.
logo
Newssense
www.newssensetn.com