பொங்கல் பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது? அதன் சிறப்புகள் என்ன?

வடமொழியில் சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பயணிப்பதை உத்திராயணம் என்றும், வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பயணிப்பதை தக்ஷனாயணம் என்றும் கூறுகிறார்கள்.
பொங்கல் பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது?
பொங்கல் பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது? Twitter

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையாகவும், கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் மகர சங்கராந்தி என்கிற பெயரில் கொண்டாடப்படும் இந்த பண்டிகை தென்னிந்தியாவில் ஒரு மிகப்பெரிய பண்டிகை என்றால் அது மிகை இல்லை.

பொதுவாக விவசாய அறுவடை திருவிழாவாகத்தான் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை மேற்கொள்ளப்படும் பூசைகளின் முக்கிய நாயகனாக சூரிய பகவான் கருதப்படுகிறார்.

சூரியனின் செங்கதிர் கிரணங்களின் உதவியினாலும் அவருடைய அருளினாலும் விவசாயம் நன்றாக செழித்து வளர்ந்து உலகில் உள்ள அனைவரும் நன்றாக இருக்க மேற்கொள்ளப்படும் பிரார்த்தனையாகவும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

ஒரு வகையில் பொங்கல் பண்டிகை இயற்கைக்கு நன்றி சொல்லும் விழாவாகவும் கருதப்படுகிறது.

வீரமும் அறிவும் செறிந்த தமிழ் குடிமக்கள் வெறுமனே இயற்கை இறைவனான சூரியனை மட்டும் ஒரு நாளில் வழிபட்டுச் செல்லாமல், தன் உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளை அடுத்த நாள் போற்றி வணங்குகின்றனர்.

அதற்கு அடுத்த நாள் காணும் பொங்கல் என்கிற பெயரிலும் கொண்டாட்டங்கள் நடைபெறும். எனவே பொங்கல் திருநாள் என்பது தமிழர்களை பொருத்தவரை மூன்று நாட்களைக் கொண்ட ஒரு கொண்டாட்டமாக கருதப்படுகிறது.

இதே பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தை ஒட்டி தமிழகத்தின் பல முக்கிய நகரங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருவதும் மாடுபிடி வீரர்கள், காளைகளோடு திமிரித் திரிவதையும் இனி அடுத்த சில நாட்களுக்கு ஊடகங்களில் பார்க்க முடியும்.

வடமொழியில் சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பயணிப்பதை உத்திராயணம் என்றும், வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பயணிப்பதை தக்ஷனாயணம் என்றும் கூறுகிறார்கள். அப்படி சூரியன் வடக்கு நோக்கி பயணிக்கும் உத்தராயண காலம் காலமும் இதே பொங்கல் பண்டிகை ஒட்டி தொடங்குகிறது.

பொங்கல் பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது?
இந்தியா: முதலில் சூரியன் உதிக்கும் பகுதி எது? - நீங்கள் செல்ல வேண்டிய 9 விசித்திர இடங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com