கண்ணாமூச்சு விளையாடி கண்டெய்னரில் தூங்கிய சிறுவன்: வேறுநாட்டில் கண்திறப்பு- என்ன நடந்தது?

ஜனவரி17ம் தேதி மலேசியாவின் போர்ட் கலாங் துறைமுகத்திற்கு வந்த பங்களாதேஷ் கப்பலை ஊழியர் ஒருவர் இறக்கியிருக்கிறார். அப்போது ஒரு கண்டெயினரில் இருந்து மெலிந்த போன சிறிவன் ஒருவன் வந்துள்ளார்.
கண்ணாமூச்சு விளையாடி கண்டெய்னரில் தூங்கிய சிறுவன் - வேறுநாட்டில் கண்திறப்பு
கண்ணாமூச்சு விளையாடி கண்டெய்னரில் தூங்கிய சிறுவன் - வேறுநாட்டில் கண்திறப்புசிறுவன் ஃபஹிம்

கண்ணாமூச்சு விளையாட காண்டெயினரில் ஒளிந்து கொண்டுள்ளார் பங்களாதேஷைச் சேர்ந்த சிறுவன்.

சிறிது நேரத்திற்கு பின் அங்கேயே அந்த சிறுவன் படுத்து தூங்கிருக்கிறான், இதற்கிடையில் அந்த கண்டெயினர் கப்பலில் ஏற்றப்பட்டது.

இறுதியாக வேறொரு நாட்டின் கரையில் அவர் இறங்கியிருக்கிறார்.

சிறுவர்களுக்கான அனிமேஷன் படத்தின் கதைப் போல இருந்தாலும் இந்த சம்ப்வம் உண்மையாகவே நடைபெற்றிருக்கிறது.

ஜனவரி17ம் தேதி மலேசியாவின் போர்ட் கலாங் துறைமுகத்திற்கு வந்த பங்களாதேஷ் கப்பலை ஊழியர் ஒருவர் இறக்கியிருக்கிறார்.

அப்போது ஒரு கண்டெயினரில் இருந்து மெலிந்த போன சிறிவன் ஒருவன் வந்துள்ளார்.

பயந்து போன அந்த சிறுவனுக்கு மலேசிய அதிகாரிகள் பேசியது புரியவில்லை. அந்த சிறுவன் பேசுவதையும் ஊழியர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.

அவர் மலேசியாவுக்கு ஆள்கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டு வந்திருக்கலாம் என சந்தேகித்த துறைமுக அதிகாரிகள் காவல்துறையினருக்கு தகவல் கூறியுள்ளனர்.

காவலர்கள் வந்த பின்னர் இது ஆள்கடத்தில் அல்ல விளையாட்டு விபரீதமாகியிருக்கிறது என்பது தெரிந்திருக்கிறது.

என்ன நடந்தது?

15 வயதாகும் ஃபஹிம் அன்ற சிறுவன் சித்தாகோங்க் என்ற பங்களாதேஷ் துறைமுக நகரைச் சேர்ந்தவர்.

அவர் தனது நண்பர்களுடன் கண்ணாமூச்சு விளையாடும் போது கண்டெயினரில் ஒளிந்துகொண்டுள்ளார்.

பின்னர் தன்னையறியாமல் தூங்கியதால் அவரை உள்ளேயே வைத்து பூட்டியுள்ளனர்.

அந்த கண்டெடினரைத் தூக்கிக்கொண்டு ஜனவரி 11ம் தேதி சித்தகோங்கிலிருந்து கிளம்பிய சரக்கு கப்பல் ஜனவரி 17ம் தேதி மலேசியாவை வந்தடைந்தது.

கண்ணாமூச்சு விளையாடி கண்டெய்னரில் தூங்கிய சிறுவன் - வேறுநாட்டில் கண்திறப்பு
நாடு கடந்த காதல்; வங்காளதேசம் முதல் இந்தியா வரை நீந்தி வந்த இளம் பெண் - என்ன நடந்தது?

6 நாட்கள் அந்த கண்டெயினரில் இருந்துள்ளார் சிறுவன். உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் அவர் எப்படி உயிருடன் இருந்தார் என்பது இப்போதும் பலருக்கு குழப்பமானதாகவே இருக்கிறது.

மூடப்பட்ட கண்டெயினர் வழியாக அவரைக் காப்பாற்றக் கோரி கூக்குரலிட்டது கூட யாருக்கும் கேட்காமல் இருந்திருக்கிறது என இந்தியா டைம்ஸ் தளம் தெரிவிக்கிறது.

கண்ணாமூச்சு விளையாடி கண்டெய்னரில் தூங்கிய சிறுவன் - வேறுநாட்டில் கண்திறப்பு
மலேசியா : சட்ட விரோதமாக தங்கியிருந்த 48 பேர் கைது - எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் தெரியுமா?

மலேசிய துறைமுகத்தில் இருந்து மீட்கப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை மீண்டும் பங்களாதேஷுக்கு அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இது மாதிரியாக கண்டெயினரில் தவறுதலாக மனிதர்கள் வருவது இது முதன்முறை அல்ல. கடந்த அக்டோபர் மாதம் மலேசியாவில் இறந்த மனிதரின் உடல் கண்டெயினரில் கண்டெடுக்கப்பட்டது.

கண்ணாமூச்சு விளையாடி கண்டெய்னரில் தூங்கிய சிறுவன் - வேறுநாட்டில் கண்திறப்பு
மகனை தூங்கவிடாமல் இரவு முழுக்க டிவி பார்க்கவைத்த பெற்றோர்; கதறி அழுத சிறுவன்- வைரல் வீடியோ

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com