
சென்னை விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார்.
பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் 22 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று பகல் 1.35 மணிக்கு ஹைதராபாத்தின் பேகம்பேட் விமான நிலையத்தில் இருந்து விமானப் படையின் தனி விமானம் மூலம் புறபட்டு மதியம் 2.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார்.
பிரதமரை, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்கவுள்ளனர். மேலும் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியை வரவேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை விமான நிலையத்தின் புதிய கட்டிடம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 தகவல்கள்
--> சென்னை விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடம், 2,20,972 சதுர மீட்டர் பரப்பளவில், தமிழ்நாடு மாநிலத்தின் விமானப் போக்குவரத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
--> இந்த விமான நிலையம் ஆண்டுக்கு 35 மில்லியன் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டது.
--> முனையத்தில் 108 இமிகிரேஷன் கவுண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
--> இந்த இமிகிரேஷன் கவுண்டர்கள், போக்குவரத்து செயல்முறையை விரைவுபடுத்துவதன் மூலம் பயணிகளுக்கான பயண அனுபவத்தை கணிசமாக மேம்படுத்தும்.
--> 100 அதிநவீன செக்-இன் கவுண்டர்களுடன் பொருத்தப்பட்டுள்ளது.
--> புதிய முனையத்தின் மேற்கூரைகள் தென்னிந்தியாவின் கோலம் வடிவங்களைப் பிரதிபலிக்கும் வகையில், மெய்சிலிர்க்க வைக்கும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
--> ஸ்கைலைட் புதிய முனையத்தின் தனித்துவமான அம்சமாகும். இயற்கையான சூரிய ஒளி மற்றும் காற்றோட்ட வசதிகள் பயணிகளுக்கு கூடுதலாக கிடைக்கும் வகையில், விமான நிலையத்தில் அதிநவீன "ஸ்கைலைட் சிஸ்டம்" அமைக்கப்பட்டுள்ளது.
--> புதிய டெர்மினலில் உள்ள 11 ஆட்டோமேட்டிக் ட்ரே ரிட்ரீவல் சிஸ்டம்ஸ் (ATRS) பயணிகள் எடுத்து செல்லும் பொருட்கள் திரையிடப்படும் . இதன் மூலம் விரைவான, பாதுகாப்பான பயண அனுபவத்தை பயணிகள் பெற முடியும்.
--> புதிய முனையம் GRIHA தரநிலைகளை பெற்றுள்ளது. அதாவது கட்டிடங்கள் மற்றும் அதன் சுற்றுச்சூழல் செயல்திறனை மதிப்பிடுவதற்காக இந்த மதிப்பீட்டு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
--> புதிய முனைய கட்டிடத்தில் திகைப்பூட்டும் பிரமாண்டமான தூண்கள் உள்ளன. அதில் பூசப்பட்டிருக்கும் கோல்டன் பெயிண்ட் புதிய முனையத்தின் ஒட்டுமொத்த வடிவமைப்பிற்கு மேலும் அழகு சேர்க்கிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust