
நியூயார்க் மாகாணத்தில் பஃப்பலோ நகரில் திடீரென நடந்த துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலியாகியுள்ளனர். மேலும் மூவருக்கு படுகாயங்கள் ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக 18 வயது இளைஞர் ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளனர். இறந்தவர்கள் பெரும்பாலும் கருப்பினத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த சமபவத்தை வெறி நோக்கத்துடன் தூண்டப்பட்ட குற்றமாக வகைப்படுத்தி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது காவல் துறை . மேலும் எஃப்பிஐ (அமெரிக்கப் புலனாய்வு அமைப்பு) இதை வன்முறையைத் தூண்டும் தீவிரவாத செயலெனக் குறிப்பிட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று சூப்பர் மார்கெட்டுக்குள் நுழைந்த இளைஞன், வாகனம் நிறுத்துமிடத்தில் நால்வரை சுட்டு கொன்றுள்ளார். அதன் பின் டாப்ஸ் என்ற பேரங்காடிக்குள் நுழைந்து, மேலும் தாக்குதலை தொடர்ந்ததில் மேலும் சிலர் உயிரிழந்தனர். அதில் ஒரு ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியும் அடங்குவார். இவர் பஃப்பலோ நகர் காவல்துறையில் பணியாற்றி, ஓய்வு பெற்ற பின்னர், டாப்ஸ் அங்காடியில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார்.
தாக்குதலில் ஈடுபட்ட இளைஞனை எதிர்த்து இவரும் சுட்டதில், அந்த புல்லெட் இளைஞனின் புல்லெட் ப்ரூஃப் வெஸ்ட்டில் பட, எந்த வித காயங்களின்றி அவர் தப்பித்துக்கொண்டார். துரதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதலில் காவலாளி உயிரிழந்தார் என்று காவல் ஆணையர் ஜோசப் கிராமக்லியா குறிப்பிட்டார். இந்த துப்பாக்கிச் சூட்டை தன் ஹெல்மெட்டில் பொருத்தப்பட்டிருந்த கேமெராவில் நேரலையாக ஒளிபரப்பியது பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல மணி நேரப் பயணம் செய்து வந்த அந்த இளைஞர், கருப்பினத்தவர்கள் அதிகம் வசிக்கும் பஃப்பலோ நகரை அடைந்து இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. சம்பவம் குறித்த தகவல் கிடைத்து அங்காடிக்கு விரைந்த பஃப்பலோ நகர் காவல்துறை, தாக்குதலை நிறுத்துமாறு இளைஞரிடம் பேச்சு வார்த்தை நடத்தியதில் அவர் தாக்குதலை நிறுத்தினார்.
நியூயார்க்கின் கான்க்ளின் என்ற இடத்தை சேர்ந்த பேட்டன் ஜென்ட்ரான் என்ற 18 வயது இளைஞர் தான் இந்த தக்குதலை நடத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட பேட்டனிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp