சென்னையில் Pre-Wedding Photoshootக்கு சிறந்த இடங்கள் இவைதானா? சூப்பர் Spots

திருமணத்தன்று எடுக்கப்போகும் புகைப்படங்களுக்கு நிகராக அதற்கு முந்தைய புகைப்பட ஷீட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்த ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட்டுக்கு ரொம்ப முக்கியமானது லொக்கேஷன்ஸ்தான். அப்படி, சென்னையில் ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட்டுக்கு ஏற்ற இடங்கள் பற்றி தான் சொல்ல போகிறோம்.
Top 8 Pre-Wedding Photoshoot Locations in Chennai
Top 8 Pre-Wedding Photoshoot Locations in Chennai Twitter

நினைவுகளை பத்திரப்படுத்த புகைப்படங்கள் நமக்கு பொக்கிஷமாக இருக்கின்றன.

சுப நிகழ்வுகள் எல்லாவற்றிலும் புகைப்படங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. குழந்தைகளின் பிறந்த நாள் தொடங்கி கல்யாணம், காது குத்து, வளைகாப்பு என எல்லா நிகழ்வுக்கும் புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றது.

இந்த புகைப்படங்களுக்காகவே சிலர் மெனக்கெட்டு பல பல தீம்களில் புகைப்படங்களை எடுத்து வருகின்றனர்.

தற்போது இருக்கும் டிரெண்ட் என்னவென்றால், திருமணத்தன்று எடுக்கப்போகும் புகைப்படங்களுக்கு நிகராக அதற்கு முந்தைய புகைப்பட ஷீட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்த ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட்டுக்கு ரொம்ப முக்கியமானது லொக்கேஷன்ஸ்தான்.

அப்படி, சென்னையில் ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட்டுக்கு ஏற்ற இடங்கள் பற்றி தான் சொல்ல போகிறோம்.

மகாபலிபுரம் கடற்கரை கோயில் & கடற்கரை

மகாபலிபுரம் கோயிலும் அதை ஒட்டிய கடற்கரையும் நீண்ட காலமாக சுற்றுலாப் பயணிகள், படப்பிடிப்பிற்கான பிரபலமான இடங்களாக இருந்து வருகின்றன. இங்கு ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் எடுக்கலாம்.

சில பிரமிக்க வைக்கும் புகைப்படங்களை எடுக்க இது ஒரு சிறந்த இடமாகும்.

கோவில் வளாகத்திற்குள் பெரிய விளக்குகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவு லைட்டிங் பயன்படுத்த திட்டமிட்டு கொள்ளுங்கள்.

சீக்ரெட் கார்டன் படப்பிடிப்பு இடம் - திருவான்மியூர்

ஜோடிகளை புகைப்படம் எடுக்க நகரத்தின் எல்லைக்குள் இருக்கும் ஒரு ஸ்பாட்டை நீங்கள் தேடுகிறீர்களானால், சீக்ரெட் கார்டன் உங்கள் சிறந்த தேர்வாகும். அவற்றில் சில நம்பமுடியாத புகைப்பட பேக் கிரவுண்ட்கள் உள்ளன. எனவே ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் முடிந்தவரை சிறந்த படங்களை எடுக்கலாம்.

Top 8 Pre-Wedding Photoshoot Locations in Chennai
சென்னை : தனியாக செல்ல கூடாத Spots - அமானுஷ்யங்கள் நிறைந்த இடங்கள் பற்றி தெரியுமா?

தக்ஷின் சித்ரா

தென்னிந்திய கலை, கட்டிடக்கலை, வாழ்க்கை முறைகள், கைவினைப்பொருட்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றை கொண்டுள்ள அருங்காட்சியகம் தான் தக்ஷிணசித்ரா.

இந்த அருங்காட்சியகம் சென்னையிலிருந்து தெற்கே 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முட்டுக்காடு என்ற இடத்தில், வங்காள விரிகுடாவைக் காணும் வகையில், இந்தியாவின் தமிழ்நாடு, மகாபலிபுரம் செல்லும் கிழக்குக் கடற்கரை சாலையில் அமைந்துள்ளது.

தக்ஷிணசித்ரா ஜோடி போட்டோஷூட்களுக்கு ஏற்ற இடமாகும்.

செம்மொழிப் பூங்கா

மகாபலிபுரத்தைப் போலவே, குடும்பங்கள், குழந்தைகள் மற்றும் தம்பதிகள் உட்பட எந்த வகையான ஃபோட்டோஷீட்டுக்கும் செம்மொழி பூங்கா ஒரு பிரபலமான இடமாகும்.

Top 8 Pre-Wedding Photoshoot Locations in Chennai
சென்னை முதல் கோவா வரை - summer வெக்கேஷனுக்கு பிளான் பண்ணக்கூடாத இடங்கள்

கோவளம்

கடற்கரை தீம்மிற்கு மெரினா கடற்கரை முதல் விருப்பமான இடமாக இருந்தால், கோவளம் இரண்டாவது விருப்பமாக இருக்க வேண்டும். ECR ஐ தேர்வு செய்தால், ஃபோட்டோஷூட்டுக்கு பல தளங்கள் உள்ளன.

மகாபலிபுரத்துடன், முதுகாடு மற்றும் கோவளம் ஆகியவை ECR இல் உள்ள முக்கிய இடங்களாகும்.

சத்ராஸ் கோட்டை

சென்னையில் உள்ள சத்ராஸ் கோட்டை, மற்றொரு வரலாற்று சிறப்புமிக்க டச்சுக் கோட்டையாகும். இந்த கோட்டை கபுள் ஃபோட்டோஷூட்டுக்கு சிறந்த இடமாகும்.

இங்கே உங்கள் படங்களை எடுத்த பிறகு, நீங்கள் உடனடியாக பக்கத்தில் இருக்கும் கடற்கரையில் சில படங்களை எடுக்கலாம்.

Top 8 Pre-Wedding Photoshoot Locations in Chennai
சென்னை: ஒரேநாளில் குழந்தைகளுடன் உற்சாகமாக சென்று வரலாம் - வீக் எண்ட் ஸ்பாட்ஸ்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
www.newssensetn.com