மீசை என்கிற அந்த நாலு மயிரை வைத்துக்கொண்டு உலகெங்கும் நடந்துவரும் அழிச்சாட்டியங்கள் என்னை எப்போதும் எரிச்சலடையவே செய்திருக்கிறது. அலங்காரத்தின் ஓரம்சமாக இருந்த மீசை அதிகாரத்தின் குறியீடாக மாற்றப்பட்டுவிட்ட நிலையில் அதை வெறும் மயிர் என்று எதிர் நிலைக்குப் போய் நிறுவ வேண்டி இருந்தது.
- மீசை என்பது வெறும் மயிர் | ஆதவன் தீட்சண்யா
தேசியத்தின் பெயரால் அழிவுகள் நடக்கும்போது முடிந்தமட்டிலும் தேசத்துரோகியாக வாழ்வது அவசியம்.
சமூக அழுத்தங்களால் திணறித் தவிக்கும் மக்கள் எப்படியாயினும் இடதுசாரிகள் தலைமையில்தான் போராடி விடுதலையடைவோம் என்று ஒருபோதும் அடம் பிடித்துக் கொண்டிருப்பதில்லை.
-மீசை என்பது வெறும் மயிர்
ராணுவத்திடமிருந்து மக்களைக் காப்பாற்றுவதுதான் உலக நாடுகள் பூராவிலும் முன்னெழுந்துள்ள பெருஞ்சவால். முன்பு போரின் பெயரால் நடந்த அட்டூழியங்கள் இப்போது வளர்ச்சியின் பெயராலும் நடக்கின்றன.
பிறந்து வளர்ந்த மண் காலில் ஒட்டிக்கொள்கிறது மனதிலோ உதிர்ந்துகொண்டிருக்கிறது.
பிறந்து வளர்ந்த மண் காலில் ஒட்டிக்கொள்கிறது மனதிலோ உதிர்ந்துகொண்டிருக்கிறது.
எவ்வளவு பெருமிதம் கொண்டதாய் இருந்தாலும் ஒரு ரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்ட பிறகு ஓர் அழுகிய பிணமாகி விடுகிறதல்லவா கடந்தகாலம்?
விசாரணை இப்போது தேவியிடம் என்பதற்கு மறுதலையாக தேவி சமூகத்தை விசாரணை செய்வதாகத் தளமாற்றம் கொள்கிறது.
உன் சாதிக்கான தனித்துவ அடையாளமாக உனது உடம்பிலிருந்து எதைக் காட்டுவாய்? தோல், ரத்தம், நரம்பு, இனப்பெருக்கக் குறி... சொல் எது உன்னுடைய சாதியைச் சுட்டும் அடையாளம் ? அப்படி எதுவும் யாரிடமும் இல்லாத ஒன்றை இருப்பதாக எண்ணி கட்டியழும் போலித்தனத்தை என்றாவது ஒரு நாள் பொறியிலடித்து கேட்க வேண்டுமென்று நானும் என் தோழிகளும் நினைத்திருந்தோம். அப்படி கேட்கும் போது அது உலகத்திற்கே தெரிந்த விசயமாக மாற வேண்டும் என்பதும் எங்கள் விருப்பம். இப்போது கேட்டுவிட்டோம்.”
சாதியம் குறித்த தம் கேள்வியை எப்படி முன் வைத்தால் தேவி? அந்த கேள்வி எப்படி சமூகத்தை பதற்றம் கொள்ள வைத்தது? தம் பிள்ளைகளையே எப்படி ஒருவித வெறுமை உடனும் சந்தேகத்துடனும் பார்க்க வைத்தது?
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust