கூகுள்: ஊழியர்களை தொடர்ந்து ரோபாட்களை லே ஆஃப் செய்யும் நிறுவனம் - ஏன்?

எவ்ரி டே ரோபாட்ஸ் துறையில் கிட்ட தட்ட 200 பேர் பல்வேறு பிராஜெக்ட்களில் பணியாற்றி வந்தனர். இந்த லே ஆஃப் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால், 200 பேரின் வேலையும் கேள்விக்குறி தான்!
கூகுள்: ஊழியர்களை தொடர்ந்து ரோபாட்களை பணிநீக்கம் செய்த நிறுவனம் - ஏன்?
கூகுள்: ஊழியர்களை தொடர்ந்து ரோபாட்களை பணிநீக்கம் செய்த நிறுவனம் - ஏன்?canva

கடந்த மாதம் சுமார் 12,000 ஊழியர்களை லே ஆஃப் செய்த கூகுள் நிறுவனம், அடுத்தகட்டமாக தங்கள் நிறுவனத்தில் ஈடுபடுத்தப்பட்ட ரோபாட்களை பணி நீக்கம் செய்யவுள்ளது.

கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட், எவ்ரி டே ரோபாட்ஸ் என்ற செயல்முறை துறை ஒன்றினை நடத்திவந்தது. இத்துறையில், கூகுளின் காஃபிடீரியாக்களை சுத்தம் செய்ய ரோபாட்களை உருவாக்கி அவற்றிற்கு பயிற்சியும் அளிக்கப்பட்டு வந்ததாக தி வைர்டு செய்தி தளம் கூறுகிறது.

தற்போது இந்த ரோபாட்களை லே ஆஃப் செய்ய முடிவு செய்துள்ளது அந்நிறுவனம்

பட்ஜெட் கட், கொரோனா காலத்தில் நடத்தப்பட்ட அளவுக்கு அதிகமான ஆட்சேர்ப்பு, களநிலவரத்தில் மாறுதல் போன்ற காரணங்களினால் இந்த லே ஆஃப் மேற்கொள்ளப்பட்டதாக கூகுள் சி இ ஓ சுந்தர் பிச்சை தெரிவித்திருந்தார்.

இதே காரணங்களுக்காக தான் தற்போது எந்திர ஊழியர்களையும் நிறுவனம் பணிநீக்கம் செய்கிறது என, இந்தியா டுடே அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த எவ்ரி டே ரோபாட்ஸ் துறையில் கிட்ட தட்ட 200 பேர் பல்வேறு பிராஜெக்ட்களில் பணியாற்றி வந்தனர்.

இந்த லே ஆஃப் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால், 200 பேரின் வேலையும் கேள்விக்குறி தான்!

கூகுள்: ஊழியர்களை தொடர்ந்து ரோபாட்களை பணிநீக்கம் செய்த நிறுவனம் - ஏன்?
கூகுள்: நேர்காணலின் போது துண்டிக்கப்பட்ட இணைப்பு- லே ஆஃப் செய்யப்பட்ட ஊழியர் பகிர்ந்த கதை!

சுமார் 100 ரோபாட்கள், காஃபிடீரியாக்களை சுத்தம் செய்ய, கழிவுகளை பிரித்து அகற்ற, மனிதர்களுக்கு கதவுகளை திறந்துவிட என இவற்றிக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்தன.

தவிர பெருந்தொற்றின்போது அலுவலக அறைகளின் சுத்தத்தை, தரத்தை ஆய்வு செய்யவும் இந்த எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

லே ஆஃப் செய்ய என்ன காரணம்?

என்ன தான் இந்த ரோபாட்கள் மனிதர்களின் பணிச்சுமையை குறைக்கிறது என்றாலும், இவற்றை மெயின்ட்டெயின் செய்வது சற்றே கடினமாக இருந்துள்ளது.

ரோபாட்களை பராமரிக்க அதிக செலவு ஏற்பட்டுள்ளது, ஒரு எந்திரத்தைற்கான செலவு ஆயிரம் டாலர்களை தொட்டது.

பட்ஜெட் கட் நடவடிக்கையில், ஆல்ஃபாபெட்டால் இந்த செலவை சமாளிக்க முடியவில்லை என்பதாலும், எவ்ரி டே துறையும் பொருளாதார ரீதியில் பெரிய லாபத்தை ஈட்டவில்லை என்பதனால் அத்துறையை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.

கூகுளின் இந்த முடிவு, வளர்ந்து வரும் ரோபாட்டிக்ஸ் துறையை பின்னடைவுக்கு உட்படுத்தலாம்.

பெருந்தொற்று, தொடர்ந்து ரஷ்ய உக்ரைன் போர் ஆகியவை உலகளவில் ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடி தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் ஒரு முட்டுக்கட்டையாகவே வந்துவிழுந்திருக்கிறது

கூகுள்: ஊழியர்களை தொடர்ந்து ரோபாட்களை பணிநீக்கம் செய்த நிறுவனம் - ஏன்?
கூகுள்: லே ஆஃப் செய்யப்பட்ட ஊழியர்களின் புதிய நிறுவனம் - எப்போது தொடங்குகிறது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com