நீலகிரி மலைகள் முதல் ரெட் சீ வரை - நிறங்களின் பெயர்கள் கொண்ட உலக சுற்றுலா தலங்கள்

சில தலங்கள், நிறங்களின் பெயர்களை கொண்டு பிரபலமாக இருக்கின்றன. இவற்றிற்கு நிறங்களின் பெயர் எப்படி சூட்டப்பட்டது? இந்த பதிவில் காணலாம்
நீலகிரி மலைகள் முதல் ரெட் சீ வரை - நிறங்களின் பெயர்கள் கொண்ட உலக சுற்றுலா தலங்கள்
நீலகிரி மலைகள் முதல் ரெட் சீ வரை - நிறங்களின் பெயர்கள் கொண்ட உலக சுற்றுலா தலங்கள்ட்விட்டர்

சுற்றுலா செல்ல பல அரிதான மற்றும் அட்வென்ச்சர் நிறைந்த இடங்களை நாம் தேடி செல்கிறோம். ஒவ்வொன்றிற்கும் ஒரு ஒரு பின்கதை, வித்தியாசமான பெயர்கள் இருக்கும்.

உலகெங்கிலும் இருந்து சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கும் சில தலங்கள், நிறங்களின் பெயர்களை கொண்டு பிரபலமாக இருக்கின்றன. அவை என்னென்ன? எங்கு இருக்கின்றன? இவற்றிற்கு நிறங்களின் பெயர் எப்படி சூட்டப்பட்டது? இந்த பதிவில் காணலாம்

நீலகிரி மலைகள், இந்தியா

நீலக்குறிஞ்சி என்ற வகை மலர்கள் இங்கு கொத்துக் கொத்தாக பூக்கும். இதனால் இம்மலைக்கு நீலமலை என்ற பெயர் வந்தது. காலப்போக்கில் நீலகிரி என்ற பெயர் வந்தது.

கருப்பு காடுகள் (black forest), ஜெர்மனி

ஜெர்மனியில் அமைந்திருக்கும் இந்த இடமானது காத்திக் கட்டிடக்கலை (இவை பார்ப்பதற்கு சற்று அமானுஷ்யமான உணர்வை அளிக்கும்), அடர் பச்சை நிறத்திலான செடிகள், மரங்கள் நிறைந்தது. இதனால் இவ்விடம் இருண்டதாக காணப்படுகிறது. இதனால் இதற்கு பிளாக் ஃபாரஸ்ட் என்ற பெயர் வந்தது. இங்கு அழகிய நகரங்களும் இருக்கின்றன

நீலகிரி மலைகள் முதல் ரெட் சீ வரை - நிறங்களின் பெயர்கள் கொண்ட உலக சுற்றுலா தலங்கள்
Travel: டெல்லி முதல் துருக்கி வரை - உலகின் பிரபலமான சந்தைகள் என்னென்ன?

ரெட் ராக் கேன்யோன், அமெரிக்கா

அமெரிக்காவின் நெவாடா பகுதியிலுள்ள லாஸ் வேகாஸில் அமைந்திருக்கிறது ரெட் ராக் கேன்யோன். இது மிக பிரபலமான ஒரு சுவாரஸ்ய சுற்றுலா தலமாகும்.

ப்ளூ ஹோல், பெலிசே

நீருக்கடியில் இருக்கும் ஒரு பெரிய மூழ்கும் குழியின் (sinkhole) காரணமாக இந்த இடம் நீல நிறத்தில் காணப்படுகிறது. இது உலகின் பிரபலமான சுற்றுலா இடங்களில் ஒன்று

நீலகிரி மலைகள் முதல் ரெட் சீ வரை - நிறங்களின் பெயர்கள் கொண்ட உலக சுற்றுலா தலங்கள்
பாலிவுட், ஹாலிவுட், கோலிவுட் : பெயர்கள் எப்படி வந்தது? சுவாரஸ்ய பின்னணி தெரியுமா?

எல்லோஸ்டோன் தேசிய பூங்கா, அமெரிக்கா (Yellowstone National Park)

இங்கு அமைந்துள்ள எல்லோஸ்டோன் நதிக்கரையில் மஞ்சள் நிற மணற்கற்கள் அதிகமாக காணப்படுவதால் இந்த பெயர் வந்தது. இங்குள்ள தண்ணீருக்கும் லாவாவுக்கும் இடையில் ஏற்படும் வேதியல் மாற்றத்தால் மஞ்சள் நிறம் தோன்றுவதாக கூறப்படுகிறது

ரெட் சீ - சிகப்புக்கடல்

அரேபியன் தீபகற்பத்திற்கும், ஆப்ரிக்காவுக்கும் இடையில் அமைந்திருக்கிறது இந்த சிகப்பு கடல். இந்த நீரில் இருக்கும் சையனோபேக்டீரியா தண்ணீரை சிவப்பு நிறமாக மாற்றுகிறது.

நீலகிரி மலைகள் முதல் ரெட் சீ வரை - நிறங்களின் பெயர்கள் கொண்ட உலக சுற்றுலா தலங்கள்
Travel: சுசா முதல் ஏதென்ஸ் வரை - உலகின் பழமையான 5 நகரங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com