சிறுவனை விழுங்கியதாக முதலையை கட்டிப்போட்ட கிராம மக்கள் |video

அந்த முதலை தான் சிறுவனை விழுங்கி இருக்கக் கூடும் என்று, ஆற்றிலிருந்து அதனைப் பிடித்து கரைக்கு கொண்டு வந்தனர். முதலை சிறுவனை சாப்பிட்டுவிடக் கூடாது என்பதற்காக அதன் வாயில் பெரிய கம்பு ஒன்றை சொருகியுள்ளனர்
crocodile
crocodileTwitter

குளிக்கச் சென்ற 7 வயது சிறுவனை விழுங்கியதாக, முதலையைக் கிராமவாசிகள் கட்டிப்போட்டுள்ள சம்பவம் மத்திய பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

மத்தியப் பிரதேசம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பூர் கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன் சம்பல் ஆற்றிற்குக் குளிக்கச் சென்றுள்ளான்.

நீண்ட நேரமாகியும் சிறுவனைக் காணவில்லை என அந்த ஆற்றிற்குச் சென்று அவனின் பெற்றோர் பார்த்துள்ளனர். அப்போது அந்த ஆற்றிலிருந்த முதலை மீது சந்தேகப்பட்டுள்ளனர்.

அதாவது அந்த முதலை தான் சிறுவனை விழுங்கி இருக்கக் கூடும் என்று, ஆற்றிலிருந்து அதனைப் பிடித்து கரையில் கொண்டு வந்தனர். முதலை வாயில் பெரிய கம்பு ஒன்றை சொருகியுள்ளனர்.

அதனால் பையனை முதலை கடித்துச் சாப்பிடாமல் இருக்கும் எனக் கிராமவாசிகள் எண்ணினர்.

பின்னர் முதலையின் வயிற்றைக் கிழித்து பையனை உயிருடன் மீட்க வேண்டும் என்று கிராமவாசிகள் முயற்சித்துள்ளனர்.

crocodile
முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர் - வைரலாகும் புகைப்படம்

அதற்குள் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முதலை சிறுவனை விழுங்கி இருக்காது என்றும் ஆழமான பகுதிக்கு சிறுவன் நீந்தச் சென்றதால் நீரில் மூழ்கியிருக்கலாம் என்றும் கூறி, தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

ஆனால் கிராமத்தினரோ முதலையைக் கிழிக்கும் வரை அதை விட மாட்டோம் என்று அடம் பிடித்தனர். ஆற்றிற்குத் தேடச்சென்ற குழுவும் இன்று காலை வரை பையன் கிடைக்காததால் தேடலை நிறுத்தி விட்டனர்.

சிறுவனை முதலை தான் விழுங்கியதா? இல்லை சிறுவன் உயிருடன் இருக்கிறாரா? என்பது குறித்த தகவல்கள் தற்போது வரை தெரியவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.

crocodile
Pan Slapping Contest: பேனை வைத்து மாறி மாறி அடித்துக்கொள்ளும் போட்டி- வைரல் வீடியோ

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com