பிக்ஸி : 11 வயதில் மாதம் 1.1 கோடி சம்பாதித்த சிறுமி - வேலையை விடுவது ஏன்?

இவர் லாக்டவுனின் போது fidget spinner வணிகத்தைத் தொடங்கினார். இந்த வணிகம் வளர்ந்து மாதம் 1.1 கோடி சம்பாதித்ததாக கூறப்படுகிறது.
பிக்ஸி
பிக்ஸி Twitter

மாதம் 1.1 கோடி சாம்பாதித்து வந்தார் 11 வயது பெண் பிக்ஸி. இவர் இப்போது தனது பணியில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

யார் இந்த சிறுமி? எப்படி இந்த பணத்தை சம்பாதிக்கிறார்? ஏன் விலகுகிறார்? பார்க்கலாம்...

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிக்ஸி மக்கள் தொடர்பு நிபுணர் ராக்ஸி ஜசென்கோவின் மகளாவார்.

இவர் லாக்டவுனின் போது fidget spinner வணிகத்தைத் தொடங்கினார். இந்த வணிகம் வளர்ந்து மாதம் 1.1 கோடி சம்பாதித்ததாக கூறப்படுகிறது.

இந்த பரபரப்பான தொழிலை விட்டுவிட்டு தனது படிப்பில் கவனம் செலுத்தப்போவதாக் பிக்ஸி கூறியுள்ளார். "பிக்ஸியின் ஆன்லைன் கடையை சில காலத்துக்கு ஒதுக்கி வைத்துவிட்டு அவளது படிப்பில் கவனம் செலுத்த முடிசு செய்துள்ளோம். கடந்து 3 ஆண்டுகள் ஒரு குடும்பமாக எங்களுக்கு சிறப்பான பயணமாக இது அமைந்தது. பிக்ஸியின் கடை 2011ம் ஆண்டு தலைக்கு மாட்டும் கிளிப், போக்கள் விற்பனை செய்யும் கடையாக இருந்தது போலவே இனி இயங்கும்." என அவரது அப்பா ஊடகங்களிடம் கூறியுள்ளார்.

பிக்ஸி
அவனி சதுர்வேதி : வெளிநாட்டு போர் பயிற்சியில் பங்கேற்ற முதல் இந்திய பெண் - யார் இவர்?

மேலும் அவர் பிக்ஸிக்கு தொழில்முனைவோராக மாற இருந்த உத்வேகத்தை வெகுவாக பாராட்டினார்.

பிக்ஸி பெற்ற பெரிய வெற்றியின் காரணமாக 15 வயதில் மில்லியனராக ஓய்வு பெறுகிறார் பிக்ஸி.

11 வயதிலேயே கோடிக்கணக்கில் சம்பாதிக்க ஆரம்பித்ததால், ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்கிறார் பிக்ஸி. அவரது பிறந்தநாள் விழா ஒன்றுக்கு 23,000 யூரோ இந்திய மதிப்பில் 23 லட்சம் ரூபாய் செலவு செய்திருந்தார். மேலும் 1 லட்சத்து ஐம்பதாயிரம் யூரோ மதிப்புடைய பென்ஸ் காருக்கு சொந்தக்காரர் ஆவார்.

பிக்ஸி
அண்டார்டிகா : தெற்கு துருவக் கடலில் ஒரே ஒரு பயணம் - 10 கின்னஸ் சாதனைகள் படைத்த பெண்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com