Narendra Modi Live : சென்னை வந்த பிரதமர் மோடியை வரவேற்ற முதல்வர் ஸ்டாலின்
விவசாயிகளின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து என்றென்றும் அவர்களுடன் துணை நிற்பவர் பிரதமர் நரேந்திர மோடி. நிலக்கரி சுரங்கங்களுக்கான டெண்டரை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது - தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை
இரண்டு நாள் பயணமாக இன்று பிற்பகல் 2.45க்கு, சென்னை வருகிறார் பிரதமர் மோடி; சென்னை விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தை திறந்து வைக்க உள்ளார்! சென்னை - கோவை இடையே ‘வந்தே பாரத்' ரயில் சேவை, தாம்பரம்-செங்கோட்டை இடையிலான விரைவு ரயில் சேவை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்
எடப்பாடி பழனிசாமிக்கு நேரம்?
இன்று சென்னை வரும் பிரதமர் மோடியை சந்திக்க, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தகவல்!
முதல்வர் சந்திரசேகர ராவ் புறக்கணிக்கிறார்
தெலங்கானாவில் பிரதமர் மோடி பங்கேற்கும் விழாவை அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் புறக்கணிக்கிறார் தெலங்கானாவில் ரூ.11,360 கோடி மதிப்புள்ள திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கவுள்ளார்
மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது
விவசாயிகளின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து என்றென்றும் அவர்களுடன் துணை நிற்பவர் பிரதமர் நரேந்திர மோடி. நிலக்கரி சுரங்கங்களுக்கான டெண்டரை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது - தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை
டிரெண்டாகும் #GoBackModi
இரண்டு நாள் பயணமாக இன்று பிற்பகல் 2.45க்கு, சென்னை வருகிறார் பிரதமர் மோடி, இதனையடுத்து ட்விட்டர் #GoBackModi டிரெண்டாகி வருகிறது.
சென்னை வந்தார் பிரதமர் மோடி!
ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி!
வரவேற்றார் முதல்வர்
சென்னை வந்த பிரதமர் மோடியை வரவேற்றார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வந்தே பாரத் ரயில் சேவை
சென்னை - கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை, பச்சை கொடி காட்டி தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!
புத்தகம் வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
காந்தியின் தமிழ்நாடு பயணம் பற்றிய புத்தகத்தை பிரதமர் மோடிக்கு வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்